அறிவிப்புகள்
● பிரசுர அளிப்புகள்: செப்டம்பர்: பள்ளி புரோஷுர் (ஆங்கிலம்) தவிர, 32 பக்கங்களைக் கொண்ட மற்ற புரோஷுர்களில் எதையாகிலும் ரூ3-க்கு அளிக்கலாம். அக்டோபர்: படைப்பு புத்தகத்தை ரூ30-க்கு அளிக்கலாம். சிறிய அளவு புத்தகம் ரூ15. (இது கிடைக்காத மற்ற மொழிகளில் என்றும் வாழலாம் அல்லது பைபிள் கதை புத்தகம் பயன்படுத்தலாம்.) நவம்பர்: ஓராண்டு சந்தா விழித்தெழு! அல்லது காவற்கோபுரம் அல்லது இரண்டு பத்திரிகைகளுக்கும். ஒவ்வொன்றும் ரூ40. ஆறுமாத சந்தாவும் மற்றும் மாதாந்தர பத்திரிகைகளுக்கும் ஓராண்டு சந்தா ரூ20. (மாதாந்தர இதழ்களுக்கு ஆறுமாத சந்தா கிடையாது.) டிசம்பர்: புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள், திரித்துவம் அல்லது இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் புரோஷுருடன் சேர்த்து ரூ43. ஜனவரி: இளைஞர் கேட்கும் கேள்விகளும்—பலன் தரும் விடைகளும் புத்தகத்தை ரூ15-க்கு அளிக்கவும். (கையிருப்பில் இல்லாத இடங்களில் 192-பக்க பழைய புத்தகங்களின் விசேஷ அளிப்பு, இரண்டு ரூ10. ஒன்று ரூ5-க்கு அளிக்கவும்.) பிப்ரவரி, மார்ச்: பழைய 192-பக்க புத்தகங்களின் விசேஷ அளிப்பு, இரண்டு ரூ10. ஒன்று ரூ5.
● மூன்று புத்தக விவரப்பட்டியல் நமூனாக்கள் ஒவ்வொரு சபையும் பெற்றிருக்க வேண்டும். செப்டம்பர் 1-க்குள் அளிப்பு புத்தகங்களின் சரியான எண்ணிக்கை கணக்கு எடுத்திருக்க வேண்டும். இந்த நமூனாக்களை தயவுசெய்து முழுவதுமாக பூர்த்தி செய்து செப்டம்பர் 6, 1990-க்குள் அசல் நமூனாவை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். உங்களுடைய பதிவுகளுக்காக ஒரு நகலை வைத்துக்கொள்ளுங்கள். மூன்றாவது நகல் கணக்கெடுப்பின்போது எழுதுவதற்கு உபயோகித்துக் கொள்ளலாம்.
● எல்லாப் பிரஸ்தாபிகளும் தங்கள் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கான சந்தாக்களை சபைகள் மூலம் புதுப்பிக்க வேண்டும். பிரஸ்தாபிகள் தங்கள் பிரசுரங்கள் மற்றும் பிற தேவைகளுக்கான தனிப்பட்ட ஆர்டரை நேரடியாக இந்தியா கிளைக்காரியாலயத்திற்கு அனுப்புவதற்கு பதிலாக சபைகள் மூலம் அனுப்பினால் மிக உதவியாக இருக்கும்.
● நோபாலி மொழியில் காவற்கோபுர பத்திரிகைக்கும் கன்னடத்தில் விழித்தெழு! பத்திரிகைக்கும் விநியோகிப்பவர்களின் ஆர்டரை சபைகள் அனுப்பலாம். இரண்டுமே மாதாந்தர பத்திரிகைகளாக அச்சிடப்படும். இந்தப் புதிய வெளியீடுகளுக்காக பொது மக்களிடம் சந்தாக்கள் பெறலாம்.
● விலாச மாற்றத்தை சபைகள் கேட்கும்போது, இரண்டு மாதங்களுக்கு முன்பு அடித்த விலாச லேபல்கள் பேரில் பத்திரிகைகள் அச்சடிக்கப்படுவதால் பத்திரிகைகளை அனுப்புவதற்கு பழைய விலாசங்கள் இன்னும் இரண்டு மாதங்களுக்கு உபயோகிக்கப்படும் என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும். இந்த இரண்டு மாதங்களில் பத்திரிகைகள் பழைய விலாசத்திற்கே போய் சேரும். உங்களுடைய தபால் நிலையத்திற்கு இதைச் சொல்லி மாற்றி அனுப்ப வேண்டிய புதிய விலாசத்தை அவர்களுக்குக் கொடுக்காவிட்டால் பத்திரிகைகள் சங்கத்திற்கு திருப்பி அனுப்பப்படும். இதனால் சங்கம் மறுபடியும் கூடுதல் தபால் செலவு செலுத்த வேண்டியதாகிறது. அருமையான பத்திரிகைகளை சபை கிடைக்காமல் இழக்க நேரிடுகிறது.
● வருடாந்தர புத்தகங்கள் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படுவதால் புரூக்லினுக்கு ஆர்டர் போகும்போது அனுப்பப்படும் பழைய விலாசத்திற்கே அவைகள் அனுப்பப்படும். எனவே இந்தப் பிரசுரத்தை நீங்கள் ஆர்டர் செய்ததற்கும் பெறுவதற்கும் இடையே உள்ள காலத்தில் விலாச மாற்றம் செய்தால், நீங்கள் ஆர்டர் செய்ததை பெறுவதற்கு உங்களுடைய புதிய விலாசத்தை பழைய தபால் நிலையத்தில் தயவுசெய்து விட்டுச் செல்லுங்கள்.
● செப்டம்பர் 1, 1990 முதல் பத்திரிகை மற்றும் பிரசுர விலைகளில் சில மாற்றங்கள் அமுலுக்கு வரும். இம்மாற்றத்தின் காரணமாக உங்களுடைய சபை கணக்கில் ஈடுசெய்யும் தொகை கூட்டப்படும். விலை உயர்வை குறிப்பிடும் நமுனாக்கள் ஒவ்வொரு சபைக்கும் அனுப்பி வைக்கப்படும்.
● மறுபடியும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:
கிரேக்க வேதாமங்களின் கிங்டம் இன்டர்லீனியர் மொழிபெயர்ப்பு —ஆங்கிலம்
“வேதவாக்கியங்களெல்லாம் தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்டது மற்றும் பிரயோஜனமுள்ளது” —ஆங்கிலம்
வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! —ஆங்கிலம்
நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் (சிறியது) —ஆங்கிலம்
உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் —ஆங்கிலம், மலையாளம்
மகிழ்ச்சி—அதை எவ்வாறு கண்டடைவது —ஆங்கிலம்
பெரிய போதகருக்கு செவிகொடுத்தல் —ஆங்கிலம்
புதிய பூமிக்குள் தப்பிப்பிழைத்தல் —ஆங்கிலம்
தேவராஜ்ய ஊழியப்பள்ளி உதவி நூல் —ஆங்கிலம்
மிகச்சிறந்த வாழ்க்கை முறையை தெரிந்துகொள்ளுதல் —ஆங்கிலம்
நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் —உருது
பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! —ஹிந்தி, தெலுங்கு, உருது
“ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி” —பெங்காலி, கன்னட கோங்கனி*
● கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
திருத்துவத்தை நீங்கள் நம்ப வேண்டுமா? —கன்னடம், லூஷாய்
விழித்தெழு! புரோஷுர் எண் 8/1 —ஹிந்தி
யெகோவாவின் சாட்சிகள் நம்புவது என்ன (T-14) —கன்னடம், கன்னட கொங்கனி*, மலையாளம்
சமாதானமுள்ள புதிய உலகில் வாழ்க்கை (T-15) —கன்னடம், கன்னட கொங்கனி*
மரித்த அருமையானவர்களுக்கு என்ன நம்பிக்கை (T-16) —கன்னடம், கன்னட கொங்கனி*, மலையாளம்
இளைஞர் கேட்கும் கேள்விகளும்—பலன்தரும் விடைகளும் —மலையாளம், தமிழ்
*கோவன் கொங்கனியில் அல்ல, கன்னட கொங்கனியில் மட்டுமே கிடைக்கக்கூடியவை.
● கையிருப்பில் இல்லாத பிரசுரங்கள்:
யெகோவாவின் சாட்சிகள் ஒற்றுமையாய் கடவுளுடைய சித்தத்தைச் செய்தல் —மலையாளம்