உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w09 7/15 பக். 32
  • தொலைதூரம் சென்ற சத்திய விதைகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தொலைதூரம் சென்ற சத்திய விதைகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
w09 7/15 பக். 32

தொலைதூரம் சென்ற சத்திய விதைகள்

ரஷ்யாவைச் சேர்ந்த துவா குடியரசு சைபீரியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது. இதன் தெற்கிலும் கிழக்கிலும் மங்கோலியா உள்ளது. துவா மக்களில் பெரும்பாலோர் தூரதூரமாக அமைந்துள்ள ஊர்களில் வசிக்கிறார்கள்; இந்த ஊர்களுக்குச் சென்று நற்செய்தியை அறிவிப்பது அவ்வளவு எளிதல்ல. ஒரு சமயம், துவாவின் தலைநகரான கிஜிலில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது; அதில் கலந்துகொள்வதற்காகச் சிலர் துவாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்தார்கள். கிஜில் நகரில் வசிக்கும் மரீயா என்ற பயனியர் சகோதரிக்கு இவ்விஷயம் தெரியவந்தது. வந்திருப்பவர்களிடம் நற்செய்தியை அறிவிக்க தனக்குப் பொன்னான வாய்ப்பு கிடைத்துவிட்டதென்று அவர் கருதினார்.

நடந்ததை அவரே விவரிக்கிறார்: “நான் ஆசிரியையாக வேலை பார்க்கும் பள்ளியில், போதைப்பொருள் மற்றும் மதுபான துர்ப்பிரயோகம் பற்றிய கருத்தரங்கு நடக்கவிருந்தது. துவாவின் தொலைதூர ஊர்களிலிருந்து ஆசிரியர்கள், மனநல நிபுணர்கள், குழந்தைநல ஆய்வாளர்கள் என ஏறக்குறைய 50 பேர் அதில் கலந்துகொள்ள வந்திருந்தார்கள்.” மரீயாவுக்கு அது ஓர் அரிய வாய்ப்பாக இருந்தபோதிலும், பெரிய சவாலாகவும் இருந்தது. காரணத்தை அவரே சொல்கிறார்: “நான் கூச்ச சுபாவமுள்ளவள், அதனால் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதை நினைத்தபோது எனக்கு ரொம்பவே தயக்கமாக இருந்தது. பயமில்லாமல் தைரியமாகச் சாட்சிகொடுக்க உதவுமாறு யெகோவாவிடம் ஜெபித்தேன்.” அதற்குப் பலன் கிடைத்ததா?

மரீயா தொடர்கிறார்: “ஃபோபியா எனப்படும் அச்ச நோய் பற்றிய விழித்தெழு! பத்திரிகை ஒன்று என்னிடம் இருந்தது. ‘இதை மனநல நிபுணர் ஒருவருக்குக் காண்பித்தால் உடனே வாங்கிக்கொள்வார் என்று நினைத்து, பள்ளிக்கு எடுத்துச் சென்றேன். அன்று கருத்தரங்கிற்காக வந்திருந்த ஆசிரியர்களில் ஒருவர் பள்ளியிலிருந்த என் அலுவலகத்திற்கு வந்தார்; அவரிடம் அந்தப் பத்திரிகையைக் காட்டினேன். ஆர்வத்தோடு வாங்கிக்கொண்டார். சொல்லப்போனால், அவருக்கும் ஒருவித அச்ச நோய் இருப்பதாகச் சொன்னார். அடுத்த நாள், இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள், தொகுப்பு 1-ஐ அவரிடம் கொடுத்தேன். அதையும் ஆசையோடு வாங்கிக்கொண்டார். அவருடைய ஆர்வத்தைப் பார்த்த நான் மற்ற ஆசிரியர்களுக்கும் ஆர்வம் இருக்குமென்று நினைத்தேன். ஆகவே, இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகங்களையும் வேறு புத்தகங்களையும் ஓர் அட்டைப்பெட்டி நிறைய பள்ளிக்கு எடுத்துச் சென்றேன்.” சிறிது நேரத்தில் அத்தனை புத்தகங்களும் ‘பறந்துவிட்டன.’ அதன்பின், “அந்த ஆசிரியையின் சக பணியாளர்கள் பலர், ‘இந்தப் புத்தகங்களையெல்லாம் யார் கொடுக்கிறார்கள்? எங்களுக்கும் வேண்டும்’ என்று என்னிடமே வந்து கேட்டார்கள்.” ஆம், சரியான ஆளிடம்தான் வந்திருந்தார்கள்!

கருத்தரங்கின் கடைசி நாள் சனிக்கிழமை, மரீயாவுக்கு விடுமுறை நாளாக இருந்தது. அதனால், தன்னுடைய அலுவலகத்திலிருந்த மேஜைகள்மீது பிரசுரங்களையெல்லாம் பரப்பி வைத்துவிட்டு அருகே ஒரு பலகையில், ‘அன்பான ஆசிரியர்களே! உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் தேவையான பிரசுரங்களை நீங்கள் இங்கிருந்து தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். இந்தப் பிரசுரங்கள், உங்கள் வேலையில் வெற்றிகாண வழிகாட்டும், உங்கள் குடும்ப பந்தத்தைப் பலப்படுத்த உதவும்!’ என்று எழுதிவிட்டுச் சென்றார். பின்பு என்ன நடந்தது? மரீயா சொல்கிறார்: “அன்று என் அலுவலகத்திற்குப் போய்ப் பார்த்தபோது முக்கால்வாசிப் பிரசுரங்கள் தீர்ந்துபோயிருந்தன. இன்னும் நிறையப் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் அங்கு வைப்பதற்கு உடனே ஏற்பாடு செய்தேன்.” கருத்தரங்கு முடிவதற்குள் 380 பத்திரிகைகளையும், 173 புத்தகங்களையும், 34 சிற்றேடுகளையும் மரீயா அளித்திருந்தார். கருத்தரங்கிற்காக வந்திருந்தவர்கள் ஒதுக்குப்புறப் பகுதிகளிலிருந்த தங்கள் ஊர்களுக்குத் திரும்பிச் சென்றபோது, அந்தப் பிரசுரங்களும் அவர்களோடு கூடவே சென்றன. மரீயா சொல்கிறார்: “சத்திய விதைகள் தொலைதூரப் பகுதிகளுக்குச் சென்றதை நினைக்கும்போது எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது, தெரியுமா!”—பிர. 11:6.

[பக்கம் 32-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ரஷ்யா

துவா குடியரசு

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்