சகலத்தையும் சிருஷ்டித்தவரை கனம்பண்ணுங்கள்
1 19-வது நூற்றாண்டின்போது மனிதவர்க்கத்தைக் குருடாக்க நயவஞ்சகமான ஒரு கொள்கையை—பரிணாமக் கொள்கையை—சாத்தான் பிறப்பித்தான். (2 கொரி. 4:4) சிருஷ்டிப்பைப் பற்றியும் பாவத்துக்குள் மனிதனின் வீழ்ச்சியைப் பற்றியும் பைபிளின் விவரப்பதிவை இந்தக் கொள்கை எதிர்த்து மறுப்பதாக இருக்கிறது. இயேசுவின் கிரய பலியையும், ராஜ்யம், மற்றும் நித்திய ஜீவன் பற்றிய பைபிளின் போதகத்தையும் அது அர்த்தமற்றதாக்கும். அது மட்டுமல்லாமல், பரிணாமக் கொள்கை வன்முறை, யுத்தம், இன ஒழுக்கக்கேடு, மற்றும் பற்பல சட்டவிரோத செயல்களுக்கும் வழிநடத்துகிறது. இந்த மரணத்துக்கேதுவான போதனையைக் குறித்து மனிதவர்க்கத்தை யார் எச்சரிப்பர்?
2 அக்டோபர் மாதம், நாம் அதைச் செய்வோம், ஏனெனில் நாம் யெகோவாவின் சிருஷ்டிப்புத்தன்மையை அறிவிப்பதில் சுறுசுறுப்பாக ஈடுபடுவோம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில், தெரு ஊழியத்தில், வேலை செய்யுமிடத்தில் இடைவேளையில், மற்றும் பள்ளியில், நாம் உயிர்—அது இங்கு எப்படி வந்தது? பரிணாமத்தின் மூலமா அல்லது படைப்பின் மூலமா? ஆங்கில புத்தகத்தை நாம் அளிப்போம். பரிணாமக் கொள்கை மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகரை எவ்வாறு கனவீனப்படுத்துகிறது என்பதை யாவரும் அறிந்துகொள்ள நாம் விரும்புவோம்.
திறம்பட்ட சாட்சி கொடுத்தல்
3 முறைப்படியல்லாத சாட்சி வேலையிலோ அல்லது வீட்டுக்கு வீடு வேலையிலோ, பரிணாமக் கொள்கையின் பேரில் அவ்வப்போது செய்திகளில் காணப்படும் சிலரின் பலமான கருத்துகளுக்கு நாம் கவனத்தை திருப்புவதன் மூலம் சம்பாஷணையைத் துவங்கலாம். பரிணாமக் கொள்கை பொது பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்பட வேண்டுமா கூடாதா என்ற கேள்வியின் பேரில் பல எண்ணங்கள் கூறப்பட்டிருக்கின்றன. இதன் சம்பந்தப்பட்ட விவாதங்களை, சில சமயங்களில் அதன் பேரில் வைராக்கியமான வாக்குவாதங்களையும்கூட ஒருவர் வாசித்தோ அல்லது கேள்விப்பட்டோ இருந்தபோதிலும், இந்தப் பொருளின் பேரில் நேருக்குநேர் எடுத்துரைக்கும் பைபிளின் ஒரு வாக்கியம் சந்தேகமில்லாமல் அவருக்கு அக்கறையுள்ளதாக இருக்கும். பின்பு எபிரெயர் 3:4-லுள்ள வாக்கியத்துக்குத் திருப்பவும். வசனத்தை வாசித்து சுருக்கமாக அதன் பேரில் குறிப்பு சொல்லவும்.
4 அந்த நபர் மதச்சாய்வுள்ளவராக காணப்பட்டால், மதப்பற்றுள்ளவர்களும் அதே சமயத்தில் பரிணாமத்தில் நம்புகிறவர்களும்கூட, நம்மைச் சுற்றி நாம் காணும் மகத்தான காரியங்களுக்குப் பின் இருக்கும் படைப்பின் வல்லமை, ஆள்தன்மையற்ற ஓர் “இயற்கை” அல்லது ஆள்தன்மையுள்ள “இயற்கையின் தாய்” என்ற ஒன்று என்பதாக அவற்றிற்கு கனத்தைக் கொடுக்கின்றனர் என்பதை நீங்கள் குறிப்பிடலாம். ஆகிலும் இந்த அகிலாண்டத்திற்கும் நம்முடைய மகத்தான நன்மையளிப்பவராகவும் மற்றும் சிருஷ்டிகராகவும் இருப்பவர் யார் என்பதைக் குறித்து பைபிள் நமக்குத் தெரிவிக்காமல் இல்லை. வெளிப்படுத்துதல் 4:11-க்குக் கவனத்தைத் திருப்பலாம். வசனத்தை வாசித்த பிறகு, இந்த விஷயத்தைக் குறித்து தான் என்ன நினைக்கிறார் என்று அவர் சொல்ல விரும்பலாம். படைப்பு புத்தகத்திலிருந்து இரண்டொரு குறிப்புகளை குறிப்பிட்டு காட்டி, பொருத்தமானால் அவர் அதை வாசிக்கும்படி உற்சாகப்படுத்தலாம்.
பள்ளியில்
5 யெகோவாவின் இளம் ஊழியர்களாகிய நீங்கள் யாவரும் உங்களுடைய படைப்பு புத்தகத்தை விமர்சனம் செய்து உடன் மாணவர்களுக்கும் உங்கள் உபாத்தியாயர்களுக்கும் அதில் அக்கறையைத் தூண்டுவதற்கு வழிகளை காண விரும்புவீர்கள். வெறுமென புத்தகத்தை தங்கள் மேஜையின் மேல் வைத்திருப்பது சம்பாஷணைகளைத் தூண்டுகிறது என்று சிலர் கண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் பள்ளி அதிகாரிகளையும் ஆசிரியர்களையும் பரிணாமக் கொள்கையைப் பற்றி பேச அணுகி, இதன் மூலம் அநேக புத்தகங்களை விநியோகிக்க முடிந்தது.
6 யாவரும் யெகோவாவை கனம்பண்ணும் ஓர் உலகத்தில் வாழும் எதிர்ப்பார்ப்பைக் குறித்து நாம் எல்லாருமே மகிழ்ச்சியடைகிறோம். வெளிப்படுத்துதலில், மகிமைப் பொருந்திய ஆவி சிருஷ்டிகள் யெகோவாவுக்கு முன்பாக குனிந்து, “கர்த்தாவே, [யெகோவாவே, NW] தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது” என்று சொல்வதை யோவான் கண்டான். (வெளி. 4:11) அக்டோபர் மாதம் நம்முடைய ஊழியத்தில் நாம் இதே வார்த்தைகளை தொனிப்போமாக!