சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
ஏப்ரல் 10-ல் துவங்கும் வாரம்
பாட்டு 209 (90)
7 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும். இந்தச் சனி மற்றும் ஞாயிறு அன்று வெளி ஊழியத்தில் முழுமையான பங்கைக் கொண்டிருப்பதற்கு போதுமான பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ளும்படி உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை அவசரமாய் அறிவியுங்கள்.” கட்டுரையில் கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. ஏப்ரல் மாத விசேஷ திட்டத்தின்போது கூடுதலான வெளி ஊழிய சேவைக்காக கூடும் நேரத்தையும் இடங்களையும் சபையாருக்குத் தெரியப்படுத்தலாம். பாரா 4-ல் உள்ள தகவலை சார்ந்து அனுபவமுள்ள ஒரு பிரஸ்தாபி பிரசங்கத்தை நடித்துக் காட்டும்படி செய்யுங்கள். நேரம் அனுமதிக்குமானால் இடக்குறிப்பு கெடுக்கப்பட்டிருக்கும் வேத வசனங்களை கலந்தாலோசியுங்கள்.
18 நிமி: “தெய்வீக போதனைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் நன்மைபெறுதல்.” முதல் விசேஷ மாநாடு தின நிகழ்ச்சிநிரலுக்கு உடன்பாடான பிரதிபலிப்பை சிறப்பித்துக் காட்டக்கூடியதும் மற்றும் புதிய நிகழ்ச்சிநிரலுக்கு எதிர்பார்ப்பை காட்டக்கூடியதுமான குடும்ப சம்பாஷணை.
பாட்டு 3 (33), முடிவு ஜெபம்.
ஏப்ரல் 17-ல் துவங்கும் வாரம்
பாட்டு 43 (103)
12 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையை சேர்த்துக்கொள்ளுங்கள். சங்கம் பெற்றுக்கொண்ட நன்கொடைகளுக்கு அனலான போற்றுதலைத் தெரிவியுங்கள். “யெகோவாவின் சாட்சிகளாக நமது அடையாளம்” என்ற கட்டுரைக்கு கவனத்தைத் திருப்புங்கள்.
20 நிமி: “மே மாதத்தில் நீங்கள் துணைப்பயனியர் செய்யக்கூடுமா?” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. குடும்ப கடமைகளை நிறைவேற்றிக் கொண்டே அல்லது முழு நேரமும் உலகப் பிரகாரமான தொழிலை செய்துகொண்டே சபையில் ஏற்கெனவே துணைப்பயனியர் செய்தவர்களிடமிருந்து நடைமுறையான குறிப்புகளை கேளுங்கள்.
13 நிமி: மே மாதத்தில் துணைப்பயனியர் செய்ய திட்டமிட்டிருப்பவர்களைப் பேட்டிகாணுங்கள். அவர்கள் எவ்வாறு தங்களுடைய அட்டவணையை ஒழுங்குபடுத்தினார்கள். இந்த மே மாதம் ஏன் பயனியர் செய்வதற்கு சிறந்த மாதம் என்று கேளுங்கள். அதற்காக உடனடியாக விண்ணப்பிக்கும்படி உற்சாகப்படுத்துங்கள். அந்தச் சேவைக்காக இப்பொழுதே விண்ணப்பிப்பது, மற்றவர்களுடன் சேர்ந்து காரியங்களை ஒழுங்குபடுத்திகொள்வதற்கு கூடுதலான நேரமிருக்கும். பயனியர் செய்ய முடியாத சூழ்நிலைமையிலிருக்கும் பிரஸ்தாபிகள் முடிந்தளவுக்கு பயனியர்களோடு சேர்ந்து வேலை செய்வதன் மூலம் தங்கள் மணிநேரத்தை அதிகரிக்கக்கூடிய நிலையிலிருப்பார்கள்.
பாட்டு 32 (10), முடிவு ஜெபம்.
ஏப்ரல் 24-ல் துவங்கும் வாரம்
பாட்டு 87 (47)
12 நிமி: சபை அறிவிப்புகள், ஞாபகார்த்த தினத்துக்கு வந்தவர்களை புதியவர்களாயிருந்தாலுஞ்சரி எப்போதவது கூட்டத்துக்கு வருபவர்களாக இருந்தாலுஞ்சரி உடனடியாக திரும்பப் போய் சந்திக்கும்படி உற்சாகப்படுத்துங்கள். சபை என்ன செய்திருக்கிறது, பிரஸ்தாபிகள் தனிப்பட்ட விதத்தில் என்ன செய்யலாம் என்பதை விளக்கிக்காட்டுங்கள். இந்த வாரத்தின்போது தொகுதியாக ஊழியம் செய்வதற்கு செய்யப்பட்டிருக்கும் கூடுதலான ஏற்பாடுகளைத் தெரிவியுங்கள்.
18 நிமி: “தெய்வீக ஞானத்துக்காக நீங்கள் தேடுகிறீர்களா?” மூப்பர் இந்தக் கட்டுரையை சுருக்கமாக விமர்சித்தப் பின்பு ஒரு பிரஸ்தாபிகள் குழுவை அழைத்து அவர்களுடன் முடிவுபரியந்தம் உண்மையும் வைராக்கியமுமுள்ளவர்களாய் இருப்பதற்கு அந்த வெளிப்படுத்துதலின் உச்சக்கட்டம் புத்தகத்தை தனிப்பட்ட முறையில் வாசித்ததும் படித்ததும் எப்படி தங்கள் விசுவாசத்தை பலப்படுத்தியது, மற்றும் தங்கள் தீர்மானத்தை புதுப்பித்தது என்பதை கலந்தாலோசிக்கிறார். “திரள் கூட்டம்” பற்றிய புதிய உட்பார்வையை சிறப்பித்துக் காட்டுங்கள். வெளிப்படுத்துதல் 9:16-19-ல் விவரிக்கப்பட்டிருக்கும் ‘பல கோடி குதிரைகள்’ அடையாளத்தில் திரள் கூட்டத்தினர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். (வெளி. 7:9) நம்முடைய காலத்தில் இந்த தனி சிறப்புள்ள புத்தகத்தை விரிவாக விநியோகிப்பதில் பங்குகொள்வதற்கான ஆர்வத்தைத் தூண்டுங்கள்.
15 நிமி: சபையின் தேவைகள் அல்லது “பிரசங்கிக்க அவை உங்களுக்கு உதவக்கூடும்” என்ற பிப்ரவரி 15, 1989 ஆங்கில காவற்கோபுரம் பக்கங்கள் 22-4-ன் பேரில் சார்ந்த பேச்சு. பத்திரிகைகள் ஒவ்வொரு வாரமும் வீட்டுக்கு வருவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துங்கள். (இந்திய மொழிகளில்: ஜூன் 1987 காவற்கோபுரம், “உங்கள் வாழ்க்கைப் பணியாக நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?”)
பாட்டு 63 (32), முடிவு ஜெபம்.
மே 1-ல் துவங்கும் வாரம்
பாட்டு 156 (5)
10 நிமி: சபை அறிவிப்புகளும் தேவராஜ்ய செய்திகளும். சந்தா அளிப்புக்கு ஏற்ப சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளை பயன்தரக்கூடிய நடிப்பை ஒரு பயனியரோ திறமை வாய்ந்த பிரஸ்தாபியோ நடித்துக்காட்ட செய்யுங்கள். இந்த வார கடைசியில் வெளி ஊழியத்தில் சனிக்கிழமையன்று பத்திரிகை ஊழியத்திலும் முதல் ஞாயிறு அன்று வீட்டுக்கு வீடு சாட்சி கொடுக்கும் வேலையிலும் பங்குகொள்ள ஏற்பாடுகள் செய்யும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—காவற்கோபுரத்தை சிறப்பித்துக் காட்டுவதன் மூலம்.” கேள்வி-பதில். பாரா 3-ல் 30 முதல் 60 வினாடிகள் வரை நீடிக்கும் பத்திரிகை அளிப்பை வீட்டுக்கு வீடு ஊழியத்தில் எப்படி கொடுக்கலாம் என்பதை ஒரு பிரஸ்தாபி நடித்துக் காட்டும்படி செய்யுங்கள். பத்திரிகைகளை மாத்திரம் அளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திக் காட்டுங்கள். பாரா 4-ல் தெரு ஊழியத்தில் ஏப்ரல் 15 காவற்கோபுரத்தை ஒரு பிரஸ்தாபி பயன்படுத்துவதை நடித்துக் காட்டுங்கள். பாரா 5, 6 கலந்தாலோசிக்கையில் பத்திரிகை அளிப்பு 60 வினாடிகளுக்கு மேல் நீடிக்கக்கூடது என்பதை வலியுறுத்துங்கள். சந்தாவை அளிக்கையில் சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள் பயன்படுத்தப்பட வேண்டும்.
15 நிமி: “மும்முரமாய் பிரயாசப்படுங்கள்.” (லூக்கா 13:24; 1 தீமோ. 4:10) பிப்ரவரி 1988 நம் ராஜ்ய ஊழியத்தில் தோன்றிய “உங்கள் கையை நெகிழவிடாதீர்கள்” என்ற கட்டுரையின் தகவல்பேரில் சார்ந்த ஊழிய கண்காணியின் பேச்சு. இந்த வேலையில் கடந்த ஆண்டு மிகுதியான உற்சாகம் கொடுக்கப்பட்டது. அதில் பங்குகொண்ட வட்டார கண்காணிகள், சபைகள் மற்றும் தனி நபர்களிடமிருந்து சாதகமான குறிப்புகள் வந்திருக்கின்றன.
பாட்டு 10 (11), முடிவு ஜெபம்.