தெய்வீக ஞானத்துக்காக நீங்கள் தேடுகிறீர்களா?
1 “புதையல்களைத் தேடுவதுபோல் தொடர்ந்து தேடு” என்பதே “தெய்வீக நீதி” மாவட்ட மாநாட்டின் இரண்டாவது நாளன்று கொடுக்கப்பட்ட உந்துவிக்கும் பேச்சின் தலைப்பாக இருந்தது. நாம் கேட்டதைப் பின்பற்றுகிறோமா? ஞானத்தின் புதையல்களுக்காக அதிக ஊக்கமாக தேடும் ஆட்களாக இருப்பதற்கு பிரயாசப்படுகிறோமா?—நீதி. 2:1-6.
2 பைபிளை நாம் அபூர்வமாக வாசிக்கிறவர்களாக இருந்தால் அல்லது காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை வாசிப்பதை பொதுவில் தவறினோமானால் நாம் ஊக்கங் குன்றிய புதையல் தேடுபவராக இருப்போம். பேச்சுகளைத் தயாரிக்கையில், பைபிள் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அல்லது பிரச்னைகளுக்கு தீர்வுகளை நாடுகையில் கடவுளுடைய வார்த்தையில் விலைமதிப்பற்ற ஞானத்தின் இரத்தினக் கற்களுக்காக தேடுகிறோமா? பைபிளின் இரத்தின கற்களை கண்டுபிடிப்பதற்காக ஆராய்ச்சியிலும் தியானத்திலும் நேரம் செலவழிக்கப்படுவது அவசியம், ஆனால் அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி பெரிது!—நீதி. 3:13-18.
3 இப்பொழுது நாம் வேதவசனங்களின் பேரில் உட்பார்வை, என்ற புதிய ஆங்கில பிரசுரத்தையும் அத்துடன் இன்டெக்ஸ், கன்கார்டன்ஸ், ஒத்துவாக்கிய பைபிள் ஆகியவற்றையும் நம்முடைய தேவராஜ்ய நூல் நிலையத்திலுள்ள மற்ற முக்கிய பிரசுரங்களையும் பயன்படுத்தலாம். “தேவனுடைய ஆழங்களை” தேடுவதற்காக நமக்கு தேவைப்படும் உதவிகளை யெகோவா நமக்கு ஆ, எவ்வளவு தாராளமாய் கொடுத்திருக்கிறார்!—1 கொரி. 2:10.
4 நம்முடைய ஆவிக்குரிய ஆரோக்கியம் தெய்வீக ஞானத்துடன் நேரிடையாக சம்பந்தப்பட்டிருக்கிறது. நமது மாநாட்டில் ஞாயிறு காலையன்று “வியாதிப்பட்டிருக்கும் ஓர் உலகில் ஆவிக்குரிய ஆரோக்கியத்தைக் காத்துவருதல்” என்ற பேச்சில் அநேக சிறந்த யோசனைகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. மாம்சத்தின் பலவீனம் உலகத்தின் செல்வாக்குகள், பிசாசின் தந்திரங்கள் ஆகியவற்றினால் ஏற்படும் ஆவிக்குரிய வியாதிகளை எப்படி தவிர்க்கலாம் என்பது உங்களுக்கு நினைவிலிருக்கிறதா? படிப்பது, கூட்டங்களுக்குச் செல்வது, அங்கே பங்கு பெறுவது, வெளி ஊழியத்தில் முழுமையாக பங்கைக் கொண்டிருப்பது ஆகியவற்றை அசட்டை செய்யாதிருப்பதன் மூலம் நம்முடைய ஆவிக்குரிய ஆரோக்கியத்தை நாம் கட்டியமைக்கவும் தொடர்ந்து காத்துக்கொள்ளவும் கூடும் என்று மாநாட்டு பேச்சாளர் சுட்டிக் காட்டினார். கெட்ட சகவாசங்களையும் கீழ்த்தரமான உலக பொழுதுபோக்குகளையும் தவிர்ப்பது அதோடு “ஆரோக்கியமான வசனங்களை . . . ஒப்புக்கொள்ளாத” ஆட்களை தவிர்ப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதானது ஆரோக்கியமான விசுவாசத்தைக் காத்துக்கொள்வதற்கு நமக்கு உதவி செய்யும்.—1 தீமோ. 6:3, 4; தீத்து 1:13.
5 “தெய்வீக நீதி” மாவட்ட மாநாட்டில் கற்றுக்கொண்ட குறிப்புகளை நாம் பின்பற்றுகையில் கிறிஸ்தவ கூட்டங்களில் நாம் எதைக் கேட்கிறோமோ அதற்குரிய சிந்தனையை செலுத்துவதற்கு நாம் தீர்மானமாயிருப்போமாக. இவ்வாறாக, கூடுதலான தெய்வீக ஞானத்தையும் பகுத்துணர்வையும் அடைவோமாக.—2 தீமோ. 2:7.