நவம்பர் மாத ஊழியக் கூட்டங்கள்
நவம்பர் 4-ல் துவங்கும் வாரம்
பாட்டு 199 (40)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும்.
20 நிமி: “தற்போதைய சம்பவங்களின் முக்கியத்துவத்தை மதித்துணர்தல்.” கேள்விகளும் பதில்களும். 6-வது பாராவை சிந்தித்த பிறகு, புதிய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளை உபயோகித்து ஒரு நடிப்பை அளியுங்கள். தற்போதைய விழித்தெழு! பத்திரிகையிலிருந்து திட்டவட்டமான பொருளை சிறப்பித்துக் காட்டுங்கள்.
15 நிமி: விழித்தெழு! பத்திரிகை எவ்வாறு நமக்கு தனிப்பட்ட விதமாக நன்மை அளித்திருக்கிறது. தகுதி வாய்ந்த சகோதரர் மூன்று அல்லது நான்கு பிரஸ்தாபிகளை பேட்டி காண்கிறார். பள்ளி வயதை உடைய ஓர் இளைஞனையாவது சேர்த்துக் கொள்ளுங்கள்.
பாட்டு 174 (13), முடிவு ஜெபம்.
நவம்பர் 11-ல் துவங்கும் வாரம்
பாட்டு 27 (7)
5 நிமி: சபை அறிவிப்புகள்,
15 நிமி: “வெளி ஊழியத்தில் முழு ஆத்துமாவோடு இருங்கள்—பகுதி 4.” பேச்சு. வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் உதவி செய்வதற்கும், நியாயமான ஊழிய இலக்குகளை வைப்பதற்கும் குடும்பத் தலைவர்களை உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—பிரசுரங்களை ஞானமாக உபயோகிப்பதன் மூலம்.” கேள்விகளும் பதில்களும். தகவலை சபைக்குப் பொருத்துங்கள்.
10 நிமி: “மனத்தாழ்மையால் ஏன் உடுத்துவிக்கப்பட வேண்டும்?” ஆங்கில காவற்கோபுரம், ஜூலை 15, 1991, பக்கங்கள் 27–30-ல் உள்ள கட்டுரையை அடிப்படையாகக் கொண்ட உற்சாகமூட்டும் பேச்சு. (இந்திய மொழிகளில்: ஆகஸ்ட் 1, 1990, காவற்கோபுரம் “உட்பார்வைக்காக யெகோவாவை நோக்கியிருங்கள்.”)
பாட்டு 92 (51), முடிவு ஜெபம்.
நவம்பர் 18-ல் துவங்கும் வாரம்
பாட்டு 164 (73)
10 நிமி: சபை அறிவிப்புகள், தேவராஜ்ய செய்திகள், கணக்கு அறிக்கை, நன்கொடைகள் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கும் கடிதங்கள். அக்டோபர் மாதத்துக்கான வெளி ஊழிய அறிக்கையை சபைக்கு தெரியப்படுத்துங்கள்.
20 நிமி: பள்ளியும் யெகோவாவின் சாட்சிகளும் என்ற புரோஷுரின் மதிப்பு. கூடுமானால் தகப்பனாயிருக்கும் மூப்பரால் பேச்சு. யெகோவாவின் சாட்சிகளின் நம்பிக்கையைப் பற்றி பள்ளி அதிகாரிகள் அறிமுகமாவதற்கும் பள்ளி வேலைகள் உட்பட்ட விஷயங்களில் கிறிஸ்தவ பெற்றோர்களுக்கும் இளைஞர்களுக்கும் உதவி செய்வதற்கும் புரோஷுரின் மதிப்பை சிறப்பித்துக் காட்டுங்கள். அச்சடிக்கப்பட்ட தகவல் அவ்வப்போது இளைஞர்களோடு விமர்சிக்கப்பட வேண்டும். பிரச்னைகளோ அல்லது கேள்விகளோ எழும்புகையில் வழிநடத்துதலுக்காக புரோஷுரை எடுத்துப் பாருங்கள். “சரியான ஒழுக்க நியமங்கள்,” “விடுமுறைகளும் கொண்டாட்டங்களும்” என்ற தலைப்புகளின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் திட்டவட்டமான தகவலுக்கு கவனத்தை திருப்புங்கள். (பக். 9–11, 17–21) முடிவாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பள்ளி படிப்பில் அக்கறை எடுத்துக் கொண்டு, பள்ளி நிர்வாகத்தோடு ஒத்துழைக்க வேண்டிய தேவையை சிறப்பித்துக் காட்டுங்கள்.—பக். 30–1.
15 நிமி: “நம்முடைய சொந்த உத்தரவாத சுமையை தாங்குதல்.” மூப்பர் குடும்பத் தொகுதியோடு கட்டுரையை கலந்தாலோசிக்கிறார். 1991 நிகழ்ச்சி நிரல் எவ்வாறு தங்களுடைய குடும்பத்துக்கு உதவி செய்தது என்பதை சபையில் இருக்கும் குடும்பத் தலைவர்களை கேட்கிறார். எல்லாரும் ஆஜராகும்படி உற்சாகப்படுத்துகிறார்.
பாட்டு 183 (24), முடிவு ஜெபம்.
நவம்பர் 25-ல் துவங்கும் வாரம்
பாட்டு 59 (31)
10 நிமி: சபை அறிவிப்புகள். இந்த வாரம் சாட்சி கொடுக்கும் வேலையில் உபயோகிப்பதற்கு பத்திரிகைகளிலிருந்து பேச்சுக் குறிப்புகளை சுருக்கமாக குறிப்பிடுங்கள்.
20 நிமி: “சபை புத்தகப்படிப்பு ஏற்பாடு–பகுதி 4.” கேள்விகளும் பதில்களும். புத்தகப்படிப்பு தொகுதியில் இருக்கும் ஒவ்வொருவர் பேரிலும் எல்லாரும் தனிப்பட்ட அக்கறையை காண்பிக்க வேண்டியதன் தேவையை சிறப்பித்துக் காட்டுங்கள்.
15 நிமி: “கிறிஸ்தவ ஆள்தன்மைகளை நம்முடைய பிள்ளைகளில் வளர்த்தல்,” ஆங்கில காவற்கோபுரம், ஜூலை 1, 1991, பக்கங்கள் 24–7-ல் இருக்கும் கட்டுரையை இரண்டு சகோதரர்கள் கலந்தாலோசிக்கின்றனர். பெற்றோர்களின் பங்கில் ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சி தேவை என்பதை சிறப்பித்துக் காட்டுங்கள். சபையின் தேவைகளுக்கு ஏற்ப விஷயங்களை பொருத்துங்கள். (இந்திய மொழிகளில்: ஏப்ரல் 1989, காவற்கோபுரம், “இந்த முடிவு காலத்தில் உத்தரவாதமுள்ள பிள்ளைப்பேறு.”)
பாட்டு 116 (108), முடிவு ஜெபம்.
டிசம்பர் 2-ல் துவங்கும் வாரம்
பாட்டு 107 (57)
10 நிமி: சபை அறிவிப்புகள். டிசம்பர் மாதத்துக்கான அளிப்பை சுருக்கமாக சிந்தியுங்கள்.
20 நிமி: தகுதியுடைய நபர்களை தேடி கற்பித்தல். பேச்சும் பேட்டிகளும். மத்தேயு 10:11-ஐ சிறப்பித்துக் காட்டுங்கள். வீடுகளில் ஜனங்களைப் பார்க்க இயலாதது அதிகரித்துக் கொண்டே போகும் பிரச்னையாயிருக்கிறது, அது நம்முடைய கனி கொடுக்கும் திறமையிலும், சந்தோஷத்தின் பேரிலும் ஓர் உறுதியான பாதிப்பை கொண்டிருக்கக்கூடும். என்ன செய்யப்படலாம்? (km 7/85 பக். 8) ஜனங்களை அவர்களுடைய தோட்டங்களில் அணுகுங்கள். வீட்டில் இல்லாதவர்களின் பதிவை வைத்திருங்கள், உடனடியாக திரும்பச் சென்று பாருங்கள். அப்படிப்பட்ட நபர்கள் மாலைகளில் வீடுகளில் இருப்பதை கண்டுபிடிப்பதில் சிலர் சிறந்த வெற்றியடைந்திருக்கின்றனர், ஆகையால் மாலை நேர ஊழியத்தில் பங்கு கொள்ளுங்கள். (km 7/87 பக். 8) தெரு ஊழியம் திறம்பட்டதாய் இருக்கக்கூடும். அக்கறை காட்டும் நபர்களை தெருவில் சந்தித்தால், அவர்களுடைய பெயரையும் விலாசத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். அவர்களுடைய வீடுகளில் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள். (மாலை நேர ஊழியத்தில் அல்லது தெரு ஊழியத்தில் நல்ல பலன்களைக் கண்ட இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகளை அல்லது பயனியர்களை சுருக்கமாக பேட்டி காணுங்கள்.) தகுதியுடையவர்களை கண்டுபிடிப்பதிலிருந்து நம்மை தடை செய்ய சாத்தான் எல்லா வழிகளையும் உபயோகிப்பான். நாம் அவர்களை தேடி கண்டு பிடிக்க வேண்டும். “ஆடுகள்” இயேசு கிறிஸ்துவுக்கு சொந்தமானதாயிருக்கிறது. அவைகளை கண்டுபிடித்து போஷிக்குமாறு அவர் நமக்கு கட்டளையிட்டிருக்கிறார். (யோ. 21:15–17) கூடுமானவரை ஒவ்வொரு வீட்டிலும் இருப்பவர்களை சென்றெட்டுவதற்கு வேண்டிய தேவையை மதித்துணர இது நமக்கு உதவி செய்கிறது.
15 நிமி: யெகோவாவின் சாட்சிகளின் வாழ்க்கை சரிதைகளிலிருந்து பயனடைதல். இரண்டு சகோதரர்களால் கலந்தாலோசிப்பு. அவ்வப்போது கடவுளுடைய நவீன கால ஊழியர்களின் வாழ்க்கை சரிதைகள் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் வெளி வருகிறது. அவைகள் காவற்கோபுர பிரசுர இன்டெக்ஸ்-ல் பெயர் மற்றும் கட்டுரையின் தலைப்பின் மூலம் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. (குறிப்பிட்ட கட்டுரைகளை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை உதாரணத்தோடு விளக்குங்கள்.) இந்தக் கட்டுரைகளை நாம் கவனமாக வாசித்து, அவைகளிலிருந்து பலத்தையும் உற்சாகத்தையும் பெற்றுக் கொள்வது முக்கியமானதாயிருக்கிறது. நம்முடைய சகோதரர்களையும், பைபிள் மாணாக்கர்களையும் உற்சாகப்படுத்துவதற்கு தகவலை உபயோகியுங்கள். ஆங்கில காவற்கோபுரம் ஆகஸ்ட் 1, 1991, பக்கங்கள் 25–29-ல் உள்ள “யெகோவாவின் மேஜையில் உட்காருவது என்னே சந்தோஷம்!” என்ற கட்டுரையை சுருக்கமாக விமர்சியுங்கள். அந்தக் கட்டுரையிலிருந்து நமக்கு உதவியாயிருக்கும் திட்டவட்டமான குறிப்புகளை சிறப்பித்துக் காட்டுங்கள். (எ) நம்முடைய வெளி ஊழியத்தில், (பி) சோதனைகளை சகிப்பதற்கு, (சி) யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் போற்றுவதற்கு, (டி) உலகளாவிய சகோதரத்துவத்தை போற்றுவதற்கு. “வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுபவர்களிடமிருந்து” நாம் அதிகமாக பயனடைகிறோம்.—எபி. 6:11, 12. (இந்திய மொழிகளில்: காவற்கோபுரம், ஜனவரி 1990, “யெகோவாவுக்குப் பிரியமான பலிகளைச் செலுத்துங்கள்.”)
பாட்டு 18 (81), முடிவு ஜெபம்.