தேவராஜ்ய ஊழியப் பள்ளி விமர்சனம்
ஜூலை 1, துவங்கி அக்டோபர் 14, 1991 வரை உள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின் பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் விமரிசனம். கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத தனித் தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: விமரிசனத்தின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக, கேள்விகளின் முடிவில் விடைகள் எந்தப் பிரசுரத்தில் காணலாமென்று குறிப்பிடப்படுகிறது. காவற்கோபுரத்திலிருந்து எடுக்கப்படுகையில் எல்லாச் சமயங்களிலும் பக்கங்களும் கொடுக்கப்படுவதில்.]
பின்வரும் வாக்கியங்களைச் சரி அல்லது தவறு என்பதாக பதிலளிக்கவும்:
1. இயேசுவினாலும், கிறிஸ்து கிரேக்க வேதாகமங்களின் ஏவப்பட்ட எழுத்தாளர்களாலும் எடுக்கப்பட்ட மேற்கோள்கள், மூல பைபிளைச் சேர்ந்தவை என எபிரெய வேதாகமங்களின் புத்தகங்கள் ஒவ்வொன்றையும் நிலைநாட்டுவதற்கு ஒரு நேரடியான வழியை ஏற்படுத்துகின்றன. [si பக். 300 பா. 9 (1983 பதிப்பு, பக். 299 பா. 9)]
2. எபிரெய வேதாகமங்களின் மூல எழுத்துக்கள் பொ.ச.மு. 1513-லிருந்து பொ.ச.மு. 443-க்கு சிறிது காலத்துக்குப் பின்பு வரை எழுதப்பட்டன, ஆனால் தெரிந்த வரையில், இந்த மூல எழுத்துக்களில் எதுவும் இப்பொழுது இல்லை. [si பக். 305 பா. 2 (பக். 304 பா. 2)]
3. எபிரெயு வேதாகமங்களின் சுமார் 6,000 கைப்பிரதிகள் இன்று இருந்தாலும், பொ.ச. பத்தாம் நூற்றாண்டுக்கும் பழமையானது எதுவும் இல்லை. [7, si பக். 306 பா. 5 (பக். 305 பா. 5)]
4. ஆரம்பத்தில் செப்டுவஜன்டில் தெய்வீக நாமம் பல்வேறு இடங்களில் காணப்பட்டது. [si பக். 307 பா. 13 (பக். 306 பா. 13)]
5. முழு பைபிள் தற்போது பிரிக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களாகவும், வசனங்களாகவும் 16-ம் நூற்றாண்டின் ஸ்டெபனஸின் பிரெஞ்சு பைபிள் தான் முதலில் காட்டியது. [si பக். 318 பா. 19 (பக். 317 பா. 19)]
6. உபத்திரவத்தின் நான்கு காற்றுகளும் விடுவிக்கப்படும்போது, எல்லா ஆவிக்குரிய இஸ்ரவேலும் கடைசியாக முத்திரை போடப்பட்டிருப்பார்கள். அவர்களில் சிலர் அச்சமயம் மாம்சத்தில் உயிருடன் இருந்தாலும், அந்த முழு அங்கத்தினர்களின் ஸ்தானமும் பூர்த்தியாகி இருக்கும். (வெளிப் 7:3) [வாரந்தர பைபிள் வாசிப்பு; re பக். 116 பா. 9-ஐ பார்க்கவும்.]
7. வெளிப்படுத்துதல் 20:5எ பொதுவான உயிர்த்தெழுதலைக் குறிப்பிடுகிறது. [வாரந்தர பைபிள் வாசிப்பு; re பக். 290 பா. 15-ஐ பார்க்கவும்.]
8. ஆதியாகமம் 6:5, 6-ன் பிரகாரம் ஒரு சமயம் கடவுள் மனுஷனை சிருஷ்டித்ததற்காக வருத்தப்பட்டார். [வாரந்தர பைபிள் வாசிப்பு; g77 3/22 பக். 27-8-ஐ பார்க்கவும்.]
9. ஆபிரகாம் (பின்னர் சாராள்) தனது முதிர்ந்த வயதில் ஒரு குமாரனைப் பெறுவான் என்ற யோசனையைக் குறித்து நகைத்தபோது, அது விசுவாசமற்ற அவநம்பிக்கையான நகைப்பு அல்ல. (ஆதி. 17:17) [வாரந்தர பைபிள் வாசிப்பு; g77 3/22 பக். 27-8-ஐ பார்க்கவும்.]
10. ஆபிரகாம் தன் மகன் ஒரு கானானிய பெண்ணை விவாகம் செய்து கொள்ளக்கூடாது என்று வற்புறுத்தினார், ஏனென்றால் கானானியர் யெகோவாவின் வணக்கத்தார் இல்லை. (ஆதி. 17:17) [வாரந்தர பைபிள் வாசிப்பு; w89 7/1 பக். 25 பா. 6-ஐ பார்க்கவும்.]
பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும்:
11. பைபிளை படிப்பதும், பெரிய நேரப் பதிவாளராகிய யெகோவாவின் வேலைகளை ஆழ்ந்து சிந்திப்பதும், நம்மீது என்ன பாதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்? [si பக். 287 பா. 15 (பக். 286 பா. 15)]
12. வேதபாரகர்கள் அல்லது சோபரீம்கள் என்பவர்கள் யார்? [si பக். 310 பா. 17 (பக். 287 பா. 17)]
13. கோடெக்ஸ் என்றால் என்ன? [si பக். 315 பா. 5 (பக். 314 பா. 5)]
14. 19-ம் நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்து பைபிள் விநியோகிப்பு அதிகரிப்பதற்கு மிக அதிக அளவில் காரணமாக இருந்தது எது? [si பக். 287 பா. 15 (பக். 286 பா. 15)]
15. வெளிப்படுத்துதல் 9:16-19-ல் விவரிக்கப்பட்டிருக்கும் குதிரைச் சேனைகளாகிய இராணுவங்களால் படமாக குறிக்கப்படுவது யார்? [வாரந்தர பைபிள் வாசிப்பு; re பக். 152 பா. 14, 15-ஐ பார்க்கவும்.]
16. வெளிப்படுத்துதல் 17:13-ல் இருக்கும் “இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்” என்ற சொற்றொடர் எதை அர்த்தப்படுத்துகிறது? [வாரந்தர பைபிள் வாசிப்பு; re பக். 255 பா. 13-ஐ பார்க்கவும்.]
17. ஏதேன் தோட்டத்தில் இருந்த சம்பவம் சோதனையை எவ்வாறு ஏவாளுக்கு தெரிவித்தது? (ஆதி. 3:1) [வாரந்தர பைபிள் வாசிப்பு; w84 9/1 பக். 31 பார்க்கவும்.]
18. ஆதியாகமம் 9:5-ல் கடவுளு ஒரு மனிதனைக் கொன்ற மிருகத்திடமிருந்து ‘இரத்தத்தைத் திரும்ப கேட்பேன்’ என்று சொன்னது எவ்வாறு புரிந்து கொள்ளப்படவேண்டும்? [வாரந்தர பைபிள் வாசிப்பு; w75 பக். 639 பார்க்கவும்.]
19. ஈசாக்கு ரெபேக்காளை ஏன் தன்னுடைய சகோதரியாக தெரியப்படுத்தினான்? (ஆதி. 26:9) [வாரந்தர பைபிள் வாசிப்பு; w85 3/1 பக். 31 பா. 8-ஐ பார்க்கவும்.]
பின்வரும் கூற்றுகளைப் பூர்த்தியாக்கத் தேவையான சொல்லையோ சொற்றொடரையோ அளியுங்கள்:
20. “அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம்”-------------------ஆக இருந்தது. (நெகே. 2:1-8) [si பக். 291 பா. 18, 19 (பக். 290 பா. 18, 19)]
21. அப்போஸ்தலர்களில் கடைசி அப்போஸ்தலன்---------------ஏறக்குறைய பொ.ச. 100-ல் மரித்தான். [si பக். 293 பா. 29 (பக். 292 பா. 29)]
22. உண்மையான ஏவப்பட்ட வேதாகமம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட புத்தகங்களின் தொகுப்பு அல்லது பட்டியல் பைபிள்-----------------என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது. [si பக். 299 பா. 5 (பக். 298 பா. 5)]
23. பொ.ச.மு. ஏறக்குறைய நான்காம் நூற்றாண்டிலிருந்து பொ.ச. 6-ம் நூற்றாண்டு வரையாக இருந்த காலப்பகுதி-------------யுகம் அல்லது பொதுவான கிரேக்க மொழி யுகம் என்று அறியப்பட்டது. [si பக். 316 பா. 5 (பக். 314 பா. 6)]
24. கிடைக்கக்கூடிய ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ கிரேக்க வேதாகம கைப்பிரதிகளுள் மிகப் பழமையானது மான்செஸ்டர், இங்கிலாந்தில் ஜான் ரைலன்ட்ஸ் நூலகத்தில் உள்ள ஏறக்குறைய பொ.ச. 125 என்று தேதியிடப்பட்ட---------------------பப்பைரஸ் துண்டுகளாகும். [si பக். 316 பா. 11 (பக். 315 பா. 11)]
25. புதிய உலக மொழிபெயர்ப்பின் கிறிஸ்தவ கிரேக்க வேதாகம பாகம்------------------என்பவர்களின் தெளிவாக்கப்பட்ட கிரேக்க மூல உரையின் பேரில் சார்ந்திருக்கிறது. [si பக். 318 பா. 22 (பக். 317 பா. 22)]
பின்வரும் வாக்கியங்களில் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தேர்ந்தெடுங்கள்:
26. எபிரெய வேதாகமங்களின் தொகுப்பு (CANON) பொ.ச.மு. (பத்தாம்; ஐந்தாம்; இரண்டாம்) நூற்றாண்டின் முடிவில் உறுதி செய்யப்பட்டது. [si பக். 300 பா. 10 (பக். 299 பா. 10)]
27. மியுரட்டோரியன் முறிந்த துண்டுகள் என்று அறியப்பட்ட ஆரம்ப கால பட்டியல் வரிசை தொகுப்பு பொ.ச. (இரண்டாம்; ஐந்தாம்; எட்டாம்) நூற்றாண்டுக்குரியது என்று தேதியிடப்பட்டிருக்கின்றன. [si பக். 302 பா. 19 (பக். 301 பா. 19)]
28. புதிய உலக மொழிபெயர்ப்பின் எபிரெய பாகத்திற்கான அடிப்படை மூல உரை (இரண்டாவது ரபீனிய பைபிள்; C. D. கின்ஸ்பெர்கின் மூல உரை: கிட்டலின் பிப்ளியா ஹெப்ரேய்கா). [si பக். 312 பா. 28 (பக். 311 பா. 28)]
29. 1902-ல் காவற்கோபுர சங்கம் (தி எம்ஃபாடிக் டயக்லாட்; பெரியன் பைபிள்; அமெரிக்கன் ஸ்டான்டர்டு வெர்ஷன்)—ன் பதிப்புரிமையாளர்களாகவும், பிரசுரிப்பாளர்களாகவும் விநியோகஸ்தர்களாகவும் ஆனார்கள். [si பக். 323 பா. 10 (பக். 322 பா. 10)]
30. “பலமுள்ள தூதன்” தெளிவாகவே (காபிரியேல்; சாத்தான்; மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து)-ஐ குறிப்பிடுகிறது. (வெளி. 10:1) [வாரந்தர பைபிள் வாசிப்பு; re பக். 155 பா. 3-ஐ பார்க்கவும்.]
பின்வரும் வேதவாக்கியங்களை, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கூற்றுகளோடு பொருத்துக:
ஆதி. 15:1-4; ஆதி. 21:8-14; ஆதி. 22:17, 18; வெளி. 1:10; வெளி. 14:16
31. அடிமைகள், பிள்ளைகள் இல்லா தம்பதிகளின் உரிமையாளர்களாக ஆவதைப் போன்ற பழக்கங்கள் இருந்ததாக உறுதிப்படுத்தும் களிமண் பலகைகளை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். [வாரந்தர பைபிள் வாசிப்பு; w80 10/1 பக். 7-ஐ பார்க்கவும்.]
32. 1919 முதற்கொண்டு இயேசுகிறிஸ்துவும் அவருடைய தூதர்களும் மீதியானோரை அறுவடை செய்வதை முடித்திருக்கின்றனர், 1931-35 காலப்பகுதியிலிருந்து திரள் கூட்டத்தார் அறுவடை செய்யப்பட்டு வந்திருக்கின்றனர். [வாரந்தர பைபிள் வாசிப்பு; re பக். பக். 212 பா. 23-ஐ பார்க்கவும்.]
33. ஆபிரகாமின் மெய்யான வித்தாகிய இயேசு கிறிஸ்துவை இஸ்ரவேல் நிராகரித்ததன் காரணமாக எவ்வாறு பெரிய ஆபிரகாம் இயற்கையான இஸ்ரவேலரோடு உறவை முறித்துக் கொண்டார் என்பதை இது படம் பிடித்துக் காட்டுகிறது. [வாரந்தர பைபிள் வாசிப்பு; w89 7/1 பக். 21 பா. 16-ஐ பார்க்கவும்.]
34. இயேசு பரலோக ராஜாவாக முடிசூட்டப்படுவதோடு இந்தக் காலப்பகுதி ஆரம்பித்து, இயேசு இறுதியில் ராஜ்யத்தை தனது கடவுளும் தகப்பனுமானவருக்கு கொடுக்கும் போது முடிவடையும். [வாரந்தர பைபிள் வாசிப்பு; re பக். பக். 22 பா. 2-ஐ பார்க்கவும்.]
35. இது ஒரே சார்பாளரை மட்டும் நிபந்தனைக்குள்ளாக்கும் உடன்படிக்கை. [வாரந்தர பைபிள் வாசிப்பு; w90 2/1 பக். 11 பா. 8, 9-ஐ பார்க்கவும்.]