உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/91 பக். 8
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—1991
  • இதே தகவல்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளி நன்மைகளைக் கொண்டுவருகிறது
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • பள்ளிக் கண்காணிகளுக்கு வழிமுறைகள்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • மிக முக்கியமானவற்றிற்கு நம்மை தயார்படுத்தும் ஒரு பள்ளி
    நம் ராஜ்ய ஊழியம்—2002
  • வெற்றிகரமான உலகளாவிய பள்ளி
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1991
km 7/91 பக். 8

கேள்விப் பெட்டி

● தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் மாணாக்கர்கள் எவ்வளவு அடிக்கடி நியமிப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்?

தேவ ராஜ்ய ஊழிப் பள்ளியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, பொது பேச்சாளர்களை உருவாக்குவதற்காகும். அந்தக் காரணத்துக்காக, தேவ ராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை, பெரும்பான்மையான பேச்சுக்கள் சகோதரர்களுக்கு நியமிக்கப்பட வேண்டும் என்ற ஏற்பாட்டைச் செய்கிறது.

என்றபோதிலும், கிறிஸ்தவ ஊழியத்தில் எல்லா யெகோவாவின் ஜனங்களும் திறம்பட்ட விதத்தில் பிரசங்கிக்கிறவர்களாகவும், கற்பிக்கிறவர்களாகவும் இருக்க பயிற்சி கொடுப்பது பள்ளியின் மற்றொரு முக்கிய குறிக்கோளாகும். இந்தக் காரணத்துக்காக, சகோதரிகளும்கூட சேருவது பொருத்தமானதாயிருக்கிறது.

பள்ளியிலிருந்து முழுமையாக பயனடைவதற்கு, அதில் சேர்க்கப்பட்டவர்கள் மாணாக்கர் நியமிப்புகளை ஒழுங்காக பெறவேண்டும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு நியமிப்பையாவது ஒவ்வொரு மாணாக்கரும் கொண்டிருக்க வேண்டும் என்று ஆலோசனை கொடுக்கப்படுகிறது. உள்ளூர் சூழ்நிலைமைகள் அனுமதிக்குமேயானால், சகோதரர்களுக்கு கூடுதலான நியமிப்புகள் கொடுக்கப்படலாம். போதனை பேச்சும், பைபிள் வாசிப்பின் சிறப்பு அம்சங்களும், ஒழுங்காக கொடுக்கும் மூப்பர்களுக்கு மாணாக்கர் பேச்சுகளும் நியமிக்கப்படுவது அவசியமில்லை.

ஏறக்குறைய பாதி நூற்றாண்டாக, தேவ ராஜ்ய ஊழியப் பள்ளி ஆவிக்குரிய முன்னேற்றம் அடைவதற்கும், ராஜ்ய செய்தியை எவ்வாறு மேலான விதத்தில் தாங்கள் தெரிவிக்கலாம் என்பதை கற்றுக்கொள்வதற்கும் ஆயிரக்கணக்கானோருக்கு உதவியிருக்கிறது. யெகோவா தேவனிடமிருந்து வந்த இந்த மகத்தான ஏற்பாட்டை முழுமையாக உபயோகிக்க எல்லாரும் உற்சாகப்படுத்தப்படுகின்றனர். அங்கீகரிக்கப்பட்டவர்களாக, “வெட்கப்படாத ஊழியக்காரனாயும், சத்திய வசனத்தை சரியாகக் கையாளுபவனாயும்” கடவுளுக்கு நம்மை அளிப்பது தான் நம்முடைய நோக்கமாய் இருக்க வேண்டும்.—2 தீமோ. 2:15.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்