தேவராஜ்ய செய்திகள்
ஜனவரி 23 1990-ல் பெனின் அரசாங்கமானது அந்த நாட்டில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையின் மீது விதித்திருந்த தடையுத்தரவை அதிகாரப்பூர்வமாக நீக்கிவிட்டது. ஜனவரி 26-ம் தேதி சகோதரர்கள் கோடோதோ என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு விசேஷ கூட்டத்தில் ஒன்றுகூடி வர முடிந்தமையால் மிகவும் களிகூர்ந்தார்கள். இப்பொழுது அவர்கள் தங்களுடைய தேவராஜ்ய வேலைகளை மேம்படுத்துவதற்கு எதிர்நோக்கியிருக்கிறார்கள்.
கொலம்பியா தொடர்ந்து சிறந்த வளர்ச்சியை அறிக்கைச் செய்கிறது. ஜனவரி மாதத்தின்போது அவர்கள் புதிய உச்சநிலையான 43,850 பிரஸ்தாபிகளை எட்டினார்கள். 490 பேர் முழுக்காட்டப்பட்டார்கள்.
ஜனவரி 26, 1990-ல் கோஸ்ட்டா ரிக்காவில் முதல் மாநாட்டு மன்றம் கட்டுவதற்காக அனுமதி வழங்கப்பட்டது. அது 2,200 ஆட்கள் அமருவதற்கு வசதியாக இருக்கும். இது ஒரு வருடத்திற்குள்ளாக முடிக்க எதிர்பார்க்கப்படுகிறது