உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 2/90 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1990
நம் ராஜ்ய ஊழியம்—1990
km 2/90 பக். 3

அறிவிப்புகள்

● பிரசுர அளிப்புகள்: பிப்ரவரி, மார்ச்: ஆங்கிலத்தில் இரண்டு பழைய 192 பக்க புத்தகங்கள் ரூ10. இந்திய மொழிகளில் ஒன்று ரூ5. (பல்வேறு மொழிகளில் அளிக்கப்படக்கூடிய இந்தப் புத்தகங்களின் பட்டியல் பிப்ரவரி 1988 நம் ராஜ்ய ஊழியம், “அறிவிப்புகள்” பகுதியில், கொடுக்கப்பட்டிருக்கிறது.) ஏப்ரல்: புதிய பூமிக்குள் தப்பிப்பிழைத்தல் என்ற ஆங்கில புத்தகம் நன்கொடை ரூ10. (இந்தப் பிரசுரம் இல்லாத இடங்களில் இரண்டு பழைய 192 பக்க புத்தகங்களை ரூ10-க்கு அளிக்கவும்.) இந்திய மொழிகளில்: விசேஷ அளிப்பாக பழைய 192 பக்க புத்தகம் ஒன்றுக்கு ரூ5. மே, ஜூன்: காவற்கோபுரம் பத்திரிகைக்கு ஓர் ஆண்டு சந்தா ரூ40. ஆறுமாத காலத்துக்கும் மாதாந்திர பத்திரிகைகளுக்கான ஓராண்டுகால சந்தா விலை ரூ20. மாதாந்திர இதழ்களுக்கு ஆறுமாத கால சந்தா கிடையாது. ஜூலை: விசேஷ அளிப்பாக கொடுக்கப்படும் 192 பக்கங்களைக் கொண்ட பழைய புத்தகங்களில் ஒன்று ரூ5.

● நடத்தும் கண்காணியோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ மார்ச் 1-ல் அல்லது அதற்கு பின் விரைவில் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும்.

● ஞாபகார்த்த நாள்: 1989-ல் பயன்படுத்தப்பட்ட அதே பேச்சு குறிப்புத்தாள் 1990-லும் பயன்படுத்தப்பட வேண்டும். (S-31 10/85) ஞாபகார்த்த ஆசரிப்பு செவ்வாய் கிழமை ஏப்ரல் 10, சூரிய அஸ்தமனத்துக்குப் பின்பு நடைபெறும். அந்தத் தேதியில் வேறு சபைக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படக்கூடாது. பொதுவாக செவ்வாய் கிழமையில் நடைபெறும் கூட்டம் மற்றொரு நாளுக்கு மாற்றியமைக்கப்படலாம். வட்டார ஊழியர்கள் அந்த வாரத்தில் தங்கள் அட்டவணையை இதற்கேற்றார்போல் மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும்.

● ஞாபகார்த்த பைபிள் வாசிப்பு அட்டவணை: ஞாபகார்த்தத்துக்கு வழிநடத்தக்கூடிய அந்த ஆறு நாட்களின்போது பின்வரும் அட்டவணையின்படி பைபிள் வாசிக்கும்படி எல்லாரும் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்:

வியாழன், ஏப்ரல் 5:

நிசான் 9 யோவான் 12:2-19; மாற்கு 11:1-11

வெள்ளி, ஏப்ரல் 6:

நிசான் 10 யோவான் 12:20-50

சனி, ஏப்ரல் 7:

நிசான் 11 லூக்கா 21:1-36

ஞாயிறு, ஏப்ரல் 8:

நிசான் 12 மாற்கு 14:1, 2, 10, 11

திங்கள், ஏப்ரல் 9:

நிசான் 13 மத். 26:17-19; மாற்கு 14:12-16; லூக்கா 22:7-13

செவ்வாய், ஏப்ரல் 10:

நிசான் 14 யோவான் 19:1-42

● ஜூலை மாதம் முதல், வட்டார ஊழியர்கள் கொடுக்கும் புதிய பொதுபேச்சின் தலைப்பு: “போலந்து மாநாடுகளிலே யெகோவாவில் களிகூருதல்.” இது ஸ்லைட் படக்காட்சியாக இருக்கும். போலந்தில் நடைப்பெற்ற 1989-ம் ஆண்டு “தேவ பக்தி” மாவட்ட மாநாடுகளின் சில முக்கிய நிகழ்ச்சிகளை காண்பிக்கும் படமாக இருக்கும்.

● 1990-ம் ஆண்டிற்குரிய ஞாபகார்த்த ஆசரிப்பின் சமயத்தில் கொடுக்கப்படும் விசேஷ பொதுப்பேச்சு உலகமுழுவதிலும் ஞாயிறு, மார்ச் 25, 1990 அன்று கொடுக்கப்படும். அந்தப் பேச்சின் பொருள், “மெய்யான வாழ்க்கையை அடைய முயலுங்கள்!” இதற்கான குறிப்புத்தாள் வழங்கப்படும். வட்டார ஊழியரின் சந்திப்பு மற்றும் வட்டார மாநாடுகள் அல்லது விசேஷ அசெம்பிளி நாள் ஆகியவற்றை அந்தத் தினத்தன்று கொண்டிருக்கும் சபைகள் இந்த விசேஷ பேச்சை அதற்கு மறுவாரத்தில் திட்டமிட வேண்டும். மார்ச் 25-க்கு முன் எந்தச் சபையும் விசேஷ பேச்சை கொடுக்க ஏற்பாடு செய்யக்கூடாது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்