சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
ஏப்ரல் 2-ல் துவங்கும் வாரம்
பாட்டு 108 (95)
7 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும். இந்த மாதத்தில் ஏற்கெனவே வெளி ஊழியத்தில் கலந்துகொண்ட பிரஸ்தாபிகளுக்கு அனலுடன் பாராட்டுதல் தெரிவியுங்கள். இந்த ஏப்ரல் மாதத்தின்போது வெளி ஊழியத்தில் வைராக்கியமாக பங்குகொள்ள அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். சபையின் வெளி ஊழிய ஏற்பாடுகளை பிரஸ்தாபிகளுக்கு ஞாபகப்படுத்துங்கள்.
18 நிமி: “அதிகரிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கான ஒரு காலம்.” கட்டுரையின் பேரில் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. ஏப்ரல், மே மாதங்களில் துணைப்பயனியர் சேவை செய்ய ஏற்கெனவே பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கையை குறிப்பிடவும். பாரா 5-ஐ கலந்தாலோசிக்கும்போது, மார்ச் 1990 நம் ராஜ்ய ஊழியம் இதழின் “தனிச்சிறப்பு பத்திரிகைகள் சிறப்பித்துக் காட்டப்படுகின்றன” என்ற கட்டுரையை சுட்டிக் காட்டவும். ஏப்ரல் 1, காவற்கோபுர இதழ் கிடைத்துவிட்டிருந்தால், அதிலிருந்து பேச்சுக் குறிப்புகளை சுருக்கமாக கலந்தாலோசியுங்கள். ஞாபகார்த்த ஆசரிப்பின் தொடர்பாகவும் அதோடுகூட அந்த இரண்டு மாதங்கள் முழுவதும் வெளி ஊழிய நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு இருக்கும் வாய்ப்பைப் பற்றி சிந்தித்து பார்க்கும்படி அனைவரையும் அனலுடன் உற்சாகப்படுத்தவும்.
20 நிமி: “ஏப்ரல் மாதத்தில் தப்பிப்பிழைத்தல் புத்தகத்தை அளியுங்கள்.” ஊழியக்கண்காணியின் பேச்சு. பேச்சுக் குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டுவதன் மூலம் தப்பிப்பிழைத்தல் புத்தகத்தை திறம்பட்ட விதத்தில் அளிப்பதற்கு பிரஸ்தாபிகளுக்கு உதவி செய்யுங்கள். அதிகாரம் 1 முதல் 7 முக்கியமாக பொது மக்களுக்காக திட்டமிடப்பட்டிருக்கிறது. சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளோடு பொருந்தக்கூடிய குறிப்புகளை இந்த அதிகாரங்களின் ஒன்றிலுள்ள ஆரம்ப பாராக்களிலிருந்து வீட்டுக்காரரிடம் வாசிக்கலாம்.
பாட்டு 23 (40), முடிவு ஜெபம்.
ஏப்ரல் 9-ல் துவங்கும் வாரம்
பாட்டு 192 (10)
7 நிமி: சபை அறிவிப்புகள், கணக்கு அறிக்கை. மார்ச் மாதத்தின்போது அனுப்பிய நன்கொடைக்கு சங்கம் பெற்றுக்கொண்ட குறிப்பு வந்திருந்தால் அதைச் சேர்த்துக்கொள்ளலாம். தங்களுடைய பொருளாதார நன்கொடைகள் மூலம் ராஜ்ய வேலைக்கு தாராளமாக ஆதரவு தந்தமைக்காக சபையினரை அனலுடன் பாராட்டவும். சபையின் வெளி ஊழிய ஏற்பாடுகளை விமரிசித்து வார கடைசியில் சம்பந்தப்பட்ட ஊழிய தொகுதியினரோடு ஊழியத்தில் கலந்துகொள்ள பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்தவும்.
10 நிமி: கேள்விப் பெட்டி. கட்டுரையில் உள்ள தகவலின்பேரில் மூப்பர் கொடுக்கும் பேச்சு. மேலும் அதோடு சங்கத்தால் கொடுக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த பதிவு நாடாக்களில் ஒருசிலவற்றை எடுத்துக் காட்டவும். தனியாட்களாலும் கிறிஸ்தவ குடும்பத்தாராலும் இவை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை காண்பதற்கு சகோதரருக்கு உதவுங்கள்.
18 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—பகுத்துணர்வோடு.” கேள்வி-பதில். பாரா 3-ஐ கலந்தாலோசித்த பின்பு, வீட்டுக்காரரின் சூழ்நிலைமைக்கேற்ப பிரசங்கத்தை எவ்வாறு மாற்றியமைத்துக்கொள்வது என்பதைக் காட்ட இரண்டு நடிப்புகளை கொண்டிருங்கள். வழக்கமாக அறிமுகப்படுத்தும்போது அல்லது அதைப் பின்தொடர்ந்து மாற்றியமைத்தல் காண்பிக்கப்பட்டதும் நடிப்பு நிறுத்தப்படலாம்.
10 நிமி: “உங்களுடைய அன்பின் உண்மைத் தன்மைக்கு ஒரு பரீட்சை.” டிசம்பர் 1, 1989 ஆங்கில காவற்கோபுரம் பக்கம் 24-ல் துவங்கும் கட்டுரையின் பேரில் சார்ந்த மூப்பருடைய பேச்சு. (இந்திய மொழிகளில்: அக்டோபர் 1989 காவற்கோபுரம், “நன்றியுள்ளவர்களாக இருங்கள்”) ராஜ்ய வேலைகளை உள்ளூரிலும் உலக முழுவதிலும் ஆதரிப்பதில் சபையார் காட்டும் தாராள குணத்தை போற்றுங்கள்.
பாட்டு 225 (117), முடிவு ஜெபம்.
ஏப்ரல் 16-ல் துவங்கும் வாரம்
பாட்டு 208 (6)
10 நிமி: சபை அறிவிப்புகள். வாரக் கடைசி வெளி ஊழிய ஏற்பாடுகளை தெரியப்படுத்துங்கள். உங்கள் சபை பிராந்தியத்திலுள்ள ஜனங்களுக்கு முக்கியமாக இந்த மாத இதழில் எந்தக் கட்டுரை மனதைக் கவரக்கூடும் என்பதற்கு யோசனை கூறுங்கள்.
20 நிமி: கூடுதலான ஆர்வத்தைத் தூண்டுவதற்கு மறுசந்திப்பு செய்யுங்கள். தப்பிப்பிழைத்தல் புத்தகத்தில் அக்கறை காண்பித்த அனைவரையும் உடனடியாக மறுசந்திப்புச் செய்யும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள். ஆர்வமுள்ள ஆட்களை மறுசந்திப்புச் செய்து பைபிள் படிப்பு துவங்க வேண்டிய அவசியத்தை முந்தின பகுதி குறிப்பிட்டது. ஆர்வம் காட்டிய அனைவரையும் மறுசந்திப்பு செய்யும்படியான அவசியத்தையும் உற்சாகமூட்டுதலையும் கொடுக்கும் சுருக்கமான கலந்தாலோசிப்புக்கு பின்பு புத்தகம் கொடுக்கப்பட்ட இடத்தில் எப்படி மறுசந்திப்புச் செய்வது என்பதைக் காட்டும் ஓரிரண்டு சுருக்கமான நடிப்புகளைக் கொண்டிருங்கள்.
15 நிமி: சபையின் தேவைகள் அல்லது தினவாக்கியத்தையும் குறிப்புகளையும் ஒழுங்காக கலந்தாலோசிப்பதன் மதிப்பை உயர்த்திக் காண்பிக்கும் பேச்சும் நடிப்புகளும். இது எவ்வாறு செய்யப்படலாம் என்பதற்கு யோசனை கூறுங்கள். தினந்தோறும் வேத வாக்கியங்களை ஆராய்தல் 1990—முன்னுரை பேரில் சார்ந்த பேச்சு.
பாட்டு 46 (20), முடிவு ஜெபம்.
ஏப்ரல் 23-ல் துவங்கும் வாரம்
பாட்டு 126 (25)
10 நிமி: சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள். இந்த வார கடைசியில் அனைவரும் வெளி ஊழியத்தில் பங்குகொள்ள உற்சாகப்படுத்துங்கள். மே மாதத்தில் துணைப்பயனியர் சேவை செய்பவர்கள் எல்லாரும் நடத்தும் கண்காணியிடம் கிடைக்கக்கூடிய விண்ணப்ப நமூனாவைப் பூர்த்திச் செய்து ஒப்படைத்துவிட்டிருக்க வேண்டும். நேரம் அனுமதிக்குமானால் இந்த மாத இதழ்களிலிருந்து வெளி ஊழியத்தில் பயன்படுத்துவதற்குப் பொருத்தமான குறிப்புகளை சிபாரிசு செய்யுங்கள்.
20 நிமி: “நம்முடைய ஊழியத்தில் விடாமற் தொடர்ந்திருத்தல்.” கேள்வி-பதில். தகுதிவாய்ந்த சகோதரர் பாராக்களை வாசிக்கிறார். மற்றவர்கள் இடக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை வாசிக்கலாம், குறிப்பு சொல்லலாம். அந்தத் தகவலை உங்கள் சபைக்குப் பொருத்தி காண்பியுங்கள். பிரஸ்தாபிகள் பிராந்தியத்தில் எதிர்ப்படும் பிரச்னைகளை சமாளிப்பதற்கும் சரியான மனநிலையை காத்துக்கொள்வதற்கும் உதவி செய்யுங்கள். முடிவு பரியந்தம் வைராக்கியமாக யெகோவாவை சேவிப்பதற்கு எல்லாருமே தீர்மானமுள்ளவர்களாக இருக்கவேண்டும்.
15 நிமி: காவற்கோபுரம் சந்தாவை அளியுங்கள். யெகோவாவின் புதிய ஒழுங்கில் ஜீவனை அடைய நாடக்கூடியவர்கள் அனைவருக்கும் காவற்கோபுரம் சந்தா முக்கியமானது என்பதை சுருக்கமாக கலந்தாலோசியுங்கள். சந்தா அளிப்பை நடித்துக் காட்டுங்கள். காவற்கோபுரம் ஏப்ரல் இதழ்களைப் பயன்படுத்துகையில் தேவன் விரைவில் சமாதானத்தைக் கொண்டுவருவார் என்பதைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் ஆர்வத்தைத் தூண்டுவதற்கு பிரஸ்தாபிகள் பிரயாசப்பட வேண்டும். கடவுளுடைய வார்த்தை சமாதானத்தை வாக்களிக்கிறது என்பதைக் காட்ட சங்கீதம் 72:7 பயன்படுத்தப்படலாம். சமாதானத்தை நேசிக்கிறவர்கள் மெய்யான சமாதானம் வெகு சீக்கிரம் வரக்கூடும் என்ற சங்கீதம் 37:10, 11-ல் உள்ள வாக்குறுதியை காண்பதில் உற்சாகமடையக்கூடும். நேரம் அனுமதிக்குமானால் சந்தா அளிப்பு செய்யும் நேரடியான சுருக்கமான நடிப்பை நடித்துக் காட்டலாம்.
பாட்டு 71 (92), முடிவு ஜெபம்.