மற்றவர்கள் காவற்கோபுரத்தை வாசிக்க உற்சாகப்படுத்துங்கள்
1 மே மற்றும் ஜூன் மாதத்தின்போது, சத்தியத்தை நேசிப்பவர்கள் காவற்கோபுரம் பத்திரிகையை ஒழுங்காக வாசிக்க நாம் உற்சாகப்படுத்த விரும்புவோம். இன்று பிரசுரிக்கப்படும் பத்திரிகைகள் எல்லாவற்றிலேயும், இது மட்டுமே பூமியில் இருக்கும் வருந்தத்தக்க நிலைமைகளைக் குறித்து பெருமூச்சுவிட்டழுகிறவர்களுக்குத் தேவையான அதிமுக்கியமான ஆவிக்குரிய உணவை அளிக்கிறது என்பதை நம்முடைய சொந்த அனுபவம்தானே நம்மை நம்பச்செய்திருக்கிறது.—எசே. 9:4.
2 நாம் முடிவின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் விரைவில் கடவுளுடைய ராஜ்யம் பூமிக்கு சமாதானத்தைக் கொண்டு வரும் என்பதையும் நிரூபிக்கும் பைபிள் தீர்க்கதரிசனத்தை புரிந்து கொள்ள காவற்கோபுரம் நமக்கு உதவியிருக்கிறது. மற்றவர்களின் உயிர்களுக்கான நமது உண்மையான அக்கறை, இந்த மகத்தான நம்பிக்கையை அவர்களோடு பகிர்ந்து கொள்ள நம்மை உந்துவிக்கிறது. அநேக நேர்மையான இருதயமுள்ள நபர்கள் இரட்சிப்புக்காக கூட்டிச்சேர்க்கப்படுவதை காண்பதன் மூலம் நாம் உற்சாகப்படுத்தப்படுகிறோம்.—யோவான் 10:16.
3 “நீங்கள் நினைப்பதைவிட பிந்திவிட்டதா?” என்பது ஏப்ரல் 1, 1991 காவற்கோபுரம் இதழில் உள்ள கட்டுரைகள் ஒன்றின் சிந்தனையைத் தூண்டும் தலைப்பாகும். “சமாதானம் உண்மையில் எப்பொழுது வரும்?” என்ற தலைப்பையுடைய ஒரு கட்டுரையை ஏப்ரல் 15 இதழ் சிறப்பித்துக் காட்டுகிறது. தற்போதைய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளாகிய, “உலக சமாதானம், அது அருகாமையில் இருக்கிறதா?” என்பதோடு இந்தக் கட்டுரைகள் நன்றாக இணைக்கப்படலாம். வீட்டுக்காரர் நற்செய்தியில் உண்மையான அக்கறையுடையவராயிருக்கிறரா என்பதை நிர்ணயிக்க, அவரை ஓர் அனலான, சிநேகபான்மையான பைபிள் கலந்தாலோசிப்புக்குள் உட்படுத்துங்கள். கலந்தாலோசிப்பின் கீழ் இருக்கும் பொருளைப் பற்றிய அவருடைய புரிந்து கொள்ளுதலை விரிவாக்க தற்போதைய பத்திரிகையில், இருக்கும் கட்டுரைகள் எவ்வாறு வீட்டுக்காரருக்கு உதவும் என்பதைக் காண்பிக்க முன்பாகவே தயாரிப்பதையும் மற்றும் தயாராக இருப்பதையும் இது தேவைப்படுத்துகிறது.
4 தபால் மூலம் அனுப்புவதற்கு தன் விலாசத்தை நம்மிடம் கொடுக்கும் எவருக்கும் பத்திரிகைகளை அனுப்புவதில் நாம் அக்கறையுள்ளவர்களாயில்லை. நற்செய்தியை பிரசங்கிப்பதும் மற்றும் சீஷர்களை உண்டுபண்ணுவதும் தான் நம்முடைய வேலை என்பதை நினைவில் வையுங்கள். (மத். 24:14; 28:19, 20) எப்பொழுதாவது சில கட்டுரைகளை மட்டும் வாசித்து மகிழும் ஓர் ஆளாக அவர் இருப்பாரேயானால், உங்கள் பத்திரிகை மார்க்கத்தில் அவருடைய பெயரை வைத்துக் கொண்டு, ஒழுங்காக தனிப்பட்ட சந்திப்புகளைச் செய்வது சிறந்ததாக இருக்கக்கூடும். அந்த நபரோடு உங்களுடைய ஒழுங்கான தொடர்பு அவருடைய அக்கறையை விருத்தி செய்து, எப்பொழுது அவர் தபால் மூலம் காவற்கோபுரத்தை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்வது பொருத்தமானதாக இருக்கும் என்பதை நாளடைவில் நிர்ணயிக்க உதவும்.
5 மே மற்றும் ஜூன் மாதங்கள், யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை வீட்டுக்கு வீடு பரப்புவதற்கும், அதோடு நாம் சந்திக்கும் ஜனங்களுக்கு சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கும் அநேக சந்தர்ப்பங்களை அளிக்கும். நம் பிராந்தியத்தில் இருக்கும் தாழ்மையான ஆட்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு தேவையான ஆவிக்குரிய போஷக்கை கொடுக்க யெகோவா நம் ஊக்கமான முயற்சிகளை தொடர்ந்து ஆசீர்வதிப்பார் என்று நாம் நிச்சயமாக நம்பிக்கையாயிருக்கலாம்.