உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 6/15 பக். 32
  • பூமியின் எதிர்காலம் என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பூமியின் எதிர்காலம் என்ன?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 6/15 பக். 32

பூமியின் எதிர்காலம் என்ன?

“20-ம் நூற்றாண்டைப்போல் வேறெந்த நூற்றாண்டிலும் இந்தளவு நாகரிகமற்ற சமுதாய வன்முறை நிகழ்ந்ததில்லை, இந்தளவு சண்டைகள் மூண்டதில்லை, அகதிகளின் எண்ணிக்கையில் இந்தளவு அதிகரிப்பு ஏற்பட்டதில்லை, இந்தளவு கோடானகோடி பேர் போர்களில் கொல்லப்பட்டதில்லை, ‘பாதுகாப்புக்காக’ இந்தளவு செலவு செய்யப்பட்டதில்லை” என்று உலக ராணுவ மற்றும் சமூக செலவுகள் 1996 என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது. இந்நிலை எப்போதாவது மாறுமா?

பல நூற்றாண்டுகளுக்கு முன் கடவுள் கொடுத்த ஒரு வாக்குறுதியை அப்போஸ்தலனாகிய பேதுரு கிறிஸ்தவர்களுக்கு நினைப்பூட்டினார்: “[கடவுளது] வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) இவ்வார்த்தைகள் முதலில் ஏசாயா தீர்க்கதரிசனத்தின் பாகமாய் இருந்தன. (ஏசாயா 65:17; 66:22) பூர்வ இஸ்ரவேலர், 70 வருட சிறையிருப்புக்குப் பின்னர் பாபிலோனிலிருந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு திரும்பியபோது இந்தத் தீர்க்கதரிசனம் அதன் முதல் நிறைவேற்றத்தைக் கண்டது. “புதிய வானங்களும் புதிய பூமியும்” பற்றிய வாக்குறுதியை மறுபடியும் சொல்வதன் மூலம், இந்தத் தீர்க்கதரிசனம் இன்னும் பெரிய அளவில், அதாவது உலகளாவிய விதத்தில் நிறைவேறும் என்பதை பேதுரு காண்பித்தார்!

பூமி முழுவதிலும் நீதியான நிலைமைகளை ஏற்படுத்துவதே கடவுளுடைய சித்தம்; கிறிஸ்துவை அரசராகக் கொண்ட அவருடைய பரலோக ராஜ்யத்தின் மூலம் அது நிறைவேறும். “ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” (ஏசாயா 2:4) பூமியில் அப்படிப்பட்ட முழுமையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் எதிர்பார்க்கும்படியே இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்; பரமண்டல ஜெபம் அல்லது கர்த்தருடைய ஜெபம் என்று பொதுவாக அழைக்கப்படும் ஜெபத்திலும் அதற்காக வேண்டிக்கொள்ளும்படியே அவர் கற்றுக்கொடுத்தார். அது சொல்வதாவது: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.”—மத்தேயு 6:9, 10.

பரலோகத்தைப் போலவே நீதியாயிருக்கும் ஓர் உலகில் வாழ நீங்கள் விரும்புவீர்களா? கடவுளை அறிந்துகொள்ளவும் அவரது நீதியான வழிகளுக்கு ஏற்ப வாழவும் இருதயப்பூர்வமாய் விரும்பும் ஒவ்வொருவருக்கும் அந்த நம்பிக்கையைத்தான் பைபிள் அளிக்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்