உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w14 10/1 பக். 3
  • அதிகரிக்கும் கஷ்டங்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அதிகரிக்கும் கஷ்டங்கள்!
  • கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • இதே தகவல்
  • நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்?
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • தீமையை கடவுள் ஏன் அனுமதிக்கிறார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • கடவுள் ஏன் நம்மை துன்பப்பட அனுமதிக்கிறார்?
    விழித்தெழு!—2004
  • நம்முடைய துன்பங்களுக்குக் கடவுள்தான் காரணமா?
    பைபிள் தரும் பதில்கள்
மேலும் பார்க்க
கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
w14 10/1 பக். 3

அட்டைப்பட கட்டுரை | நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்?

அதிகரிக்கும் கஷ்டங்கள்!

தாங்க முடியாத துக்கத்தில் தவிக்கும் குடும்பத்தார்

ஸ்வேதாa என்ற பெண் பங்களாதேஷில் உள்ள தாகாவில் வாழ்ந்து வந்தார்; அவருக்கு வயது 35. எல்லோருக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும், மற்றவர்களிடம் அன்பாகவும் அக்கறையாகவும் நடந்துகொள்வார். கடின உழைப்பாளியாகவும் ஒரு நல்ல மனைவியாகவும் இருந்தார். கடவுளைப் பற்றி தனக்குத் தெரிந்ததை மற்றவர்களிடம் சொல்வார். திடீரென ஒரு நாள் அவரை ஒரு நோய் தாக்கியது, ஒரே வாரத்தில் அவர் இறந்துவிட்டார். அவருடைய குடும்பத்தாரும் நண்பர்களும் அப்படியே இடிந்துபோய்விட்டார்கள்!

ஜேம்ஸும் அவருடைய மனைவியும் 30 வயதைக் கடந்த இளம் தம்பதி. ஸ்வேதாவை போலவே இவர்களும் நல்ல பெயர் எடுத்திருந்தார்கள். தங்கள் நண்பர்களைச் சந்திக்க, நியு யார்க்கிலிருந்து ஐக்கிய மாகாணத்தின் மேற்கு கடலோரப் பகுதிக்குப் போனார்கள். போனவர்கள், வீடு திரும்பவே இல்லை. ஒரு பயங்கர கார் விபத்தில் இருவரும் பலியானார்கள். அவர்களுடைய குடும்பத்தாராலும், நண்பர்களாலும் இதை ஜீரணிக்கவே முடியவில்லை!

இதுபோன்ற சோகச் சம்பவங்கள் நம்மைச் சுற்றியும் நடக்கின்றன. போரில், பொது மக்களும் ராணுவ வீரர்களும் சாகிறார்கள். வன்முறையாலும் குற்றச்செயலினாலும் அப்பாவி ஜனங்கள் பாதிக்கப்படுகிறார்கள். விபத்துகளும் நோய்களும் மக்களின் வயதையோ அந்தஸ்தையோ பார்ப்பதில்லை. இயற்கை பேரழிவுகள் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பார்க்காமல் எல்லோரையும் ஒட்டுமொத்தமாக வாரிக்கொண்டு போகிறது. எங்கு பார்த்தாலும் அநீதியும், பாரபட்சமும், பாகுபாடும்தான் நிறைந்திருக்கின்றன. ஒருவேளை நீங்களும் இவற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

எனவே, நம் மனதில் இதுபோன்ற கேள்விகள் வருகின்றன:

  • நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்?

  • இதற்குக் கடவுள்தான் காரணமா?

  • பேரழிவுகள் தற்செயலாக நடக்கின்றனவா, அல்லது மனிதர்கள்தான் அதற்குக் காரணமா?

  • இவை முன்ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவுகளா?

  • கடவுள் சர்வ சக்தியுள்ளவர் என்று சொல்கிறார்களே, அப்படியென்றால் அவர் ஏன் நல்லவர்களைக் காப்பாற்றுவதில்லை?

  • பிரச்சினைகளும் கஷ்டங்களும் இல்லாத வாழ்க்கை வருமா?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்வதற்குமுன் இரண்டு விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்: ஏன் கெட்ட காரியங்கள் நடக்கின்றன? இதற்கு கடவுள் என்ன செய்யப் போகிறார்? (w14-E 07/01)

a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்