மழைக்காலத்திலிருந்து தேவராஜ்ய விதத்தில் அதிகத்தைப் பெறுதல்
1 எதிர்காலம் அதற்காக தயாரிப்பவர்களுக்கே உரியதாய் இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாம் நம்முடைய நேரத்தை உபயோகிப்பது நமக்கு ஒரு சாதனையான உணர்ச்சியைக் கொண்டுவர வேண்டுமென்றால், நாம் முன்பாகவே திட்டமிட வேண்டும். இந்தியாவின் அநேக பகுதிகளில் மழைக்காலம் ஜூலை மாதத்துக்குள் ஆரம்பித்துவிடுகிறது. இந்தக் காலப்பகுதியில் நம்முடைய நேரத்தை தேவராஜ்ய விதத்தில் சிறந்த முறையில் உபயோகிப்பதற்கு உறுதிசெய்து கொள்ள நாம் இப்பொழுது என்ன திட்டங்களை போடலாம்?
2 மார்ச் 30, ஞாபகார்த்த தினத்திற்கு ஒரு பெரும் எண்ணிக்கையான புதிதாக அக்கறை காண்பிக்கும் நபர்கள் ஆஜரானார்கள். அவர்களுடைய ஆவிக்குரிய முன்னேற்றம் நம்மிடமிருந்து அவர்கள் பெற்றுக்கொள்ளும் உதவியின் பேரில் அதிகம் சார்ந்திருக்கிறது. மாவட்ட மாநாட்டுக்கு ஆஜராவது அவர்களுக்கு ஓர் ஆசீர்வாதமாக இருக்கும். அதனுடைய அநேக ஆவிக்குரிய நன்மைகளை அவர்கள் அறிந்துகொள்ளுமாறு செய்து, அவர்களுடைய பயண ஏற்பாடுகளுக்கு உதவிசெய்து அவர்களை நம்மோடு அல்லது மற்றவர்களோடு செல்ல அழைக்கலாம்.
3 மாநாட்டுக்குச் செல்வது, சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு கூடுதலான சந்தர்ப்பங்களை திறந்து வைக்கிறது. நவீன பிரசுரங்களை கூடவே எடுத்துச் செல்வது முன்னதாகவே திட்டமிடுவதில் உட்பட்டிருக்க வேண்டும். பெட்ரோல் நிலையங்கள், உணவகங்கள், உண்டிசாலைகளில் வேலைசெய்பவர்கள் மேலும் பொது போக்குவரத்துகளில் பயணம் செய்யும் ஜனங்களிடமும் நாம் சாட்சி கொடுக்கலாம். அநேக மகிழ்ச்சி தரும் அனுபவங்களை அனுபவிப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாகும்.
4 வருட கடைசியில் மாநாடுகள் நடத்தப்படும் இடங்களில் அநேக இளைஞர்கள் விடுமுறை நேரத்தோடு மாநாட்டு நேரத்தையும் சேர்க்கின்றனர். ஆரோக்கியமான பொழுதுபோக்கு ஓரளவு பயனளிப்பதாய் இருந்தாலும் இந்த நேரத்தில் ஒரு பகுதியை, துணைப் பயனியர் செய்வதைப் போன்று சாட்சி கொடுக்கும் வேலையில் ஒரு பெரிய பங்கை கொண்டிருக்க உபயோகிக்க முடியுமா? பெற்றோர்கள் இப்பொழுதே தங்களுடைய பிள்ளைகள் திட்டங்கள் போடுவதற்கு உதவ ஆரம்பிக்கலாம். வித்தியாசப்பட்ட குடும்பங்களிலிருந்து வரும் பிள்ளைகள் சேர்ந்து ஒன்றாக ஒரு தொகுதியாக வேலைசெய்யலாம். அவ்வாறு செய்ய முடியாதவர்கள், விசேஷமாக மத்திப வார ஊழியத்தில் அதிகமாகச் செய்ய முயற்சி செய்யலாம்.
5 சிலருக்கு தங்கள் தனிப்பட்ட வேலைகளிலிருந்து ஓய்வு கிடைக்கலாம், அப்பொழுது அவர்கள் மற்ற இடங்களுக்கு பிரயாணம் செய்வார்கள். உள்ளூர் சபையின் கூட்டங்களுக்கு ஆஜராவதற்கு திட்டங்கள் போட்டு, அவர்களோடு ஊழியத்தில் பங்கு கொள்ளும் போது, அது ஒரு சிறந்த உற்சாக பரிமாற்றத்தில் விளைவடையலாம். நீங்கள் ஒருவேளை மிக குறைவாக வேலைசெய்யப்பட்டிருக்கும் பிராந்தியம் அதிகமாக இருக்கும் ஓர் இடத்துக்குச் செல்லலாம். அங்கு ராஜ்ய நற்செய்தியை அடிக்கடி கேட்காத ஜனங்களுக்கு சாட்சி கொடுக்க உங்களால் இயலும்.
6 அநேக இளைஞர்கள் சமீபத்தில் பள்ளி படிப்பை முடித்திருக்கின்றனர், அல்லது விரைவில் முடிக்கப் போகின்றனர். இது அவர்களுடைய வாழ்க்கையின் இலக்குகளைப் பற்றிய ஆழ்ந்த அக்கறையை எழுப்புகிறது. தேவ ராஜ்ய இலக்குகளைச் சுற்றி இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை திட்டமிட்டால் ஆசீர்வதிக்கப்படுவர். (1 யோ. 2:15–17) ஒழுங்கான பயனியர் சேவையை எடுத்துக்கொள்வதற்கான தீர்மானம், அநேக விசேஷ சிலாக்கியங்களைச் சேர்க்கும் ஒரு திருப்தியான வாழ்க்கை முறைக்கு வழிநடத்தக்கூடும்.
7 ஆகையால் நம்மில் அநேகர் கிடைக்கக்கூடிய சில மிகைப்படியான நேரத்தை கொண்டிருப்போம். ‘காலத்தைப் பிரயோஜனப் படுத்திக்கொண்டு’ நாம் ஞானமாக செயல்படுவோமாக. (எபே. 5:15, 16) யெகோவாவின் சேவையில் நம்மை முழுவதுமாக ஈடுபடச் செய்யும் திட்டங்கள் நிரந்தரமான நன்மைகளை நமக்கும், மற்றவர்களுக்கும் கொண்டுவரும்.—1 தீமோ. 4:15, 16.