சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
ஆகஸ்ட் 6-ல் துவங்கும் வராம்
பாட்டு 174 (13)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும். இந்தச் சனிக்கிழமை பத்திரிகை ஊழியத்தில் பயன்படுத்தக்கூடிய கட்டுரைகளை சிறப்பித்துக் காட்டுங்கள். இரண்டு நடிப்புகள், ஒவ்வொன்றும் ஒரு பத்திரிகையிலிருந்து ஒரு கட்டுரையைச் சிறப்பித்துக்காட்ட வேண்டும்.
25 நிமி: “மழைக்கால மாதங்களை ஞானமாக பயன்படுத்துங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. இந்த மாத பேச்சுப் பொருளைப் பயன்படுத்தி “சகலத்தையும் புதிதாக்குகிறேன்” புரோஷுரை அளிப்பது எப்படி என்பதன் பேரில் நடிப்பை சேர்த்துகொள்ளுங்கள். பாரா 7-ல் குறிப்பிட்டிருப்பதற்கேற்ப 10 நிமிட நடிப்பை ஏற்பாடு செய்யுங்கள். மறுசந்திப்புக்கான திட்டவட்டமான ஏற்பாடுகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
10 நிமி: புரோஷுரின் பேச்சுக் குறிப்புகள். வெளி ஊழியத்தில் பயன்படுத்துவதற்கென்று சபையின் கையிருப்பிலிருக்கக்கூடிய பல்வேறு வகையான புரோஷுர்களிலிருந்து சில முக்கிய குறிப்புகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் சபையாரை உட்படுத்துங்கள். ஒரு சில திறம்பட்ட பிரஸ்தாபிகளை முன்னதாகவே நியமிக்க நீங்கள் விரும்பக்கூடும்.
பாட்டு 20 (103), முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 13-ல் துவங்கும் வாரம்
பாட்டு 156 (10)
10 நிமி: சபை அறிவிப்புகள், கணக்கு அறிக்கை. நன்கொடை பெற்றுக்கொண்டதை சங்கம் தெரிவித்திருந்தால் அதைச் சேர்த்துக்கொள்ளவும். உலகளாவிய ராஜ்ய வேலைக்காகவும் உள்ளூர் தேவைகளை பராமரிக்கவும் சபையார் கொடுக்கும் பணசம்பந்தமான ஆதரவுக்காக பாராட்டுதல் தெரிவிக்கவும்.
20 நிமி: “முன்னேறுவதற்கு பைபிள் மாணாக்கரை உற்சாகப்படுத்துங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 4-ஐ சிந்திக்கும்போது கடவுளுடைய சித்தத்தை செய்தல் புரோஷுர் பக்கம் 14 பாரா 3-ஐ கலந்தாலோசிக்கையில் ஓர் அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபி மாணாக்கன் முன்னேறுவதற்கு எவ்வாறு உற்சாகப்படுத்துகிறார் என்பதைக் காட்டும் நன்கு தயார் செய்யப்பட்ட நடிப்பை கொண்டிருங்கள்.
15 நிமி: ஒரு பைபிள் மாணாக்கன் எப்பொழுது பகிரங்க ஊழியத்தில் கலந்துகொள்ளலாம்? டிசம்பர் 1, 1989 ஆங்கில காவற்கோபுர கட்டுரையின் பேரில் சார்ந்த மூப்பரின் பேச்சு. “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பக்கம் 31. நம்முடைய பிள்ளைகளைத் தவிர, புதியவர்கள், இரண்டு மூப்பர்கள் அவர்களுடன் பேசி அவர்கள் தகுதிபெற்றவர்கள் என்பதை தீர்மானிக்கும் வரையில் வெளி ஊழியத்தில் பங்குபெறும்படி நாம் அவர்களை அழைக்கக்கூடாது என்பதை அழுத்தி கூறவும்.
பாட்டு 217 (24), முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 20-ல் துவங்கும் வாரம்
பாட்டு 220 (19)
10 நிமி: சபை அறிவிப்புகள். ஏப்ரல் ஊழிய அறிக்கையின் முக்கிய குறிப்புகளை விமர்சியுங்கள். சபையில் உள்ளவர்களை அவர்களுடைய சாதனைகளுக்காக பாராட்டுங்கள். இந்த வார கடைசியின்போது வெளி ஊழியத்தில் பங்குகொள்ள உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “கூட்டங்களை பயனுள்ளவையாக ஆக்குவதில் உங்கள் பாகம்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பை மூப்பர் கையாளுகிறார். உங்கள் சபையில் கவனம் செலுத்தப்பட வேண்டிய காரியங்களை வலியுறுத்துங்கள். பொருத்தமான இடங்களில் பாராட்டுதல் தெரிவியுங்கள்.
15 நிமி: ஒரு பயனியராவதற்கு உங்களுடைய எதிர்கால வாய்ப்புகளை சீர்த்தூக்கிப் பாருங்கள். பேட்டிகளுடன் கூடிய உற்சாகமூட்டும் பேச்சு. இந்தியாவில், இப்பொழுது எல்லா வாழ்க்கை துறைகளிலிருந்தும் சூழ்நிலைமைகளிலிருந்தும் வந்த 400-க்கும் மேற்பட்ட ஒழுங்கான பயனியர்கள் இருக்கிறார்கள். பயனியர் சேவை செய்யும்படி அவர்களைத் தூண்டியது என்ன? யெகோவாவின் மீதும் அயலார் மீதும் அவர்கள் கொண்டிருக்கும் அன்பு (மத். 22:37-39); ஜனங்கள் மீதுள்ள ஆழ்ந்த அக்கறையும் அவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு அவர்களுக்கு அதிகமான உதவியைக் கொடுக்க வேண்டும் என்ற ஆவல் (1 தீமோ. 2:4); ராஜ்ய அக்கறைகளின் சார்பாக ஒரு தியாகம் செய்யும் உள்ளம். (1 கொரி. 9:23) ஆர்வம் விருத்தி செய்யப்பட வேண்டும். இதை நீங்கள் செய்கிறீர்களா? நீங்கள் பயனியர் செய்ய விரும்பினால் எடுக்கவேண்டிய படிகள்: (1) காரியத்தை யெகோவாவிடம் ஜெபத்தில் எடுத்துச் செல்லுங்கள் (மத். 7:7, 8; பிலி. 4:6); (2) பயனியர்களோடும் மூப்பர்களோடும் கலந்துபேசுங்கள் (நீதி. 15:22); (3) எழுத்தில் தற்காலிகமான அட்டவணையைப் போட்டு அது எப்படி மற்ற கிறிஸ்தவ உத்தரவாதங்களை பாதிக்கிறது என்பதை சீர்த்தூக்கிப் பாருங்கள் (லூக். 14:28); (4) துவங்குவதற்கு ஒரு தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள், முற்றிலும் பொருத்தமான சூழ்நிலைக்காக காத்திருக்காதீர்கள். (பிர. 11:4) செப்டம்பர் மாதம் ஆரம்பிப்பதற்கு ஒரு சரியான மாதம்; அடுத்த ஆண்டு பயனியர் சேவைப் பள்ளிக்குத் தகுதி பெறக்கூடும். பயனியர் சேவையின் இடையூறுகளை தாங்கள் எப்படி மேற்கொண்டார்கள் என்பதை காட்டுவதற்கு ஒன்று அல்லது இரண்டு பயனியர்களைப் பேட்டி காணுங்கள். நம்பிக்கையான மனநிலையை வெளிப்படுத்துங்கள்.
பாட்டு 128 (10), முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 27-ல் துவங்கும் வாரம்
பாட்டு 39 (16)
10 நிமி: சபை அறிவிப்புகள்.
20 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—தொலைபேசி மூலம்.” ஊழியக்கண்காணி கேள்வி-பதில் மூலம் கலந்தாலோசிக்கிறார். தொலைபேசி சாட்சி கொடுத்தல் எவ்வாறு செய்யப்படலாம், பொதுவாக ஏற்படும் எதிர்ப்புகளை எப்படி மேற்கொள்வது என்பதைக் காட்டும் இரண்டு நடிப்புகளைக் கொண்டிருங்கள். இது ஊழியக் கண்காணியினுடைய மேற்பார்வையின் கீழ் ஒழுங்குப்படுத்தியமைக்கப்பட்ட நடவடிக்கை என்பதையும் சீரான பதிவுகள் வைக்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்துங்கள்.
15 நிமி: சபையின் தேவைகள். அல்லது “தகுதியற்ற தயவிலிருந்து நீங்கள் நன்மையடைவீர்களா?” பிப்ரவரி 15, 1990 ஆங்கில காவற்கோபுரம் பக்கங்கள் 21-3 (இந்திய மொழிகளில்: “மற்றவர்கள் கடவுளை வணங்குவதற்கு உதவிசெய்தல்.” ஆகஸ்ட் 1989 காவற்கோபுரம்.)
பாட்டு 8 (84), முடிவு ஜெபம்.
செப்டம்பர் 3-ல் துவங்கும் வாரம்
பாட்டு 10 (88)
10 நிமி:சபை அறிவிப்புகள். சிபார்சி செய்யப்பட்டிருக்கும் அளிப்பின் பேரில் இரண்டு நடிப்புகள். ஒவ்வொரு நடிப்பும் சனிக்கிழமை பத்திரிகை ஊழியத்திற்காக, ஒரு பத்திரிகையில் ஒரு கட்டுரையை சிறப்பித்துக் காட்டவேண்டும்.
15 நிமி:“பயனியர் சேவை செய்வதன் மூலம் யெகோவாவின் மீது நம்பிக்கையை வெளிக்காட்டுதல்” என்ற மார்ச் 1990 நம் ராஜ்ய ஊழியம் கட்டுரையிலிருந்து மூப்பரும் உதவி ஊழியரும் கலந்தாலோசிக்கிறார்கள். சபைக்குப் பொருந்தக்கூடிய நடைமுறையான ஆலோசனைகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
15 நிமி: “சத்தியத்தின் தண்ணீர்களைக் கொண்டு உங்கள் உறவினர்களுக்கு புத்துயிரூட்டுங்கள்.” பிப்ரவரி 15, 1990 ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 25-7-ன் பேரில் பேச்சு. (இந்திய மொழிகளில்: ஆகஸ்ட் 1989 காவற்கோபுரம் “யார் யெகோவா அங்கீகரித்தவராவர்?”)
5 நிமி: புரோஷுர்களைக் கொண்டு பைபிள் படிப்பு ஆரம்பிக்கும் அனுபவங்கள். (சபையில் எவருக்கும் இல்லையெனில், புரோஷுர்களை விநியோகித்ததைப் பற்றிய அனுபவங்களைக் கேட்கலாம்.)
பாட்டு 169 (32), முடிவு ஜெபம்.