வெளி ஊழியத்தில் நம்முடைய ராஜ்ய ஊழியத்தை நிறைவேற்றுதல்
1 யெகோவாவின் பேரிலும் அயலான் பேரிலும் உள்ள அன்பு, ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிக்கும்படி நம்மை உந்துவிக்கிறது. திறமையுடன் சத்தியத்தைக் கையாளுவதன் மூலம், “தர்க்கங்களையும் தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும்” நாம் கவிழ்த்துப் போட முடியும். (2 கொரி. 10:5) இந்த விஷயத்தில் நமக்கு உதவி செய்ய காவற்கோபுர பிரசுர இன்டெக்ஸ் உருவாக்கப்பட்டிருக்கிறது.
2 வெளி ஊழியத்தில் நம்முடைய பிரசங்க வேலைக்கான சுட்டுக் குறியீடுகளுக்கு முக்கிய தலைப்பு “வெளி ஊழியம்.” நம்முடைய தனிப்பட்ட மனப்பான்மை, முன்னுரைகள், எதிர்ப்புகளை மேற்கொள்ளுதல், ஒவ்வொரு பிரசுரங்களுக்கும் அளிப்புகள், மறுசந்திப்புகள், பைபிள் படிப்புகள் ஆகியவை உட்பட ஒவ்வொரு அம்சமும் அங்கு சிந்திக்கப்பட்டிருக்கிறது. ஒரு குறிப்பை ஓரிரண்டு நல்ல அனுபவங்களோடு எடுத்துக் காட்ட நீங்கள் விரும்புவீர்களா? “அனுபவங்கள்” என்று மத்திபமாக்கப்பட்ட தலைப்பின் கீழ், உங்களுக்கு தேவையானது எதுவோ, அதை நீங்கள் காண்பீர்கள்.
3 முரணாயிருப்பது போல் தோன்றும் திட்டவட்டமான வசனங்களை எடுத்துக் காட்டி, பைபிள் தனக்குத் தானே முரண்பாடாயுள்ளது என்று யாராவது ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார்களா? “பைபிள் நம்பத்தக்கது,” என்பதன் கீழ், “முரண்பாடுகள்,” “ஒத்திசைவு” போன்ற உபதலைப்புகள், இந்த எதிர்ப்பின் பொது கலந்தாலோசிப்புகளுக்கு சுட்டுக் குறியீடுகளை கொடுக்கிறது. “வேத வசனங்கள் ஒத்திசைவாக்கப்பட்டிருக்கின்றன” என்ற உபதலைப்பின் கீழ், முரணாயிருப்பது போல் தோன்றும் தனிப்பட்ட வசனங்களின் விரிவான பட்டியலையும், அவைகளைத் தெளிவாக தீர்க்கும் சுட்டுக்குறியீடுகளையும் நீங்கள் காண்பீர்கள்.
4 சில இடங்களில், திரித்துவம், நரக அக்கினி, ஆத்துமா அழியாமை போன்ற கிறிஸ்தவ மண்டலத்தின் அடிப்படையான பொய்க் கோட்பாடுகளின் பேரில் உள்ள காரணகாரியங்களை நாம் கவிழ்த்துப் போட வேண்டும். இவைகள் ஒவ்வொன்றுக்கும் முக்கிய தலைப்புகள் இருக்கின்றன. “திரித்துவம்,” “ஆத்துமா அழியாமை” என்பவைகளின் கீழ் “ஆதரிப்பதற்கு தவறாகப் பொருத்தப்படும் வசனங்கள்” என்ற உபதலைப்பை நீங்கள் காண்பீர்கள். தனிப்பட்ட வசனங்களின் பேரில் உள்ள விளக்கங்களுக்கு இது உங்களை வழிநடத்தும். “நரகம்” என்பதன் கீழ் “வேதவசனங்கள் தவறாக விளக்கப்பட்டிருத்தல்” என்ற அதன் உபதலைப்பில், அதே போன்ற அம்சம் காணப்படுகிறது.
5 ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க நீங்கள் விரும்புகிறீர்களா? அல்லது முன்னேற்றமடையாமல் இருப்பது போல் தோன்றும் ஒரு படிப்பை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா? “பைபிள் படிப்புகள்” என்ற தலைப்பின் கீழ் “ஆரம்பிப்பது,” “—உதவுவது,” “கற்பிப்பது” போன்ற உபதலைப்புகள், நீங்கள் பைபிள் படிப்புகளை கண்டுபிடிக்கவும், படிப்படியாக முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்தவும் ஒவ்வொன்றுக்கும் சுட்டுக் குறியீடுகளைத் தருகின்றன. எப்போது ஒரு படிப்பை நிறுத்துவது என்பதை அறிய உங்களுக்கு உதவுவதற்கு, “பயனற்றவைகளை நிறுத்திவிடுதல்,” “இடையே நிறுத்திவிடுதல்” போன்ற உபதலைப்புகளை சிந்தியுங்கள்.
6 வெளி ஊழியத்தில் இன்னுமதிகமான சிலாக்கியங்களை நாடி எட்ட நீங்கள் விரும்புகிறீர்களா? “முழு நேர ஊழியம்,” “துணைப் பயனியர்கள்,” “பயனியர்கள்,” “மிஷனரிகள்,” “அதிகமான தேவையிருக்கும் இடங்களில் சேவை செய்தல்” போன்ற தலைப்புகள், அப்பேர்ப்பட்ட இலக்குகளை எவ்வாறு அடைவது என்பதன் பேரில் உள்ள நடைமுறையான பொருளுக்கும், அவ்வாறு ஏற்கெனவே செய்தவர்களால் அனுபவிக்கப்பட்ட மகிழ்ச்சியான அனுபவங்களுக்கும் உங்களை வழிநடத்தும்.
7 வெளி ஊழியத்தில் நம்முடைய ராஜ்ய ஊழியத்தை நிறைவேற்றுதல் மிகப்பெரிய திருப்தியைக் கொண்டு வருகிறது. (யோ. 4:34) இந்தச் சந்தோஷமான வேலையில் நீங்கள் பங்கு கொள்கையில், காவற்கோபுரம் பிரசுர இன்டெக்ஸ் உங்களுக்கு உதவி செய்யக்கூடும்.