கோடைக்காக என்ன திட்டம் போட்டிருக்கிறீர்கள்?
1 நமக்கிருக்கும் நேரத்தை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்துவது என்பதை நாம் திட்டமிடும்போது, நம்முடைய பயனுள்ள இலக்குகளை பெரும்பாலும் அடைகிறோம் என்பது உண்மை அல்லவா? கோடைக்காலம் தேவராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்கு பலதரப்பட்ட வாய்ப்புகளை நமக்கு அளிக்கிறது. (நீதி. 21:5, NW) அவற்றில் சில யாவை?
2 கோடைக்காலத்தில், உங்களுடைய வெளி ஊழிய நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு நீங்கள் ஏன் திட்டமிடக்கூடாது? நீண்ட பகல்நேரங்கள் பிரசங்க வேலையில் அதிக நேரத்தை செலவிட அனுமதிக்கலாம். பள்ளி விடுமுறை, கோடையின் ஒரு மாதத்திலோ அல்லது அதற்கும் அதிகமான மாதங்களிலோ துணைப் பயனியர் செய்வதற்கு இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. ஆகஸ்டில் ஐந்து வாரயிறுதிகள் இருப்பதால், துணைப் பயனியர் செய்வதற்கு மற்றவர்களும்கூட முன்னதாகவே திட்டமிடலாம். இந்த ஆகஸ்டில், நம்முடைய ஊழிய ஆண்டை நிறைவு செய்கையில், ஒவ்வொருவரும் ஊழியத்தில் தங்களால் முடிந்தளவு முழுமையாக பங்கு கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
3 தங்கள் பிராந்தியத்தை முடிப்பதற்கு உதவி தேவைப்படுகிற அருகிலுள்ள சபைக்கு உதவி செய்ய நீங்கள் திட்டமிடுகிறீர்களா? உங்களுக்கு அருகிலுள்ள சபையின் தேவைகளைக் குறித்து வட்டாரக் கண்காணி மூப்பர்களுக்கு தெரியப்படுத்தலாம். இல்லையென்றால் எப்போதாவது செய்யப்படுகிற அல்லது இதுவரை எவரும் நியமிக்கப்படாத பிராந்தியத்தை முடிப்பதற்கு உங்களுக்கு தகுதியிருந்து, நீங்கள் சங்கத்துக்கு விண்ணப்பம் செய்ய விரும்பினால், அதைக் குறித்து மூப்பர்களுடன் பேசுங்கள். விடுமுறையின்போது வேறெங்காவது செல்வீர்களென்றால், அங்குள்ள சபையோடு சேர்ந்து ஊழியத்தில் பங்குகொள்வதற்கும் கூட்டங்களில் ஆஜராவதற்கும் திட்டமிடுங்கள். யெகோவாவின் சாட்சிகளாக இல்லாத உறவினர்களை சந்திக்க செல்வீர்களென்றால், அவர்களோடு சத்தியத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான வழிகளைக் குறித்து முன்னதாக தயாரியுங்கள்.
4 நம்முடைய திட்டத்தில் நாமனைவரும் மறக்காமல் சேர்த்துக் கொள்ளவேண்டிய ஒன்று “கடவுள் காட்டும் ஜீவ வழி” மாநாடு ஆகும். மாநாட்டின் ஒவ்வொரு நாளிலும் ஆஜராவதற்காக வேலையிலிருந்தும் பள்ளியிலிருந்தும் விடுப்பு பெற முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள். தங்குமிடத்துக்காக முன்பதிவையும் பயணத்திற்கான ஏற்பாட்டையும் முடிந்தளவு சீக்கிரமாக செய்வது நல்லது.
5 கோடைக்காக என்ன திட்டம் போட்டிருக்கிறீர்கள்? சரீரப்பிரகாரமாக புத்துணர்ச்சி பெற விரும்புவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உங்கள் வாழ்க்கையில் ராஜ்யத்தை தொடர்ந்து முதலாவதாக வைப்பதன்மூலம் ஆவிக்குரிய விதமாக ஊட்டம் பெறுவதற்கு கிடைக்கும் அதிமுக்கியமான வாய்ப்புகளை புறக்கணிக்காதீர்கள்.—மத். 6:33; எபே. 5:15, 16.