உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w06 4/15 பக். 32
  • பெயர் வைத்திருக்க உரிமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பெயர் வைத்திருக்க உரிமை
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
w06 4/15 பக். 32

பெயர் வைத்திருக்க உரிமை

நம் எல்லாருக்குமே பெயர் இருக்கிறது, அப்படிப் பெயர் வைத்திருக்க உரிமையும் இருக்கிறது. டஹிடி தீவில், அம்மா அப்பா யாரென்று தெரியாத அநாதைக் குழந்தைகளுக்குக்கூட ரெஜிஸ்டர் ஆபீஸ் பெயர் வைக்கிறது. அதுவும் ஒரு குடும்பப் பெயரைக்கூட வைக்கிறது.

இப்படி எல்லாருக்குமே கொடுக்கப்படுகிற இந்த அடிப்படை உரிமை ஒருவருக்கு மட்டும் கொடுக்கப்படவில்லை என்று சொல்லலாம். அவர் யாரென்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அவர்தான், ‘பரலோகத்திலும் பூமியிலுமுள்ள குடும்பங்களுக்கெல்லாம் தகப்பன்’ என்று பைபிள் சொல்கிறது. (எபேசியர் 3:14, 15, NW) இப்படி எல்லாருக்கும் தகப்பனாக இருப்பவரின் பெயரை, அதாவது கடவுளுடைய பெயரை, பைபிள் குறிப்பிடுகிறது; ஆனால் அதைப் பயன்படுத்த சிலர் மறுத்தே விடுகிறார்கள். அதற்குப் பதிலாக “கர்த்தர்,” “ஆண்டவர்” போன்ற பட்டப்பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள். அப்படியென்றால், கடவுளுடைய பெயர் என்ன? சங்கீதப் புத்தகத்தை எழுதியவர் இப்படிப் பதில் அளிக்கிறார்: ‘யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர்.’​—⁠சங்கீதம் 83:17.

19-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லண்டன் மிஷனரி சங்கத்தை சேர்ந்த மிஷனரிகள் டஹிடிக்குச் சென்றனர். அச்சமயத்தில் அங்கிருந்த பாலினேசியர்கள் பல தெய்வங்களை வழிபட்டு வந்தனர். அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் வைத்திருந்தனர்; ஓரோ, டாரோயா என்பவை முக்கியமான இரு தெய்வங்களின் பெயர்கள். பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் கடவுளை இந்தத் தெய்வங்களிலிருந்து வித்தியாசப்படுத்தி காட்டுவதற்காக அவருடைய பெயரை மிஷனரிகள் தயங்காமல் அறிவித்தனர்; ஆம், கடவுளுடைய பெயர் யெகோவா (டஹிடிய மொழியில், யேஹோவா) என்று எல்லாருக்கும் அறிவித்தனர்.

இதன் விளைவாக, அந்தப் பெயர் மிகவும் பிரபலமானது; அன்றாட உரையாடல்களிலும், கடிதங்களிலும் இடம்பெற்றது. 19-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆட்சி செய்த டஹிடிய அரசர் இரண்டாம் போமாரே இந்தப் பெயரைத் தன்னுடைய கடிதங்களில் அடிக்கடி பயன்படுத்தினார். இதற்கு ஆதாரமாக, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அவருடைய கடிதங்களில் ஒன்று டஹிடிய தீவுக்கூட்டங்களின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தை நீங்களும்கூட இங்கே படத்தில் காணலாம். கடவுளுடைய பெயரைப் பயன்படுத்த அக்காலத்து மக்கள் கொஞ்சங்கூட தயங்கவில்லை என்பதற்கு இது சான்றளிக்கிறது. அதுமட்டுமா, 1835-⁠ம் வருடம் முதன்முதலாக வெளியிடப்பட்ட டஹிடிய பைபிளில் கடவுளுடைய பெயர் ஆயிரக்கணக்கான தடவை காணப்படுகிறது.

[பக்கம் 32-ன் படம்]

அரசர் இரண்டாம் போமாரே

[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]

அரசரும் கடிதமும்: Collection du Musée de Tahiti et de ses Îles, Punaauia, Tahiti

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்