நெஞ்சைவிட்டு நீங்காதவை
வருஷா வருஷம் தங்களுடைய நாடுகளில் நடைபெறும் கிறிஸ்தவ மாநாடுகளில் யெகோவாவின் சாட்சிகள் ஒன்றாக கூடிவருகிறார்கள். ஆன்மீகத்தில் தங்களை பலப்படுத்தும் அறிவுரைகளையும் கூட்டுறவையும் அனுபவித்து மகிழ இப்படி செய்கிறார்கள். அவர்களுடைய கூட்டங்களின் மற்ற அம்சங்களும்கூட பார்வையாளர்களுடைய மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கின்றன.
உதாரணமாக, ஜூலை 1999-ல், மொஸாம்பிக்கிலுள்ள ஆயிரமாயிரம் சாட்சிகள் “கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை” என்ற போஷாக்குமிக்க மூன்று நாள் மாவட்ட மாநாடுகளுக்காக கூடிவந்திருந்தார்கள். அங்கு வருகை தந்தவர்களில் பெரும்பாலானோர் முதன்முதலாக மாநாட்டில் கலந்துகொண்டவர்கள். மேடையிலிருந்து கேட்ட அருமையான விஷயங்கள் மட்டுமல்ல, சுற்றியிருந்த சூழலும் அவர்களுடைய மனதை கொள்ளைகொண்டது.
மபூடோ மாநாட்டு வளாகத்தில் ஒருவர் இவ்வாறு கூறினார்: “என்னுடைய வாழ்க்கையில் இவ்வளவு அழகிய இடத்தை நான் பார்த்ததே இல்லை! பாத்ரூம்களில் சோப்பும் முகம் பார்க்கும் கண்ணாடிகளும் இருந்தன, அவை சுத்தமாகவும் மணமாகவும் இருந்தன, பிள்ளைகள் போடும் கூச்சலோ சண்டையோ எதுவும் இல்லாமல் சுற்றுப்புறம் அமைதியாக இருந்தது. யாரும் ஒருவரையொருவர் நெருக்கித் தள்ளவில்லை! இளைஞர்கள் மகிழ்ச்சியோடு இருந்தார்கள், உற்சாகமூட்டும் உரையாடல்களில் ஈடுபட்டார்கள். எல்லாரும் நேர்த்தியாக உடை உடுத்தியிருந்த விதமும் என்னுடைய மனதை தொட்டது. அடுத்த முறை, இந்த மாநாட்டிற்கு என்னுடைய பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வருவேன், இந்த மாநாட்டில் கட்டாயம் கலந்துகொள்ள என்னுடைய கணவரையும் சம்மதிக்க வைப்பேன்.”
ஆம், யெகோவாவின் சாட்சிகளுடைய நேர்மை, உத்தமம், சரீர சுத்தம் யார் கண்ணிலும் படாமல் போகாது. ஏன் சாட்சிகள் வித்தியாசமாக இருக்கிறார்கள்? ஏனென்றால், பைபிளிலிருந்து தாங்கள் கற்றுக்கொண்டதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கு அவர்கள் உண்மையிலேயே முயற்சி செய்கிறார்கள். இந்த ஆண்டு அவர்களுடைய தேசிய மாநாடுகளில் அல்லது ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் வாராந்தர கூட்டங்களில் கலந்துகொண்டு நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளலாம் அல்லவா?
[பக்கம் 32-ன் படம்]
ஜாம்பியா
[பக்கம் 32-ன் படம்]
கென்யா
[பக்கம் 32-ன் படம்]
மொஸாம்பிக்