தேவராஜ்ய ஊழியப் பள்ளி விமர்சனம்
ஜூலை 2, துவங்கி அக்டோபர் 15, 1990 வரை உள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின் பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் விமரிசனம் கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனி தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: விமரிசனத்தின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக, கேள்விகளின் முடிவில் விடைகளை எந்தப் பிரசுரத்தில் காணலாமென்று குறிப்பிடப்படுகிறது. காவற்கோபுரத்திலிருந்து எடுக்கப்படுகையில் எல்லாச் சமயங்களிலும் பக்கங்களும் பாராக்களும் கொடுக்கப்படுவதில்லை.]
பின்வரும் வாக்கியங்களைச் சரி அல்லது தவறு என்பதாக பதிலளிக்கவும்:
1. பவுலிடமிருந்து தீமோத்தேயு கற்றுக்கொண்ட காரியங்கள் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தப்படக்கூடாதவை. [si பக். 236 பா. 6]
2. தன்னுடைய இறுதித் தீர்ப்பையும் மரணதண்டனையையும் எதிர்பார்த்திருந்த பவுல் தீமோத்தேயுவை தன்னிடத்தில் சீக்கிரமாய் வரும்படி இரண்டுமுறை வற்புறுத்தினான். வரும்போது தன்னுடன் மாற்குவை அழைத்து வரும்படியும் துரோவாவில் விட்டுவந்த சுருள்களைக் கொண்டுவரும்படியும் சொன்னான். [si பக். 235 பா. 2, 3]
3. எபிரேயருக்கு எழுதின நிருபத்தில் பவுலின் பெயர் காணப்படாதபோதிலும் அவனே அதை எழுதினான் என்பதில் சந்தேகமிருக்க முடியாது. [si பக். 241 பா. 2, 4]
4. எபிரெயர் புத்தகமானது ஆழமான ஆவிக்குரிய சத்திய விளக்கங்கள் அடங்கியதாக இருந்தபோதிலும் யூத சகோதரர்களின் அனுதின வாழ்க்கையில் அது சொற்ப நடைமுறை பயனையே கொண்டதாக இருந்தது. [si பக். 242 பா. 9]
5. இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனாகிய பைபிள் எழுத்தாளன் யாக்கோபு இயேசுவினுடைய பூமிக்குரிய ஊழியத்தின்போது அவருடைய சீஷனாக இருக்கவில்லை. [si பக். 246 பா. 1]
6. பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே நாளின் அற்புதச் சம்பவங்கள் பிந்திய பிற்பகலில் நடைபெற்றது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL 90 5/1 பக். 29-ஐ பார்க்கவும்.]
7. மதமாறிய முதல் புறஜாதியான் கொர்நேலியுவின் முழுக்காட்டுதல் “எழுபது வாரங்களின்” முடிவைக் குறித்தது. (தானி. 9:24) [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL90 5/1 பக். 29-ஐ பார்க்கவும்.]
8. பிலிப்பு பட்டணத்தில் பவுல், பர்னபா ஆகியோரின் சாட்சி கொடுத்தல் பெரும் கலகத்திலும் அவர்கள் சிறையிலடைக்கப்படுவதிலும் பின்பு பூமியதிர்ச்சியினால் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதிலும் விளைவடைந்தது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL90 5/1 பக். 30-ஐ பார்க்கவும்]
9. எபேசுவில்தானே பவுல் மூப்பர்களைச் சந்தித்து தான் எப்படி அவர்களிடம் பகிரங்கமாகவும் வீடுகள் தோறும் உபதேசம் பண்ணினான் என்பதை பேசினான். [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL90 5/1 பக். 31-ஐ பார்க்கவும்.]
10. முழுக்காட்டுதலுக்குரிய தண்ணீர்தானே பாவங்களை கழுவுமானால் அப்பொழுது ஒவ்வொரு புதிய பாவத்திற்குப் பிறகும் ஒரு மனிதன் மறுபடியும் முழுக்காட்டப்பட வேண்டியதாக இருக்கும். (அப். 22:16) [வாராந்தர பைபிள் வாசிப்பு]
பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும்:
11. எபேசு பட்டணத்தில் தங்கியிருக்கும்படி ஏன் பவுல் தீமோத்தேயுவை உற்சாகப்படுத்தினார்? [si பக். 233 பா. 7]
12. பொ.ச. 64-லே ரோமாபுரியில் மாபெரும் தீயினால் கிறிஸ்தவர்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள்? [si பக். 233 பா. 7]
13. ஓடிப்போன அடிமை ஒநேசிமுவுக்கு எஜமான் யார்? [si பக். 239 பா. 1, 2]
14. விசுவாசத்துக்கு பவுல் கொடுக்கும் விளக்கம் என்ன? [si பக். 244 பா. 20]
15. மதபேதம் அல்லது மதப்பிரிவு என்பது என்ன? (அப். 24:5) [வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் விழித்தெழு! 1989 1/8 பக். 22-ஐ பார்க்கவும்.]
16. ரோமாபுரியில் தனது சிறையிருப்பின்போது பவுல் பைபிளின் புத்தக தொகுப்பைச் சேர்ந்த எந்த ஐந்து கடிதங்களை எழுதினான்? [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL90 5/1 பக். 31-ஐ பார்க்கவும்.]
17. பவுல் (சவுல்) எப்படி “முள்ளில் உதைத்துக் கொண்டிருந்தான் (அப். 26:14) [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL90 4/1 பக். 23-ஐ பார்க்கவும்.]
18. பவுல் ரோமாபுரிக்குச் செல்ல அதிகமாக விரும்பியதேன்? (ரோமர் 1:11, 12) [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL90 8/1 பக்.]
பின்வரும் கூற்றுகளைப் பூர்த்தியாக்கத் தேவையான சொல்லையோ சொற்றொடரையோ அளியுங்கள்:
19. முதல் தீமோத்தேயு பவுலால் -----------------இடைப்பட்ட ஆண்டுகளில் எழுதப்பட்டது. [si பக். 232 பா. 2]
20. தீத்துவுக்கு எழுதிய தன்னுடைய கடிதத்தில் கண்காணியானவன்”-----------------இருக்கவேண்டும்” என்று பவுல் சொன்னான். [si பக். 238 பா. 5]
21. மாம்சப் பிரகாரமான இஸ்ரவேலர்------------மற்றும்----------காரணமாக கடவுளுடைய ஓய்வு நாளிற்குள் பிரவேசிக்க முடியவில்லை. [si பக். 242 பா. 14]
22. ஆபிரகாமுக்குக் கடவுள் தந்த வாக்குத்தத்தம் இரண்டு மாறாத காரியங்களினால் நிச்சயமும் உறுதியும் செய்யப்பட்டது---------------------------[si பக். 243 பா. 14]
23. சுவிசேஷ எழுத்தாளர்களுள் இயேசு மனம்விட்டுப் பேசிய காரியங்களையும் தம்முடைய கடைசி இரவின்போது தமது அப்போஸ்தலரின் சார்பாக அவர் ஏறெடுத்து ஜெபங்களையும்----------மட்டுமே பதிய செய்கிறான். [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL90 2/1 பக். 26 பார்க்கவும்.]
24. அப்போஸ்தலர் 8:9-24-ன் பிரகாரம் பொறுப்புள்ள ஸ்தலங்களில் இருக்கும் கிறிஸ்தவர்கள்-------------பழிக்கு ஆளாகக்கூடாது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL87 11/1 பக். 11, பா. 9 பார்க்கவும்.]
பின்வரும் வாக்கியங்களில் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தேர்ந்தெடுங்கள்:
25. பழக்கமாய் பாவம் செய்யும் ஆட்களை (மூப்பர்கள் முன்பாக மட்டுமே; அந்தப் பாவத்தைப் பற்றி அறிந்து அனைவர் முன்பாகவும்; முழு சபையார் முன்பாகவும்) கடிந்து கொள்ள வேண்டும். [si பக். 234 பா. 13]
26. தீத்து (ரோமில்; கொரிந்துவில்; கிரேத்தாவில்) இருந்தபோது பவுல் தீத்துவுக்குக் கடிதம் எழுதினான். [si பக். 237 பா. 1]
27. இயேசு (புதிய உடன்படிக்கையின்; ஆபிரகாமிய உடன்படிக்கையின், பரலோக ராஜ்யத்துக்கான உடன்படிக்கையின்) மத்தியஸ்தராக) இருக்கிறார். [si பக். 243 பா. 17]
28. அப்போஸ்தலர் 12:1, 2-ல் பேசப்பட்டிருக்கும் ஏரோது, (மகா ஏரோது; ஏரோது அந்திப்பா; ஏரோது அகரிப்பா 1), [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL90 5/1 பக். 29-ஐ பார்க்கவும்.]
29. பவுலுடைய முதல் மிஷனரி பயணமானது (பிசீதியாவிலுள்ள அந்தியோகியாவில்; சிரியாவிலுள்ள அந்தியோகியாவில்; எருசலேமில்) ஆரம்பித்தது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL90 5/1 பக். 29-ஐ பார்க்கவும்.]
30. கொரிந்துவில் மிகுதியான ஆர்வம் வெளிக்காட்டப்பட்டபடியால் பவுல் அங்கே அந்தப் பட்டணத்தில் (18 மாதங்கள் ; 12 மாதங்கள்; 6 மாதங்கள்) தங்கியிருந்தான். [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL90 5/1 பக். 30-ஐ பார்க்கவும்.]
பின்வரும் வேதவாக்கியங்களை, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கூற்றுகளோடு பொருத்துக:
யோவான் 14:27; 20:31; அப்போஸ்தலர் 6:3; ரோமர் 1:16, 17; 6:12
31. தேவையிலிருப்பவர்களை பராமரிக்க ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் என்ன ஏற்பாடுகளைச் செய்தார்கள்? [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL87 12/1 பக். 10, பா. 2-ஐ பார்க்கவும்.]
32. கிறிஸ்தவர்கள் இயேசுவின் புதிய வாழ்க்கையை கொண்டிருப்பதானது தங்களுடைய மாம்ச பலவீனங்களை எதிர்த்து போராடும்படி கடமைப்படுத்துகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL90 8/1 பக். 30-ஐ பார்க்கவும்.]
33. அப்போஸ்தலனாகிய யோவான் தன்னுடைய சுவிசேஷத்தை எழுதியதன் குறிக்கப்பட்ட நோக்கம் இதுவே. [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL90 2/1 பக். 26-ஐ பார்க்கவும்.]
34. நீதிமான் விசுவாசத்தினாலே பிழைப்பான். [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL90 8/1 பக். 29-ஐ பார்க்கவும்.]
35. இயேசு தம்முடைய சீஷருக்குக் கொடுத்த சமாதானம் அவர்களுடைய இருதயங்களையும் மனங்களையும் சாந்தப்படுத்துவதாக இருந்தது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL90 2/1 பக். 27 பார்க்கவும்.]