உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 9/91 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1991
நம் ராஜ்ய ஊழியம்—1991
km 9/91 பக். 7

அறிவிப்புகள்

● பிரசுர அளிப்புகள்: செப்டம்பர்: பள்ளி புரோஷுரை தவிர, ஏதாவது ஒரு 32-பக்க புரோஷுர் ரூ3. அக்டோபர்: படைப்பு புத்தகம் ரூ35. சிறிய அளவு புத்தகம் ரூ20. (இந்திய மொழிகளில்: என்றும் வாழலாம் அல்லது பைபிள் கதைகள் புத்தகம்.) நவம்பர்: விழித்தெழு! மற்றும்/அல்லது காவற்கோபுரம் சந்தாக்கள். டிசம்பர்: புதிய உலகமொழிபெயர்ப்பு பைபிள் மற்றும் “பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா?” (இந்திய மொழிகளில்: 192-பக்க விசேஷ அளிப்பு புத்தகங்கள் பாதி விலைக்கு.) ஜனவரி: என்றும் வாழலாம் புத்தகம். பிப்ரவரி, மார்ச்: இரண்டு பழைய 192-பக்க புத்தகங்களின் விசேஷ அளிப்பு ரூ12-க்கு. இந்திய மொழிகளில்: ஒரு பழைய 192-பக்க புத்தகம், ரூ6. ஏப்ரல்: இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகம் ரூ15-க்கு. (இம்மொழியில் புத்தகம் இல்லாவிட்டால், பழைய விசேஷ அளிப்பு புத்தகங்களை பாதி விலைக்கு அளிக்கவும்.)

● மாவட்ட மாநாடு தலைமைக்காரியலாய விலாச மாற்றம்:

தூத்துகுடி: A.D. Alexander, c/o P.J.D. Manuel, 4/85 4th St., Caldwell Colony, Tuticorin, T.N. 628 008.

திருவனந்தபுரம்: c/o P.C. Skaria, TC 13/202 Petta P.O., Trivandrum, Ker 695 024

● ஒரு சபையோடு கூட்டுறவுக்கொள்ளும் அனைவரும் தங்கள் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! சந்தாக்களை சபையின் மூலமாக புதுப்பிக்க வேண்டும். பிரசுரங்களுக்கும் மற்ற உருபடிகளுக்குமான எல்லா ஆர்டர்களையும் சங்கத்துக்கு தனிப்பட்டவர்களாக அனுப்புவதற்கு பதிலாக சபையின் மூலமாக அனுப்பி வைப்பது பிரயோஜனமாயிருக்கும்.

● சபை அறிக்கைகள் நேரத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஒரு சில அறிக்கைகள் அடுத்த மாதத்தில் சேர்க்கப்படுவதை இது அர்த்தப்படுத்தினாலும் கூடியவரையில், சபை அறிக்கைகள் மாதத்தின் 6-ம் தேதிக்குள் அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

● மூன்று புத்தக விவரப்பட்டியல் நமூனாக்களை ஒவ்வொரு சபையும் பெற்றுக்கொள்ளும். செப்டம்பர் 1-க்குள் அளிப்பு புத்தகங்களின் சரியான எண்ணிக்கை கணக்கு எடுத்திருக்க வேண்டும். இந்த நமூனாக்களை தயவுசெய்து முழுவதுமாக பூர்த்தி செய்து செப்டம்பர் 6, 1991-க்குள் அசல் நமூனாவை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். உங்களுடைய பதிவுகளுக்காக ஒரு நகலை வைத்துக் கொள்ளுங்கள். மூன்றாவது நகல் கணக்கெடுப்பின் போது எழுதுவதற்கு உபயோகித்துக் கொள்ளலாம்.

● மறுபடியும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:

விடுதலைக்கு வழிநடத்தும் தெய்வீக சத்திய பாதை —ஆங்கிலம், குஜராத்தி

வாழ்க்கைக்கு இன்னும் மிக அதிகமுண்டு! —ஆங்கிலம்

பாதுகாப்பான ஓர் எதிர்காலம்—நீங்கள் அதை எவ்விதம் கண்டடையலாம் —ஆங்கிலம்

● கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா? —பஞ்சாபி

வாழ்க்கைக்கு இன்னும் மிக அதிகமுண்டு! —பஞ்சாபி

மரணத்தின் மேல் வெற்றி—அது உங்களுக்கு சாத்தியமா? —பஞ்சாபி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்