உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w17 மே பக். 30
  • எளிமையான வாழ்க்கை தரும் சந்தோஷம்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எளிமையான வாழ்க்கை தரும் சந்தோஷம்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சவால்களும் சந்தோஷமான செய்தியும்
  • மிகப் பெரிய சந்தோஷம்
  • தானியேலுக்கு அருமையான வெகுமதி—யெகோவா உறுதியளிக்கிறார்
    தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்!
  • தானியேல் புத்தகம்—உங்களுக்கே
    தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்!
  • கடவுளது தூதுவர் தந்த பலம்
    தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்!
  • தானியேல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
w17 மே பக். 30
பனாமாவில் டானியேலும் மிரியமும் ஒருவரிடம் பிரசங்கிக்கிறார்கள்

எளிமையான வாழ்க்கை தரும் சந்தோஷம்!

டானியேலுக்கும் மிரியமுக்கும் செப்டம்பர் 2000-ல் கல்யாணம் நடந்தது. ஸ்பெயினிலுள்ள பார்சிலோனாவில் அவர்கள் வசதியாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். “நாங்க நல்ல வேலையில இருந்ததால, பெரிய ஹோட்டல்கள்ல சாப்பிட்டோம், வெளிநாடுகளுக்குப் போனோம், ஆடம்பரமான உடைகளை உடுத்துனோம். தவறாம ஊழியமும் செஞ்சோம்” என்று டானியேல் சொல்கிறார். ஆனால், அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது!

2006-ல் நடந்த மாவட்ட மாநாட்டில் கேட்ட ஒரு பேச்சு, டானியேலை ஆழமாக யோசிக்க வைத்தது. “‘கொல்லப்படுவதற்காக இழுத்துச் செல்லப்படுகிறவர்கள்,’ முடிவில்லாத வாழ்வு என்ற பாதையில் நடக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோமா” என்ற கேள்வி அந்தப் பேச்சில் கேட்கப்பட்டது. (நீதி. 24:11) நாம் சொல்லும் பைபிள் செய்தியில் மற்றவர்களுடைய வாழ்க்கை அடங்கியிருப்பதால், அதைப் பற்றி பிரசங்கிக்கிற பொறுப்பு நமக்கு இருக்கிறது என்று அந்தப் பேச்சில் விளக்கப்பட்டது. (அப். 20:26, 27) “யெகோவாவே என்கிட்ட பேசுற மாதிரி இருந்துச்சு!” என்று டானியேல் சொல்கிறார். யெகோவாவின் சேவையில் இன்னும் நிறைய செய்யும்போது, நம் சந்தோஷம் அதிகமாகும் என்றும் அந்தப் பேச்சில் சொல்லப்பட்டது. தன் மனைவி மிரியம் ஏற்கெனவே பயனியர் ஊழியத்தை ஆரம்பித்திருந்ததையும், அதனால், அவர் நிறைய ஆசீர்வாதங்களை அனுபவிப்பதையும் டானியேல் பார்த்ததால், அந்தப் பேச்சில் சொல்லப்பட்ட விஷயம் எவ்வளவு உண்மை என்பது அவருக்குப் புரிந்திருந்தது.

அந்தப் பேச்சு டானியேலை யோசிக்க வைத்தது. அதனால், தன் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் செய்ய இதுதான் சரியான சமயம் என்று அவர் நினைத்தார். வேலை நேரத்தைக் குறைத்துக்கொண்டு, பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தார். தானும் தன் மனைவி மிரியமும் தேவை அதிகமுள்ள இடத்தில் பிரசங்கித்தால், எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்றும் யோசித்துப் பார்த்தார்.

சவால்களும் சந்தோஷமான செய்தியும்

மே 2007-ல், டானியேலும் மிரியமும் வேலையை விட்டுவிட்டு, அவர்கள் ஏற்கெனவே ஒருமுறை போயிருந்த பனாமாவுக்கு மாறிப்போனார்கள். கரீபியன் கடலில் இருக்கும் போகாஸ் டெல் டோரோ தீவுக்கூட்டம்தான் அவர்களுடைய புது பிராந்தியம்! அந்தத் தீவுக்கூட்டத்தில் ஏராளமான தீவுகள் இருந்தன. என்கபி என்ற பழங்குடியினர்தான் அங்கே பெரும்பாலும் வாழ்கிறார்கள். தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை வைத்து 8 மாதங்கள்வரை பனாமாவில் தங்கலாம் என்று டானியேலும் மிரியமும் முடிவு செய்திருந்தார்கள்.

அந்தத் தீவுகளில் அவர்கள் படகிலும் சைக்கிளிலும் பயணம் செய்தார்கள். கொளுத்தும் வெயிலில், ஒரு செங்குத்தான மலையில், சுமார் 30 கி.மீ. (20 மைல்) தூரம் முதல் முதலில் சைக்கிளில் போனது அவர்களுக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது! டானியேல் ரொம்பவே களைத்துப்போனதால், அவர் மயங்கி விழுமளவுக்குப் போய்விட்டார். ஆனால், அவர்கள் சந்தித்த என்கபி மக்கள் அவர்களை நன்றாக உபசரித்தார்கள். அதுவும் அந்த மக்களுடைய மொழியில் சில வார்த்தைகளைக் கற்றுக்கொண்ட பிறகு, அவர்களை நன்றாக உபசரித்தார்கள். டானியேலும் மிரியமும் சீக்கிரத்திலேயே 23 பைபிள் படிப்புகளை ஆரம்பித்தார்கள்.

அவர்களிடமிருந்த பணமெல்லாம் தீர்ந்த பிறகு என்ன நடந்தது? “கண்ணீரோட, ஸ்பெயினுக்கு திரும்பிப் போறத பத்தி யோசிக்க ஆரம்பிச்சோம். பைபிள் படிப்புகளை விட்டுட்டு போறத பத்தி நினைச்சப்போ ரொம்ப கவலையா இருந்துச்சு” என்கிறார் டானியேல். ஆனால் ஒரு மாதத்துக்குப் பிறகு, ஒரு சந்தோஷமான செய்தி அவர்களுக்கு வந்தது. அதைப் பற்றி மிரியம் இப்படிச் சொல்கிறார்: “விசேஷ பயனியர்களா சேவை செய்றதுக்கான அழைப்பு எங்களுக்கு வந்துச்சு. நாங்க இருந்த இடத்திலயே தொடர்ந்து ஊழியம் செய்ய முடிஞ்சத நினைச்சு ரொம்ப சந்தோஷப்பட்டோம்!”

மிகப் பெரிய சந்தோஷம்

அமைப்பு செய்த மாற்றங்களால், டானியேலும் மிரியமும் 2015-லிருந்து ஒழுங்கான பயனியர்களாகச் சேவை செய்ய வேண்டியிருந்தது. அப்போது, சங்கீதம் 37:5-ல் இருக்கிற இந்த வாக்குறுதியில் அவர்கள் நம்பிக்கை வைத்தார்கள்: “உன் வழியை யெகோவாவிடம் ஒப்படைத்துவிடு. அவரையே சார்ந்திரு, அவர் உனக்காக எல்லாவற்றையும் செய்வார்.” ஒழுங்கான பயனியர்களாகச் சேவை செய்ய அவர்கள் வேலைக்குப் போனார்கள். பனாமா, பாராக்வாஸ் என்ற இடத்திலுள்ள ஒரு சபையில் அவர்கள் இன்று சேவை செய்கிறார்கள்.

“ஸ்பெயின விட்டு கிளம்புறதுக்கு முன்னாடி, எங்களால எளிமையா வாழ முடியுமானு யோசிச்சோம். ஆனா இன்னைக்கு, முக்கியமான விஷயங்கள் எதுலயும் எங்களுக்கு குறையே இல்ல” என்று டானியேல் சொல்கிறார். அவர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய சந்தோஷம் என்ன? “யெகோவாவ பத்தி தெரிஞ்சிக்க தாழ்மையுள்ள மக்களுக்கு சொல்லித்தர்றதுல இருக்கிற சந்தோஷத்த வேற எந்த விஷயத்தோடும் ஒப்பிடவே முடியாது” என்று அவர்கள் சொல்கிறார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்