தீமையை கடவுள் ஏன் அனுமதிக்கிறார்?
அ ங்கு இங்கு என்றில்லாமல் எங்கும் தீமையும் துயரமும் புரையோடியிருப்பதை நீங்கள் காணலாம். அப்பாவி மக்களையும் ராணுவ வீரர்களையும் போர்கள் காவுகொள்கின்றன. குற்றச்செயலும் வன்முறையும் அன்றாட சம்பவங்களாகிவிட்டன. சமீபத்தில், ஒருவேளை நீங்கள்கூட பாரபட்சத்திற்கோ அநியாயத்திற்கோ பலியாகியிருக்கலாம். நீங்கள் பார்த்ததையும் பட்டபாட்டையும் வைத்து நீங்கள் இவ்வாறு கேட்டிருக்கலாம்: ‘தீமையை கடவுள் ஏன் அனுமதிக்கிறார்?’
இந்தக் கேள்வி ஒன்றும் புதிதல்ல. சுமார் 3,600 வருடங்களுக்கு முன்னால், கடவுளின் உண்மையுள்ள ஊழியரான யோபு, “தீயோர் வாழ்வதேன்?” என்று கேட்டார். (யோபு 21:7, பொது மொழிபெயர்ப்பு) தனது சொந்த ஜனங்கள் இழைத்த தீமையால் மனம் வெறுத்துப்போன எரேமியா தீர்க்கதரிசி சுமார் 2,600 வருடங்களுக்கு முன்னால் இவ்வாறு கேட்டார்: “தீயோரின் வாழ்வு வளம் பெறக் காரணம் என்ன? நம்பிக்கைத் துரோகம் செய்வோர் அமைதியுடன் வாழ்வது ஏன்?” (எரேமியா 12:1, பொ.மொ.) கடவுள் நீதியுள்ளவர் என்பதை யோபுவும் எரேமியாவும் அறிந்திருந்தார்கள். என்றாலும், தீமை இவ்வளவு அதிகரித்திருப்பது ஏன் எனக் கேட்டார்கள். ஒருவேளை உங்களுக்கும்கூட இது புரியாத புதிராக இருக்கலாம்.
தீமைக்கும் துயரத்திற்கும் சிலர் கடவுளைச் சாடுகிறார்கள். மற்றவர்களோ, ‘கடவுள் எல்லாம் வல்லவராக, நீதியுள்ளவராக, அன்பானவராக இருந்தால் தீமைக்கும் துயரத்திற்கும் அவர் ஏன் முடிவு கட்டவில்லை? இன்றுவரை தீமை தொடர அவர் ஏன் அனுமதித்திருக்கிறார்?’ என்று கேட்கிறார்கள். இந்தக் கேள்விகளுக்கும் இன்னும் முக்கியமான பிற கேள்விகளுக்கும் பின்வரும் கட்டுரை பதிலளிக்கும்.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
AP Photo/Adam Butler