சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
பிப்ரவரி 5-ல் துவங்கும் வாரம்
பாட்டு 25 (119)
10 நிமி: சபை அறிவிப்புகள். அறிவிப்புகளின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் பிப்ரவரி மாத பிரசுர அளிப்பை சிறப்பித்துக் காட்டவும். உங்கள் சபையிலிருக்கும் பழைய புத்தகங்களின் பெயர்களைச் சொல்லுங்கள். இந்த மாதத்தின் சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளுடன் பயன்படுத்தப்படும் முன்னுரைகளை சுருக்கமாக கலந்தாலோசியுங்கள்.
25 நிமி: “தேவ பக்தி” மாவட்ட மாநாட்டின் முக்கிய குறிப்புகளை விமர்சியுங்கள்.
10 நிமி: “நேர்மையாக இருப்பதன் அர்த்தம் என்ன?” என்பதை ஆங்கில காவற்கோபுரம் பிப்ரவரி 15, 1988 பிரதியிலிருந்து மூப்பர் கலந்தாலோசிக்கிறார். (இந்திய மொழிகளில்: மார்ச் 1, 1989.) பாட்டு 24 (112), முடிவு ஜெபம்.
பிப்ரவரி 12-ல் துவங்கும் வாரம்
பாட்டு 54 (8)
5 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். வார கடைசி நாட்களின் வெளி ஊழிய ஏற்பாடுகளை அறிவிக்கவும்.
25 நிமி: மருத்துவ பத்திரமும் அடையாள அட்டையும். காரியதரிசி அட்டைகளை சபையாருக்கு விநியோகம் செய்ய ஏற்பாடு செய்கிறார், பின்பு ஜனவரி 1, 1990 தேதியிட்ட சங்கத்தின் கடிதத்தை முழுமையாக கலந்தாலோசிக்கிறார். இந்தக் கடிதம் முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகளுக்குக் கொடுக்கப்படும் மருத்துவ பத்திரம், மற்றும் பெற்றோரில் ஒருவர் சாட்சியாக இருக்கும் அல்லது இருவரும் சாட்சிகளாக இருக்கும் குடும்பத்தின் சிறுபிள்ளைகளுக்கான அடையாள அட்டைகள் ஆகிய இவற்றின் பேரில் தகவல்கள் அடங்கியதாக இருக்கிறது. நம்முடைய பாதுகாப்புக்காக இந்த அட்டைகள் பயனுள்ளதாக இருக்கும்படி செய்ய, இந்த ஆலோசனைகள் ஏன் முற்றிலுமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை சபையாருக்கு விளக்கவும்.
15 நிமி: “பைபிள் இலக்கியங்களை அளிக்க விழிப்புணர்வோடிருங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 5-ஐ கலந்தாலோசிக்கையில் ஏற்கெனவே நமது பிரசுரத்தை வைத்திருக்கும் வீட்டுக்காரரிடம் ஒரு பைபிள் படிப்பை துவங்குவது எப்படி என்பதை எடுத்துக்காட்டும் ஒரு நடிப்பை ஏற்பாடு செய்யவும். அதோடு பிரசுரங்களை விநியோகிப்பதிலும் பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதிலும் வெற்றிகரமாக செயல்படக்கூடிய ஒரு பிரஸ்தாபியை பேட்டிக் காணுங்கள்.
பாட்டு 63 (32), முடிவு ஜெபம்.
பிப்ரவரி 19-ல் துவங்கும் வாரம்
பாட்டு 4 (19)
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. ஜனவரி ஸ்டேட்மெண்ட்டில் சங்கம் பெற்றுக்கொண்டதாக தெரிவித்திருக்கும் எல்லா நன்கொடைகளைப் பற்றி அறிவிக்கவும். உள்ளூரிலும் உலக முழுவதிலும் உள்ள ராஜ்ய வேலைக்குப் பொருளாதார ஆதரவு கொடுப்பதற்காக சபையாருக்குப் போற்றுதல் தெரிவிக்கவும்.
20 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—திறம்பட்ட விதத்தில் துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்துவதன் மூலம்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 5, 6-ஐ சிந்திக்கும்போது நம்முடைய முன்னுரையின் பாகமாக (1) சமாதானமுள்ள புதிய உலகத்தில் வாழ்க்கை மற்றும் (2) நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம் ஆகிய துண்டுப்பிரதிகளை எப்படி அறிமுகத்தின் பாகமாக பயன்படுத்தலாம் என்பதை காண்பிக்கும் இரண்டு நடிப்புகளை சேர்த்துக்கொள்ளுங்கள். முழு பிரசங்கத்தையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளுடன் எப்படி இணைக்கலாம் என்பதைக் காட்டுங்கள். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நாம் முன்வந்து துண்டுப்பிரதிகளை பயன்படுத்துவதன் பயனை வலியுறுத்துங்கள். சபை வெளி ஊழிய ஏற்பாடுகளை அறிவித்து, அனைவரும் பங்குகொள்ளும்படி அழைப்பு கொடுக்கவும்.
15 நிமி: “சகாக்களின் அழுத்தங்களை நான் எப்படி சமாளிப்பது?” இரண்டு முன்மாதிரியுள்ள இளைஞருடன் இளைஞர் கேட்கும் கேள்விகள் என்ற ஆங்கில புத்தகத்தின் 9-ம் அதிகாரத்திலிருந்து தகுதிவாய்ந்த மூப்பர் சாதுரியமாக குறிப்புகளை கலந்தாலோசிக்கிறார். பிரபல்யமாக இருக்க வேண்டும், சகாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற ஆசை பலமானது என்பதை சுருக்கமாக ஆமோதிக்கவும். வயதுவந்தவர்களும்கூட இந்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த காரியத்தை எதிர்ப்படுவது இளைஞர்களுக்குச் சுலபமானதா? அதை எதிர்ப்பதில் அவர்கள் எப்படி வெற்றி கண்டிருக்கிறார்கள்? பக்கம் 80-லுள்ள “கலந்தாலோசிப்புக்கான கேள்விகள்” பயன்படுத்தி, இளைஞர் பதில் சொல்ல செய்து சகாக்களுடைய அழுத்தங்களுக்கு எதிராக எதிர்த்து நிற்க எப்படிப் பலத்தை வளர்த்துக்கொள்ளலாம் என்பதை காட்டுங்கள். சபையிலுள்ள இளைஞர்கள் வைக்கும் நல்ல முன்மாதிரிகளுக்குப் பாராட்டுதல் தெரிவியுங்கள். அவர்களுடைய நல்ல நடத்தையால் யெகோவா மிகவும் பிரியங்கொள்கிறார். அதனால் அவர் கனப்படுத்தப்படுகிறார்.—நீதி. 27:11.
பாட்டு 188 (70), முடிவு ஜெபம்.
பிப்ரவரி 26-ல் துவங்கும் வாரம்
பாட்டு 171 (16)
8 நிமி: சபை அறிவிப்புகள். இந்த வாரத்திற்கான சபையின் வெளி ஊழிய திட்டங்களை விமர்சியுங்கள். வார கடைசிக்கான வெளி ஊழிய ஏற்பாடுகளைச் செய்துகொள்ளும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
12 நிமி: குறைவாக வேலை செய்யப்படும் பிராந்தியங்கள். சபையில் அடிக்கடி ஊழியம் செய்யப்படாத பிராந்தியங்கள் இருக்குமானால் இந்தப் பிராந்தியங்களில் மேலும் அதிகமாக ஊழியம் செய்யுமாறு உற்சாகப்படுத்துங்கள். சபைக்கு ஏற்றவாறு பொருத்திக் கொள்ளுங்கள்.
15 நிமி: “ஊழியர்களாக நம்முடைய திறமைகளை முன்னேற்றுவித்தல்.” கேள்வி-பதில். பாரா 4-ஐ சிந்திக்கையில் ஜூலை 15, 1988 ஆங்கில காவற்கோபுரம் பக்கம் 16, பாராக்கள் 5, 6-ல் சிபாரிசு செய்யப்பட்டிருக்கும் ஆலோசனைகளை உபயோகிக்கும் இரண்டு சுருக்கமான நடிப்புகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். இது உண்மையான அக்கறையுடனும் நம்பிக்கையுடனும் செய்யப்பட வேண்டும். (இந்திய மொழிகளில்: நியாயங்கள் புத்தகம், பக்கம் 15. “அடிக்கடி ஊழியம் செய்யப்படும் பிராந்தியங்களில்” என்ற கட்டுரை பயன்படுத்தப்படலாம்.)
10 நிமி: சபையின் தேவைகள் அல்லது “ஒரு கிறிஸ்தவனாயிருப்பதன் அர்த்தம் என்ன?” இது உட்பார்வை (ஆங்கிலம்) புத்தகம் 1, பக்கம் 440-1 பேரில் சார்ந்த பேச்சு. அன்பு மற்றும் சுயதியாகம் ஆகியவற்றில் இயேசுவின் முன்மாதிரியை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தைக் காட்டுங்கள். (இந்திய மொழிகளில்: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல” மே 1989 காவற்கோபுரம்.)
பாட்டு 168 (84), முடிவு ஜெபம்.
மார்ச் 5-ல் துவங்கும் வாரம்
பாட்டு 135 (72)
10 நிமி: சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள். “ராஜ்ய மன்றங்களை அடையாளங்காட்டுதல்.” சபைக்குப் பொருத்தமான குறிப்புகளை எடுத்துரைக்கவும்.
15 நிமி: 1990 வருடாந்தர புத்தகத்தின் முக்கிய குறிப்புகள். 1990 வருடாந்தர புத்தகத்தின் முன்னுரை குறிப்புகள் பேரில் நன்கு தயாரிக்கப்பட்ட பேச்சு. யெகோவாவின் ஜனங்களுடைய வைராக்கியமுள்ள சேவைக்கு யெகோவா அவர்கள் மீது அருளியிருக்கும் ஆசீர்வாதங்கள் காரணமாக அவர்கள் அனுபவித்து மகிழ்ந்திருக்கும் முனைப்பான சாதனைகளை சிறப்பித்துக் காட்டுங்கள். நேரம் அனுமதிக்குமானால் கொடுக்கப்பட்டிருக்கும் உற்சாகமூட்டும் அனுபவங்கள் சிலவற்றை எடுத்துச் சொல்லுங்கள். உலக முழுவதிலுமுள்ள நமது சகோதரரின் அனுபவங்கள் யெகோவாவின் சேவையில் முழுமையாக பங்குகொள்வதற்கு நம் அனைவரையும் உந்துவிக்க வேண்டும். வருடாந்தர புத்தகத்தை வாசிப்பதிலிருந்து பயனடையும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். (இந்திய மொழிகளில்: “யெகோவாவுடைய கரம் அவர்களோடே இருந்தது.” ஜூன் 1989 தமிழ் காவற்கோபுரம்.)
20 நிமி: “திறம்பட்ட முன்னுரைகள்.” கட்டுரையின் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 5-ல் கொடுக்கப்பட்டிருக்கும் முன்னுரையை நடித்துக் காட்டவும். உங்கள் பிராந்தியத்துக்கு பொருத்தமான, நியாயங்கள் புத்தகத்தில் காணப்படும் (பக்கங்கள் 9-15) முன்னுரைகளில் ஒன்றையும் நடித்துக் காட்டுங்கள். கேள்விகளுக்கு விடையளிக்கவும் தடைகளை மேற்கொள்வதற்கும் எல்லாச் சகோதரர்களும் வெளி ஊழியத்தில் தங்களுடன் நியாயங்கள் புத்தகத்தை எடுத்துச் செல்லும்படி உற்சாகப்படுத்துங்கள். (இந்திய மொழிகளில்: நம் ராஜ்ய ஊழியம் டிசம்பர் 1988; ஜனவரி 1988; மே 1988 ஆகியவற்றை எடுத்துப் பாருங்கள்.) இந்த வார கடைசியில் அனைவரும் வெளி ஊழியத்தில் பங்குகொள்ள உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 108 (95), முடிவு ஜெபம்.