தேவராஜ்ய செய்திகள்
◆ ஹங்கேரி 11,257 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையைக் கொண்டிருந்தது. ஒரு வருடத்துக்கு முன்பு இருந்த 5,400 பைபிள் படிப்புகள் 7,219 ஆக உயர்ந்தது.
◆ யுத்தத்தின் போது ஏவுகணை தாக்குதல்களால் சில சகோதரர்களின் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டது, ஆனால் ஒருவருக்கும் உடல் சேதம் ஏற்படவில்லை என்று இஸ்ரேல் அறிக்கை செய்கிறது.
◆ லைபீரியாவில் சில இடங்களில் சபை பிரஸ்தாபிகள் பெரும் இன்னல்கள் மத்தியிலும் வெளி ஊழியத்தில் சராசரியாக 20 மணிநேரத்துக்கு மேல் செலவிடுகின்றனர். கோட் டி வாயர் மற்றும் சீயரா லியோன் கிளைக்காரியாலயங்கள் மூலம் நிவாரண உதவி அன்பாக செய்யப்படுகிறது.
◆ நிக்கராகுவாவில் உள்ள சகோதரர்கள் ஒன்பது வருடங்களுக்குப் பின் முதல் முறையாக மனாகுவா என்ற இடத்தில் ஒரு பெரிய அரங்கத்தில் கூட முடிந்தது. ஆஜரானவர்களின் உச்ச எண்ணிக்கை 11,404 பேர் ஆக இருந்தது. 283 பேர் முழுக்காட்டப்பட்டனர்.