நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்
குடும்பமாக
1. கடவுளை முழு ஆத்துமாவோடு சேவிக்கக்கூடிய தந்தை தாய் பிள்ளைகளுடன் முழுமையாக பரிசுத்த சேவையில் ஈடுபட்டிருக்கும் ஓர் ஒப்புக்கொடுத்தக் குடும்பம் யெகோவாவின் மாபெயருக்கு தகுதியாக இருக்கிறது. பூமிமுழுவதிலுமுள்ள யெகோவாவின் ஜனங்களுடைய சபைகளில் இப்படிப்பட்ட அநேக குடும்பங்களைக் காண்பதில் நாங்கள் சந்தோஷமடைகிறோம்.
2. தன்னுடைய குடும்பத்தில் ஆவிக்குரிய தேவைகளைப் பராமரிப்பதற்கு தந்தைக்கு முதல் உத்தரவாதம் இருக்கிறது என்பது மெய்யே. (1 கொரி. 11:3) தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளின் ஒத்துழைப்போடு அவருடைய குடும்பம் மற்றவர்கள் மீது பலமான செல்வாக்கைச் செலுத்தக்கூடும். (மத். 5:16) இந்த ஒத்துழைப்பு வெளிக்காட்டக்கூடிய ஒரு சில அம்சங்கள் யாவை?
பெற்றோர் முன்னின்று நடத்தவேண்டும்
3. அநேக சந்தர்ப்பங்களில் தந்தை மூப்பராகவோ அல்லது உதவி ஊழியராகவோ இருக்கக்கூடும். அப்படியானால் குடும்பத்தின் அக்கறைகளை கவனிப்பதோடுகூட அவருடைய நேரமும் கவனமும் சபை காரியங்களுக்கும் செலுத்தப்படவேண்டியதாக இருக்கிறது. தன்னுடைய குடும்பம் அலட்சியம் செய்யப்படாத அளவுக்குக் கிடைக்கக்கூடிய அந்த மணிநேரம் சீராக பங்கிடப்படுவதைப் பார்த்துக் கொள்வது தந்தையின் பொறுப்பாக இருக்கிறது. தனக்குள்ள அந்தக் குறைந்த மணிநேரத்தில் மிகுதியான வேலைகள் செய்யப்பட வேண்டியதாக இருப்பதாக இது எப்பொழுதுமே சுலபமாயிராது. ஆனால் தன்னுடைய குடும்பமே அவருடைய பிரதான உத்தரவாதமாக இருப்பதால் படிப்பிலும் வெளி ஊழியத்திலும் கூட்டங்களிலும் தகுதியான பொழுதுபோக்குகளிலும் தன்னுடைய குடும்பத்தோடு இருப்பதற்கு தன்னுடைய மதிப்புள்ள அந்த மணிநேரத்தை அவர் ஒழுங்காக திட்டமிட வேண்டும். சில சந்தர்ப்ப சூழ்நிலைகளும் உத்தரவாதங்களும் சில சமயங்களில் தந்தையின் அட்டவணையை மாற்றிவிடக்கூடும். ஆனால் தன்னுடைய குடும்ப அங்கத்தினரோடு ஒவ்வொரு மாதமும் வெளிஊழியத்தில் அவரால் நேரம் செலவழிக்கக்கூடுமானால் அது எவ்வளவு பயனுள்ளதாயிருக்கும்!.
4. மனைவியின் ஒத்துழைப்பு மிகவும் அத்தியாவசியமானது. பிள்ளைகளை ஊழியத்தில் பயிற்றுவிப்பதன் மூலம் மிக முக்கியமான ஒரு முறையில் அவள் தன் கணவனுக்குத் துணைப்புரியலாம். ஊழியத்தில் அவள் காண்பிக்கும் வைராக்கியமும் பக்தியுள்ள முன்மாதிரி பிள்ளைகள் ஊழியத்திற்கான மதித்துணர்வில் வளருவதற்கு அதிகமாக உதவும். 2 தீமோ. 3:14, 15.
5. ஆவிக்குரிய உத்தரவாதத்தின் சுமையை ஒரு பெற்றோர் சுமந்து பிள்ளைகளை ஊழியத்தில் வெற்றிகரமாக பயிற்றுவித்த அநேக சிறந்த முன்மாதிரிகள் இருக்கின்றன. தன்னுடைய தாய் அல்லது தந்தையினுடைய மிகச் சிந்த முன்மாதிரியின் காரணமாக அநேக இளைஞர்கள் சத்தியத்துக்காக உறுதியான நிலைநிற்கை எடுத்து முழு நேர ஊழியத்தையும் தெரிந்து கொண்டுள்ளனர்.
பிள்ளைகளுடைய உத்தரவாதம்
6. பிள்ளைகளுடைய உத்தரவாதம் என்ன? கடவுளின் பரிபூரண குமாரனாகிய இயேசுவும்கூட சிறுப் பிள்ளையாக இருந்தபோது தன்னுடைய பெற்றோரின் வழிநடத்துதல்கள் மற்றும் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்பட்டிருந்தார். (லூக். 2:51) ஆகையால் தந்தையும் தாயும் ஊழியத்தில் ஒன்று சேர்ந்து நேரத்தை செலவிடுவதற்காக ஏற்பாடு செய்கையில் பிள்ளைகள் தங்களுடைய பெற்றோருடன் ஒத்துழைப்பதன் மூலம் தங்களுடைய தேவபக்தியை காண்பிப்பது அவர்களுடைய கடமையாக இருக்கிறது.—எபே. 6:1-3.
7. படிப்பதில், வெளிஊழியத்தில் பங்குகொள்வதில், கூட்டங்களுக்கு ஆஜராவதில்—குடும்பமாக வணக்கத்தில் ஒன்று சேர்ந்து ஈடுபடுவது குடும்ப வட்டாரத்திலுள்ள அன்பு மற்றும் ஐக்கியத்தின் கட்டை பலப்படுத்துகிறது. இந்த விஷயத்தில் பெற்றோரும் பிள்ளைகளும் உத்தரவாதத்தில் பங்கேற்கின்றனர்.