பொருளடக்கம்
ஏப்ரல் 15, 2011
படிப்பு இதழ்
படிப்புக் கட்டுரைகள்:
மே 30, 2011–ஜூன் 5, 2011
மிகுந்த பொறுப்போடு யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்
பக்கம் 9
பாட்டு எண்கள்: 43, 10
ஜூன் 6-12, 2011
நம் தீர்மானங்கள் கடவுளுக்குப் புகழ் சேர்க்க...
பக்கம் 13
பாட்டு எண்கள்: 2, 9
ஜூன் 13-19, 2011
‘கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களால்’ அவரை மகிமைப்படுத்துங்கள்
பக்கம் 18
பாட்டு எண்கள்: 25, 11
ஜூன் 20-26, 2011
கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடக்கிறீர்களா?
பக்கம் 23
பாட்டு எண்கள்: 6, 48
படிப்புக் கட்டுரைகளின் நோக்கம்
படிப்புக் கட்டுரை 1 பக்கங்கள் 9-13
தங்கள் பொறுப்புகளுக்கு அந்தளவு கவனம் செலுத்தாத இந்த உலகத்தில் கிறிஸ்தவர்கள் அவற்றிற்கு முக்கிய கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, யெகோவாவை வழிபடும் விஷயத்தில் இது மிக முக்கியம். கிறிஸ்தவர்களாக நம்முடைய பொறுப்புகளைச் சமநிலையோடும் பைபிளுக்கு இசைவாகவும் எப்படிக் கையாள வேண்டும் என்பதை இந்தக் கட்டுரை விளக்கும்.
படிப்புக் கட்டுரை 2 பக்கங்கள் 13-17
தீர்மானங்களை எடுக்க அநேகர் கஷ்டப்படுகிறார்கள். நல்ல தீர்மானங்களை எடுக்க கற்றுக்கொள்வது ஏன் அவசியம் என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை நமக்கு உதவும். கடவுளுக்குப் புகழ் சேர்க்கும் தீர்மானங்களை எடுப்பதற்கு உதவும் சில நடைமுறை படிகளைப் பற்றியும் இது சிந்திக்கும்.
படிப்புக் கட்டுரைகள் 3, 4 பக்கங்கள் 18-27
‘கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்கள்’ யாவை? அவற்றை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? ஏன் வளர்த்துக்கொள்ள வேண்டும்? இந்த ஒன்பது குணங்களைப் பற்றிச் சிந்திக்கையில் இக்கேள்விகளுக்கான பதில்களைப் பெறுவீர்கள். அநேகருக்குப் பயனுள்ளதாய் இருக்கும் நடைமுறை ஆலோசனைகளும் இந்தக் கட்டுரைகளில் உள்ளன.
இதர கட்டுரைகள்
3 கடவுள் வழிநடத்துவதை உணர்கிறீர்களா?
6 நேர்மையற்ற உலகில் நேர்மையாய் வாழ வழி
28 உங்களுக்கு நினைவிருக்கிறதா?
29 நான் பெற்ற அளவிலா ஆசீர்வாதங்கள்