அறிவிப்புகள்
● பிரசுர அளிப்புகள்: ஆகஸ்ட், செப்டம்பர்: பள்ளி புரோஷுர் (ஆங்கிலம்) தவிர, 32 பக்கங்களைக் கொண்ட மற்ற புரோஷுர்களில் எதையாகிலும் ரூ3-க்கு அளிக்கலாம். அக்டோபர்: படைப்பு புத்தகத்தை ரூ30-க்கு அளிக்கலாம். சிறிய அளவு புத்தகம் ரூ15. (இது கிடைக்காத மற்ற மொழிகளில் என்றும் வாழலாம் அல்லது பைபிள் கதை புத்தகம் பயன்படுத்தலாம்.) நவம்பர்: ஓராண்டு சந்தா விழித்தெழு! அல்லது காவற்கோபுரம் அல்லது இரண்டு பத்திரிகைகளுக்கும். ஒவ்வொன்றும் ரூ40. ஆறுமாத சந்தாவும் மற்றும் மாதாந்தர பத்திரிகைகளுக்கும் ஓராண்டு சந்தா ரூ20. (மாதாந்தர இதழ்களுக்கு ஆறுமாத சந்தா கிடையாது.) டிசம்பர்: புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள், திரித்துவம் அல்லது இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் புரோஷுருடன் சேர்த்து ரூ43. ஜனவரி: இளைஞர் கேட்கும் கேள்விகளும்—பலன் தரும் விடைகளும் புத்தகத்தை ரூ15-க்கு அளிக்கவும். (கையிருப்பில் இல்லாத இடங்களில் 192-பக்க பழைய புத்தகங்கள் இரண்டு ரூ10. ஒன்று ரூ5-க்கு அளிக்கவும்.) பிப்ரவரி, மார்ச்: பழைய 192-பக்க புத்தகங்களின் விசேஷ அளிப்பு, இரண்டு ரூ10. ஒன்று ரூ5.
● மாவட்ட மாநாடு மாற்றங்கள்: கொய்லானில் நடைபெறுவதற்குப் பதிலாக மாநாடு திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 27-30 நடைபெறும். கன்னனூரில் நடைபெற இருந்த மாநாடு தெல்லிச்சேரிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் தேதிகளில் மாற்றமில்லை, அதாவது டிசம்பர் 27-30, 1990.
● சங்கத்துக்கு எழுதப்படும் எல்லாக் கடிதங்களிலும் எப்பொழுதுமே சபையின் எண் மற்றும் சபையின் பெயர் சேர்க்கப்பட்டிருக்குமானால் அது வெகுவாய் போற்றப்படுகிறது. இது அலுவலகத்தில் உள்ள எங்களுடைய சில வேலைகளை எளிதாக்கும். மேலும் எந்தச் சபை எங்களுக்கு எழுதுகிறது என்று நாங்கள் நிச்சயமாயிருப்போம். முக்கியமாக, கணக்கு விவரம் சம்பந்தப்பட்ட எல்லாக் காரியங்களிலும் சபையின் மற்றும் தனித் தொகுதியின் எண் சேர்க்கப்பட வேண்டும்.
● பெரும்பாலான சந்தா சீட்டுகளில் எழுத்து தெளிவாக இல்லை. சில சமயங்களில் வீட்டுப் பெயரிலிருந்து சந்தா எடுத்திருப்பவரின் பெயரை வேறுபடுத்திக் காண்பது கடினமாயிருக்கிறது. ஒரு காற்புள்ளி சேர்க்கப்படுமானால், இக்காரியத்தில் அது உதவியாக இருக்கும். மேலும் ‘8’, ‘3’ போன்ற எண்களும் ‘B’ போன்ற எழுத்துக்களும் அடிக்கடி வித்தியாசம் காணமுடியாத அளவுக்கு இருக்கிறது. இதன் விளைவாக, பத்திரிகைகள் தவறான விலாசங்களுக்குச் சென்று, சந்தா செய்தவருக்கு தொடர்ந்து கிடைக்காமற் போகக்கூடும். கடைசியாக, திருத்தமாக இருக்கிறதா என்று பரிசோதித்தப் பின்பு எப்பொழுதும் பின்கோட் எண் இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
● நடத்தும் கண்காணியோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ செப்டம்பர் 1-ம் தேதியன்று அல்லது அதற்கு பின்பு கூடிய மட்டும் விரைவிலேயே சபையின் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும்.
● ஆகஸ்ட் மாத சபை அறிக்கையை தயாரித்த உடனே சபையின் நடவடிக்கைகளைக் குறித்து சங்கத்திற்குத் தெரியப்படுத்தும் அறிக்கை பாரத்தைப் (S-10) பூர்த்திசெய்து சங்கத்துக்கு அனுப்பும் முன்பு பிழையில்லாமலிருக்க இருமுறை கவனமாக சரிபார்க்க வேண்டும். பயனியர்களிடமிருந்து ஆகஸ்ட் மாத அறிக்கைகளைப் பெற்றவுடனே அந்தப் பாரத்தின் பின்பக்கத்திலுள்ள ஒழுங்கான பயனியர்களுக்குரிய தகவல் அறிக்கையை காரியதரிசி பூர்த்தி செய்யவேண்டும். இந்த மேற்சொன்ன தகவலை செப்டம்பர் 6-ம் தேதிக்குள் அனுப்பிவிடவும்.