பொருளடக்கம்
டிசம்பர் 26, 2016–ஜனவரி 1, 2017
4 தினமும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொண்டே இருங்கள்!
உற்சாகம் தருவதில் யெகோவாவும் இயேசுவும் மிகச் சிறந்த முன்மாதிரிகள். அப்போஸ்தலன் பவுலும் தன்னுடைய சகோதரர்களை உற்சாகப்படுத்தினார். நாமும் இவர்களைப் பின்பற்றினால், வீட்டிலும் சரி, ராஜ்ய மன்றத்திலும் சரி, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்த முடியும், ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டவும் முடியும்.
ஜனவரி 2-8, 2017
9 பைபிளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல்
ஜனவரி 9-15, 2017
14 பைபிளை நீங்கள் உயர்வாக மதிக்கிறீர்களா?
பின்வரும் கேள்விகளுக்கான பதில்களை இந்த இரண்டு கட்டுரைகளில் பார்ப்போம்: யெகோவாவின் சாட்சிகள் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பார்கள் என்று ஏன் எதிர்பார்க்கலாம்? நாம் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதற்கு பைபிள் எப்படி உதவுகிறது? நாம் எப்படி யெகோவாவுக்கு உண்மையாக இருக்கலாம்? அவருடைய அமைப்பின் மூலம் அவர் கொடுக்கிற வழிநடத்துதலை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
ஜனவரி 16-22, 2017
21 இருளிலிருந்து வெளியே வர அழைக்கப்பட்டிருக்கிறோம்!
ஜனவரி 23-29, 2017
26 அவர்கள் பொய் மதத்திலிருந்து விலகினார்கள்!
கடவுளுடைய மக்கள் எப்போது பாபிலோனின் கட்டுப்பாட்டுக்குள் போனார்கள் என்றும், எப்போது அதிலிருந்து விடுதலை ஆனார்கள் என்றும் இந்தக் கட்டுரைகளில் பார்ப்போம். அதோடு, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள எப்படிக் கடினமாக உழைத்தார்கள் என்றும், பொய் மதத்தோடு எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதில் பைபிள் மாணாக்கர்கள் எப்படி உறுதியாக இருந்தார்கள் என்றும் பார்ப்போம்.