கோடைகாலத்துக்கு உங்கள் திட்டங்கள் யாவை?
நாம் கோடைகாலத்தைப் பற்றி யோசிக்கும்போது, உஷ்ணமான சீதோஷ்ண நிலை, நிம்மதியாக ஓய்வெடுப்பதற்காக திட்டங்கள் போடுவது அல்லது இன்பகரமாக உறவினர்களையும் நண்பர்களையும் சென்று சந்திப்பது போன்றவற்றைப் பற்றி நாம் யோசிப்போம். கோடைகால திட்டங்கள் போடுகையில், ராஜ்ய அக்கறைகளை முதலில் வைப்பதற்கு இங்கே சில நினைப்பூட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன:
◼ நீங்கள் விடுமுறைக்கு எங்காவது சென்றால், உள்ளூர் சபையின் கூட்டங்களுக்கு ஆஜராகவும் ஊழியத்தில் பங்குகொள்ளவும் திட்டமிடுங்கள். உங்கள் வெளி ஊழிய அறிக்கைகளை போடுவதற்கு நிச்சயமாயிருங்கள்; தேவைப்படுமானால், உங்கள் சபை காரியதரிசிக்கு தபாலில் அனுப்பி வையுங்கள்.
◼ சத்தியத்தில் இல்லாத உறவினர்களை சென்று சந்தித்தால், பலன்தரும் சந்தர்ப்ப சாட்சி கொடுக்க உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கலாம். உங்கள் பைபிளையும் பிரசுரங்களையும் எடுத்துச்செல்வதற்கு நிச்சயமாயிருங்கள்.
◼ பிராந்தியத்தை செய்துமுடிக்க உதவி தேவைப்படும் அருகாமையிலுள்ள சபைக்கு உதவிசெய்வதைப் பற்றி நீங்கள் யோசித்துப் பார்த்தீர்களா? உங்கள் பிராந்தியத்திலுள்ள தேவைகளைப் பற்றி தகவலைப் பெற மூப்பர்களிடமோ அல்லது வட்டார கண்காணியிடமோ பேசுங்கள்.
◼ இளைஞர்கள் தங்கள் ஊழிய நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு பள்ளி விடுமுறை நாட்கள் மிகச்சிறந்த வாய்ப்பை அளிக்கின்றன. இளைஞர்களே, நீங்கள் துணைப்பயனியர்களாக சேவிக்கமுடியுமா?
◼ வறட்சியான சீதோஷ்ண நிலையும் நீண்ட பகல்நேரமும் இருப்பதால், பெரும்பாலான மக்கள் வீட்டில் இருக்கும் மாலை நேரங்களில் கூடுதலாக செய்வதன் மூலம் நீங்கள் ஊழியத்தில் மிகச்சிறந்த பலன்களை பெறலாம்.
◼ சபை நடவடிக்கைகள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதைக் குறித்து மூப்பர்கள் விழிப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும், விடுமுறைக்குச் சென்றிருப்பவர்களின் பொறுப்புகளை கவனித்துக்கொள்வதற்கு வேறு யாரையாவது ஏற்பாடு செய்ய வேண்டும்.
“சுறுசுறுப்புள்ளவனின் சிந்தனைகள் எப்போதும் சுகத்தைத் தரும்,” என்பதை நினைவில் வையுங்கள். (நீதி. 21:5, NW) கோடைகால தேவராஜ்ய வாய்ப்புகளை முற்றிலும் பயன்படுத்திக்கொள்வதற்கு திட்டமிடுங்கள்.