கூட்டங்களை பயனுள்ளவையாக ஆக்குவதில்உங்கள் பாகம்
1 நமது கூட்டங்கள் யெகோவாவை மேலும் மேம்பட்ட விதத்தில் அறிந்துகொள்ள நமக்கு உதவிசெய்கின்றன. அவருடைய பிரமாணங்களையும் நியமங்களையும் நாம் புரிந்துகொள்ளுவதற்கும் அதன்படி வாழ்வதற்கும் அவை நம்மை உற்சாகப்படுத்துகின்றன. ஜீவனைக் காக்கும் இந்தப் பிரசங்க வேலையில் அதிக பலன்தரத்தக்க முறையில் பங்குபெறுவதற்கு கூட்டங்கள் நம்மை ஆயத்தம் செய்கின்றன. கடவுளுடைய புதிய ஒழுங்கில் நித்திய ஜீவனை அடைவதற்கான இலக்கை எட்டுவதற்கு அவை நமக்கு உதவிசெய்கின்றன. கூட்டங்களைப் பயனுள்ளவையாக ஆக்குவதில் நாம் நம்முடைய பாகத்தைச் செய்யும்போது கூட்டங்களில் ஒன்றுகூடி நாம் செலவழிக்கும் அந்த மணிநேரம் நமக்கு மிகுதியான நற்பயனை கொண்டுவரும்.
2 கூட்டங்களைப் பயனுள்ளவையாக ஆக்குவதற்கு மூன்று திறவுகோல்கள் இருக்கின்றன—தயாரித்தல், பங்குபெறுதல், மற்றும் நடைமுறையில் பொருத்துதல். இவை ஒன்றொடொன்று நெருங்கிய தொடர்புள்ளவை. நல்ல தயாரிப்பானது பங்குபெறுதலை சுலபமானதாயும் ஆனந்தமான அனுபவமாயும் ஆக்குகிறது. மகிழ்ச்சியும் ஆர்வமுள்ள விசுவாச கூற்றுகள் செவிகொடுப்போரை உற்சாகமூட்டி, உந்துவிக்கிறது. (எபே. 4:29) கூடிவரும் அனைவரும் அங்கு அளிக்கப்படும் தகவல்களைப் புரிந்துகொள்ளுகையில் மற்றும் தங்களுடைய சொந்த வாழ்க்கையிலும் சீஷராவதற்கு மற்றவர்களுக்கு உதவும் வேலையிலும் அதை நடைமுறை வழிகளில் பொருத்திப் பிரயோகிப்பது எப்படி என்பதை மதித்துணருவதற்கு உதவப்படுவார்களேயாகில் அவர்கள் அதைப் பயன்படுத்துவது பெரும்பாலும் கூடிய காரியமே.
காவற்கோபுர படிப்பும் சபை புத்தகப் படிப்பும்
3 காவற்கோபுர படிப்பும் சபை புத்தகப் படிப்பும் மிக முக்கியமான கூட்டங்களாகும். ஏனெனில் அவற்றின் மூலம் உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்கார வகுப்பு விசுவாச குடும்பத்தாரை போஷிக்கிறது. (மத். 24:45-47) சிந்திக்கப்படும் தகவல்களைப் படிப்பதற்கு நீங்கள் நேரத்தை ஒதுக்கி வைக்கிறீர்களா? கூட்டங்களில் பதில் சொல்வதற்கு நீங்கள் ஆயத்தமாக இருக்கிறீர்களா? தெளிவாகவே இந்த விஷயத்தில் நீங்கள் ஒரு முக்கிய பாகத்தை வகிக்கிறீர்கள்.
4 காவற்கோபுர படிப்பு, அல்லது சபை புத்தகப் படிப்பு தகவல்களை நீங்கள் கவனமாக படிப்பீர்களேயாகில் கொடுக்கிறதினால் வரக்கூடிய மிகுதியான சந்தோஷத்தில் பங்குகொள்ள நீங்கள் ஆயத்தமாக இருப்பீர்கள். (அப். 20:35) முக்கிய குறிப்புகளைக் கோடிடுவது உதவியாக இருப்பதாக அநேகர் காண்கின்றனர். இடக்குறிப்பு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள வேத வசனங்களை எடுத்து வாசிப்பதன் மூலமும் அவை எப்படி பொருந்துகின்றன என்று சிந்திப்பதன் மூலமும் விடைகளுக்கு வேதப்பூர்வமான ஆதாரத்தைப் பற்றிய புரிந்துகொள்ளுதலை நீங்கள் அடைவீர்கள். இப்பொழுது நீங்கள் உங்களுடைய சொந்த வார்த்தைகளில் பதிலளிக்கக்கூடுமா? அல்லது உங்களுடைய பதிலை நீங்கள் வாசிக்க வேண்டுமா? இந்தத் தேவராஜ்ய படிப்புகளின் முக்கியமான குறிகோளானது அந்தத் தகவல்களை உங்களுக்குச் சொந்தமானதாக ஆக்கிக்கொள்வதும் இருதய மதித்துணர்வுடனும் புரிந்துகொள்ளுதலுடனும் அதன் பேரில் செயல்படுவதுமேயாகும்.—நீதி. 2:5; 4:7, 8.
தேவராஜ்ய ஊழியப்பள்ளியும் ஊழியக்கூட்டமும்
5 பள்ளியிலே உங்களுக்குக் கொடுக்கப்படும் உங்கள் மாணாக்கர் பேச்சுகளை யெகோவாவிடமிருந்து வரும் நியமிப்பாக நோக்குகிறீர்களா? நீங்கள் அதை எப்படி தயாரிக்கிறீர்களோ அதன் மூலம் அதை வெளிக்காட்டுகிறீர்களா? அந்தத் தகவலை முதலில் நீங்கள் புரிந்துகொள்வதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றும் மனதை தொடும் விதத்தில் அதை அளியுங்கள். ஆனால் உங்களுக்கு ஒரு திட்டவட்டமான நியமிப்பு இல்லாவிடினும் அட்டவணையில் உள்ள பைபிள் அதிகாரங்களையும் ஒவ்வொரு வாரத்திற்காகவும் கொடுக்கப்பட்டுள்ள மற்ற தகவல்களையும் வாசிப்பதன் மூலம் படியுங்கள். ஊழியக் கூட்டத்துக்கும் அதே காரியம் செய்யப்பட வேண்டும். இது முன்னதாகவே செய்யப்படுமானால் அந்தத் தகவலை முதன் முறையாக அறிந்துகொள்ள பிரயாசப்படுவதற்கு மாறாக கூட்டங்களின்போது அங்கே என்ன வழங்கப்படுகிறதோ அந்தக் காரியங்கள் பேரில் நீங்கள் சுறுசுறுப்புடன் சிந்தனை செய்துகொண்டிருக்கலாம்.
6 ஊழியக்கூட்டத்தின் நடிப்புகளும் மாணாக்கர் பேச்சு மேடை அமைப்புகளும் நடைமுறைக்கு ஒத்ததாக இருக்கவேண்டும். எல்லாரும் எடுத்து பேசக்கூடிய அளவில் உள்ளூர் சூழ்நிலைகளைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். உங்களுடைய பாகத்தை நன்றாக ஒத்திகைப் பாருங்கள். அதோடு உங்களுடைய உடை மற்றவர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக அமையும் அளவுக்கு உடுத்துங்கள்.
7 நன்கு தயாரிக்கப்பட்ட ஒரு பகுதியாக இருக்கவேண்டும். உற்சாகமூட்டக்கூடிய விதத்தில் அதை அளிக்கவேண்டும் என்ற இலக்கை கொண்டிருங்கள். பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் தயார் செய்வதற்கும் சந்தர்ப்பம் வாய்க்கும்போது சொந்த வார்த்தைகளில் சொல்வதற்கும் உதவிசெய்யுங்கள். மெய்யாகவே, நேரத்தோடு வரவும், பங்குபெற ஆயத்தமாக இருக்கவும் எல்லாரும் தனிப்பட்ட அக்கறையை காண்பித்தால் நமது கூட்டங்கள் சபையாரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அளிக்கப்படும் இன்றியமையாத உந்துவிக்கும் தகவல்களால் நிறைந்திருக்கும். உங்களோடு கூடிவரும் மற்றவர்களுக்காக “சகலமும் பக்திவிருத்திக் கேதுவாய் செய்யப்படும்” அளவுக்கு இவ்விஷயத்தில் நீங்கள் உங்களுடைய பாகத்தைச் செய்வீர்களா?—1 கொரி. 14:26.