வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
“சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது” என கடவுளுடைய குமாரனைப் பற்றி கொலோசெயர் 1:16 கூறுகிறது. என்ன கருத்தில் எல்லாம் “அவருக்கென்று,” அதாவது கடவுளுடைய குமாரனாகிய இயேசுவுக்கென்று சிருஷ்டிக்கப்பட்டது?
இயேசுவைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சிருஷ்டிக்க யெகோவா தமது ஒரேபேறான குமாரனை கைத்தேர்ந்த வேலையாளாக உபயோகித்தார். (நீதிமொழிகள் 8:27-30, NW; யோவான் 1:3) ஆகவே, இந்த வேலைகளிலிருந்து குமாரன் சந்தோஷத்தைக் காண்கிறார்; இந்த கருத்தில்தான் அவை “அவருக்கென்று” உண்டாக்கப்பட்டன.
தாங்கள் பெற்றெடுக்கும் பிள்ளைகள் தங்களுக்கு சந்தோஷம் தரும்படி பெற்றோர் எதிர்பார்க்கின்றனர், பெரும்பாலும் சந்தோஷத்தை பெறுகின்றனர் என்பது நமக்கு தெரியும். அதனால்தான், பைபிள் நீதிமொழிகள் ஒன்று, ‘தகப்பன் . . . சந்தோஷம் காண்கிற புத்திரனை’ பற்றி கூறுகிறது. (நீதிமொழிகள் 3:12; 29:17; NW) அதைப் போலவே, இஸ்ரவேலர் உண்மையாய் இருந்தபோது யெகோவா தேவனும் தம் மக்களால் மகிழ்ச்சியடைந்தார். (சங்கீதம் 44:3; 119:108; 147:11; NW) நம் நாள் வரையும்கூட, உத்தமர்கள் உண்மையாய் இருக்கையில் அவர் சந்தோஷமடைகிறார்.—நீதிமொழிகள் 12:22; எபிரெயர் 10:38; NW.
ஆகவே, தமது உடன் வேலையாளான இயேசு தம்முடைய வேலைகளிலிருந்து மகிழ்ச்சி காண கடவுள் ஏற்பாடு செய்திருந்திருப்பார் என்ற முடிவுக்கு வருவது நியாயமானதே. உண்மையில், அந்த குமாரன் ‘அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தார்’ என நீதிமொழிகள் 8:31 கூறுகிறதே. ஆக இந்த கருத்தில்தான், ‘சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது’ என கொலோசெயர் 1:16 கூறுகிறது.