சபை புத்தகப் படிப்பு ஏற்பாடு
பகுதி 2: தயாரிப்பதற்கும் பங்கு கொள்வதற்குமான தேவை
1 ஞானத்தை கண்டடைந்து விவேகத்தை பெற்றுக்கொள்ளும் நபர் சந்தோஷமுள்ளவர் என்று யெகோவாவின் வார்த்தை அறிவிக்கிறது. ஏனென்றால் அதனுடைய பலன் மிகுதியாயிருக்கிறது. (நீதி. 3:13, 14, 16–18) ஆவிக்குரிய ஞானம் விலைமதிப்புள்ளதாயும் ஜீவனைப் பாதுகாக்கக்கூடியதாயும் இருக்கிறது. கடவுளுடைய வார்த்தையிலிருந்து பெறும் அறிவை நல்ல அனுகூலமான விதத்தில் சுறுசுறுப்பான வணக்கத்திலும், அன்றாடக பிரச்னைகளைத் தீர்ப்பதிலும், வாழ்க்கையில் தன் இலக்குகளைக் குறித்து தீர்மானங்கள் செய்வதிலும் உபயோகிப்பதற்கு ஒரு கிறிஸ்தவனை அது தகுதியுள்ளவனாக ஆக்குகிறது.
2 கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் அதைப் பொருத்துவதற்கும் இந்த விதத்தில் ஞானத்திலும், ஆவிக்குரிய புரிந்து கொள்ளும் திறனிலும் வளருவதற்கு நமக்கு உதவி செய்ய சபை புத்தகப் படிப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், சபை புத்தகப் படிப்புக்கு ஒழுங்காக ஆஜராவது, ஞானத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நம்முடைய தனிப்பட்ட செயல் திட்டத்தின் தவிர்க்க முடியாத ஒரு பாகமாயிருக்க வேண்டும்.—நீதி. 4:7–9.
முழுமையாக தயாரியுங்கள்
3 முதல் நூற்றாண்டு சபையோடு கூட்டுறவு கொண்டிருந்த சிலர் சத்தியத்தை கற்றறிவதற்கு தங்களை சுறுசுறுப்பாக கடுமுயற்சியில் ஈடுபடுத்தவில்லை, முன்னேறிக்கொண்டு செல்லும் வெளிச்சத்தோடு தொடர்ந்து பின்பற்றிச் செல்லவில்லை. அவர்கள் கிறிஸ்துவில் குழந்தைகளாக இருந்தனர், ஆகையால் நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவர்களாயிருந்தனர். (எபி. 5:11–13) “முதிர்ச்சியை நோக்கி முன்னேறுங்கள்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் சபைக்கு அறிவுரை கூறினார். (எபி. 6:1, NW) மற்றவர்கள் சத்தியத்தை கலந்தாலோசிக்கும் போது தற்செயலாக செவிகொடுத்துக் கேட்பதைவிட இது அதிகத்தை தேவைப்படுத்துகிறது. நம்முடைய “தெளிவான சிந்திக்கும் திறனை” எழுப்புவதற்கு சிந்தனையும் ஆராய்ச்சியும் தேவைப்படுகிறது, நாம் நம்மை சுறுசுறுப்பான முயற்சியில் ஈடுபடுத்த வேண்டும்.—2 பேதுரு 3:1, 2; லூக். 13:24.
4 சபை புத்தகப் படிப்புக்காக முழுமையாக தயாரிப்பது நம்முடைய புரிந்துகொள்ளுதலை அதிகரிக்கிறது, பொருளுக்கான போற்றுதலையும் வளர்க்கிறது. என்றபோதிலும், திறம்பட்ட தயாரிப்பு, பாராக்களை வாசித்து, கேள்விகளுக்குரிய அடிப்படையான பதில்களை விரைவாக கோடிடுவதைக் காட்டிலும் அதிகத்தை தேவைப்படுத்துகிறது. அதன் அர்த்தத்தையும் நமக்கு தனிப்பட்ட விதமாக அதன் மதிப்பையும் தியானிப்பதன் மூலம் பொருளை நன்றாக சுவைப்பதற்கு நமக்கு நேரம் தேவைப்படுகிறது. மேற்கோளாக கொடுக்கப்பட்டிருக்கும் வேதவசனங்களை எடுத்துப் பார்த்து, அவைகள் எவ்வாறு பாராக்களில் இருக்கும் குறிப்புகளோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதை சிந்தியுங்கள். முழுமையாக புரிந்துகொள்ளப்படாத வார்த்தைகளை எடுத்துப் பாருங்கள்.
5 நம்மில் சிலருக்கு தனிப்பட்ட படிப்பு கடினமான வேலையாயிருக்கலாம், நிச்சயமாக அது நேரத்தை எடுக்கிறது; ஆனால், ஓ, அது எவ்வளவு பயனுள்ளதாயிருக்கிறது! அப்பேர்ப்பட்ட ஆழ்ந்த படிப்பின் விளைவுகளை பவுல் குறிப்பிட்டு இவ்வாறு சொன்னார்: “பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.” (எபி. 5:14) இப்படிப்பட்ட தனிப்பட்ட படிப்பு முதிர்ச்சிக்கு வளர நமக்கு உதவி செய்கிறது, அப்போது நாம் தீர்மானங்களை எதிர்ப்படும் போது சரியான போக்கை நிர்ணயிக்கலாம்.
பங்கெடுங்கள்
6 ஒவ்வொரு கூட்டத்திலும் பங்கெடுக்க நாம் முயற்சி செய்யவேண்டும். ஏன்? நம்முடைய நன்கு-தயாரிக்கப்பட்ட குறிப்புகள் நம்முடைய விசுவாசத்தின் வெளிக்காட்டாக மட்டுமல்லாமல் நம்முடைய சகோதரர்களை உற்சாகப்படுத்தி கட்டியமைக்கிறது. (ரோ. 10:10; எபி. 10:23–25) சபை புத்தகப் படிப்பில் சுறுசுறுப்பாக பங்கெடுத்தலும் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. அனுபவம் வாய்ந்தவர்கள், பிள்ளைகள், புதிதாக அக்கறை காண்பிப்பவர்கள் எல்லாரும் தாராளமாக குறிப்புகள் சொல்லும்போது அந்தத் தொகுதி பல்வேறுவிதமான குறிப்புகளை அனுபவிக்கிறது. இது எல்லாருக்கும் கல்விபுகட்டுவதாகவும் புத்துணர்ச்சியளிப்பதாகவும் இருக்கிறது.—km 4/86 பக். 3.
7 சபை புத்தகப் படிப்புக்காக நாம் ஊக்கமாக தயாரித்து, ஒழுங்காக ஆஜராகி, தாராளமாக பங்கெடுத்தால் ஞானத்தை தேடுவதற்கான நம்முடைய முயற்சி வெற்றிகரமானதாயிருக்கும். மேலும் “தேவனை அறியும் அறிவை நாம் கண்டடைவோம்.”—நீதி. 2:4, 5.