விசேஷ பொதுப் பேச்சு அழைப்பிதழ்
ஆபத்தான இந்த உலகத்திலும் நீங்கள் பாதுகாப்பாக உணரலாம்!
உலகெங்கும் 230-க்கும் மேற்பட்ட நாடுகளில் பைபிள் அடிப்படையிலான இந்தப் பொதுப் பேச்சு கொடுக்கப்படும். பெரும்பாலான இடங்களில் ஏப்ரல் 15, 2007, ஞாயிற்றுக்கிழமை அன்று இப்பேச்சு கொடுக்கப்படும். இதில் என்னென்ன விஷயங்களைத் தெரிந்துகொள்வீர்கள்? உதாரணமாக, பின்வருபவற்றைக் கவனியுங்கள்:
உலகெங்கும் கோடிக்கணக்கானோர் ஏன் பாதுகாப்பாக உணருவதில்லை?
குறிப்பாக எப்போது பாதுகாப்பு உணர்வு மறைந்தது?
உண்மையான பாதுகாப்பை எங்கே, எப்படிக் கண்டடையலாம்?
பைபிள் அடிப்படையிலான இந்த முக்கியப் பேச்சு கொடுக்கப்படுகையில் நீங்களும் வந்திருந்து, இக்கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ளுங்கள். இப்பேச்சு ஆயிரக்கணக்கான இடங்களில் கொடுக்கப்படும். பெரும்பாலும், யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் இது கொடுக்கப்படும். உங்கள் பகுதியில் வசிக்கும் யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு நேரத்தையும் விலாசத்தையும் தெரிவிப்பதில் சந்தோஷப்படுவார்கள். காலத்துக்கேற்ற, உற்சாகமூட்டும் இந்தப் பொதுப் பேச்சைக் கேட்க உங்களை அன்புடன் அழைக்கிறோம்.