கேள்விப் பெட்டி
● பிரஸ்தாபிகள் தாங்கள் வசிக்கும் பிராந்தியத்தை உடைய சபையோடு சேவை செய்ய ஏன் சிபாரிசு செய்யப்படுகிறது?
காரியங்களை ஒழுங்காகவும், தேவராஜ்ய வழியிலும் செய்வது முக்கியமாகும். அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: “தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார் . . . சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக் கடவது.”—1 கொரி. 14:33, 40.
போக்குவரத்து பிரச்னைகள், உலகப்பிரகாரமான வேலை அட்டவணைகள் அல்லது கண்காணிப்பதில் உதவிக்கான தேவை போன்ற காரணங்கள் நிமித்தமாக சில விதிவிலக்குகள் இருந்தபோதிலும், பொதுவாக எந்தச் சபையின் பிராந்தியத்தில் நாம் வசிக்கிறோமோ அந்தச் சபைக்கு ஆஜராவது சிறந்ததாய் இருக்கிறது. இது வெளி ஊழியத்தை வசதியாக்குகிறது. நம் சுற்று வட்டாரத்துக்கு வெளியே இருக்கும் ஒரு தொகுதியோடு வேலை செய்வதற்கு நாம் அதிக தூரம் பிரயாணம் செய்ய வேண்டியதில்லை. நம் சபையில் இருக்கும் மற்றவர்களோடு வேலை செய்வதற்கு இது நம்மை ஒரு மேலான நிலையில் வைக்கிறது, மேலும் புதிதாக அக்கறை காண்பிக்கும் ஆட்களை, அவர்களுக்கு அதிக வசதியாய் இருக்கும் கூட்டங்களுக்கு வழிநடத்த முடியும். தேவை ஏற்படும் சமயத்தில் நமக்கு உதவி செய்ய நம் பிராந்தியத்தில் இருக்கும் மற்ற சகோதரர்கள் மற்றும் சகோதரிகளோடு அது நம்மை ஒரு நெருங்கிய தொடர்பில் வைத்திருக்கும்.
செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்குள் வேலை செய்வதன் மூலம், ராஜ்ய அக்கறைகளை நாம் முதலில் வைக்கிறோம் என்பதை நாம் காட்டுகிறோம். (லூக். 16:10) ஒரு புதிய சபை அமைக்கப்பட்டாலோ அல்லது சபை புத்தகப் படிப்புகள் மாற்றியமைக்கப்பட்டாலோ, சில குறிப்பிட்ட நண்பர்களோடு இருக்க நாம் விரும்பலாம். ஆனால் அந்தப் புதிய ஏற்பாட்டை ஏற்றுக்கொள்வதன் மூலம், நாம் புதிய நண்பர்களை உண்டாக்கி, நம் தேவராஜ்ய கூட்டுறவுகளை விரிவாக்கலாம். மேலும் பிரஸ்தாபிகள் தாங்கள் கூட்டுறவு கொள்ளும் சபையின் பிராந்தியத்திற்குள் வசிக்கும்போது, மந்தையை மேய்ப்பதற்கு இது மூப்பர்களுக்கு சுலபமாயிருக்கிறது, சபையின் ஆவிக்குரிய நிலைமையை மேம்படுத்த முடிகிறது.