உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w08 12/15 பக். 30
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • இதே தகவல்
  • மணவாழ்வில் ‘முப்புரி நூலை’ பிரிக்காதீர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • “சுத்தமான பாஷை”—சரளமாகப் பேசுகிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • திருமணம்—கடவுளின் பரிசு
    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
  • திருமணம்​—⁠அன்புக் கடவுளின் பரிசு
    ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
w08 12/15 பக். 30

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் வெளியான காவற்கோபுரம் பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:

• ‘சுத்தமான பாஷையை,’ அதாவது கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய சத்தியத்தை, நாம் எவ்வாறு சரளமாகப் பேசலாம்? (செப். 3:⁠9)

பொதுவாக, ஒரு மொழியில் சரளமாகப் பேசுவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அதையே ‘சுத்தமான பாஷையை’ சரளமாகப் பேசுவதற்கும் செய்ய வேண்டும்; அதாவது, கவனித்துக் கேட்பது, சரளமாகப் பேசுபவர்களைப் பின்பற்றுவது, பைபிள் புத்தகங்களையும் பைபிள் வசனங்களையும் மனப்பாடம் செய்வது, கற்றுக்கொண்டவற்றைத் திரும்பத் திரும்பச் சொல்வது, சத்தமாக வாசிப்பது, இலக்கணத்தை, அதாவது சத்தியத்தின் ‘மாதிரியை’ ஆராய்வது, முன்னேற்றம் செய்துகொண்டே இருப்பது, படிப்பதற்கென்று குறிப்பிட்ட நேரத்தைத் திட்டமிடுவது, தொடர்ந்து “பேசுவது” ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.​—⁠8/15, பக்கங்கள் 21-25.

• திருமண பந்தத்தைப் பொறுத்ததில் “முப்புரிநூல்” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?

“முப்புரிநூல்” என்பது அடையாள அர்த்தமுடைய வார்த்தையாகும். (பிர. 4:12) இந்த வார்த்தையை திருமண பந்தத்திற்குப் பொருத்துகையில், கணவன், மனைவி ஆகிய இருவரும் இந்நூலின் இரண்டு இழைகள்; இவர்கள் இருவரும் மைய இழையான யெகோவா தேவனோடு பின்னிப் பிணைந்துள்ளனர். கடவுளோடு இணைந்திருந்தால்தான் மணவாழ்வில் வரும் பிரச்சினைகளைச் சமாளித்து ஆனந்தமாய் இருக்கத் தேவையான ஆன்மீக பலத்தைத் தம்பதியர் பெறுவர்.​—⁠9/15, பக்கம் 16.

• எபிரெயர் 6:​2-⁠ல் சொல்லப்பட்ட ‘கைகளை வைத்தல்’ எதைக் குறிக்கிறது?

இது, கிறிஸ்தவ மூப்பர்களை நியமனம் செய்வதைக் குறிப்பதற்கு மாறாக, கடவுளுடைய சக்தியின் வரங்கள் அருளப்​படுவதற்காகக் கைகளை வைப்பதையே குறிப்பதாய்த் தெரிகிறது. (அப். 8:14–17; 19:6)​—⁠9/15, பக்கம் 32.

• பொறுப்பான ஸ்தானத்தில் இருக்கும் சகோதரர்கள் மற்றவர்களை எவ்வாறு கனம்பண்ணலாம்?

ஒரு வழியானது, தாங்கள் செய்ய விரும்பாத காரியங்களை மற்றவர்கள் செய்யும்படி சொல்லாமல் இருப்பதாகும். இன்னொரு வழியானது, மற்றவர்களிடம் எதையாவது செய்யும்படி கேட்கையில் அல்லது அவர்களுக்கு ஆலோசனை கொடுக்கையில் அதற்கான காரணங்களைச் சொல்வதாகும்.​—⁠10/15, பக்கம் 22.

• பூர்வ இஸ்ரவேலில் ஆடு மேய்த்தவர் வளைகோலைப் பயன்படுத்திய விதத்திலிருந்து ஒரு கிறிஸ்தவ மூப்பர் என்ன கற்றுக்கொள்ளலாம்?

ஆடு மேய்ப்பவர், தன்னுடைய மந்தையை வழிநடத்துவதற்கு ஒரு வளைகோலைப் பயன்படுத்தினார். ஆடுகள், தொழுவத்திற்குள் போகும்போதும் சரி வெளியே வரும்போதும் சரி, ‘கோலுக்குக் கீழாக’ செல்லும்; இப்படிச் செல்லும்போது மேய்ப்பரால் ஆடுகளை எண்ண முடியும். (லேவி. 27:32) அவ்வாறே, கிறிஸ்தவ மேய்ப்பரும் தன் கவனிப்பிலுள்ள கடவுளுடைய ஆடுகளை அறிந்திருப்பதும் எப்போதும் அவர்களுடைய சூழ்நிலைகளைத் தெரிந்திருப்பதும் அவசியம்.​—⁠11/15, பக்கம் 9.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்