உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 1/92 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1992
நம் ராஜ்ய ஊழியம்—1992
km 1/92 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள்: ஜனவரி: என்றும் வாழலாம் பெரிய புத்தகம் ரூ40, சிறியது ரூ20. பிப்ரவரி, மார்ச்: இரண்டு பழைய 192 பக்க புத்தகங்களின் விசேஷ அளிப்பு ரூ12. இந்திய மொழிகளில்: 192-பக்க பழைய புத்தகம் ஒன்று ரூ6. ஏப்ரல்: இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகம் ரூ15. (இது கிடைக்காத மொழிகளில் பழைய விசேஷ–அளிப்பு புத்தகங்களைப் பாதி விலைக்கு அளிக்கவும்.) மே மற்றும் ஜூன்: காவற்கோபுரம் பத்திரிகைக்கு ஓர் ஆண்டு சந்தா ரூ50. ஆறு மாத சந்தாக்கள் மற்றும் மாதாந்தர பத்திரிகைகளுக்கு ஓர் ஆண்டு சந்தாக்கள் ரூ25. (மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தாக்கள் கிடையாது.) சந்தா பெற்றுக்கொள்ளப்படாவிட்டால், இரண்டு பத்திரிகைகளும் ஒரு புரோஷுரும் ரூ8-க்கு அளிக்கப்படலாம்.

◼ 1992-ம் வருட ஞாபகார்த்த தினம் ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமையன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இருக்கும். அந்தத் தேதியில் வேறு எந்த சபைக் கூட்டங்களையும் நடத்தக் கூடாது.

◼ 1992-ம் வருடத்துக்குரிய புதிய வருடாந்தர வசனம், “நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள் . . . ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.”—ரோமர் 12:12. (எல்லாச் சபைகளும் புதிய வருடாந்தர வசனத்தைக் கூடுமானவரை விரைவில் எழுதும்படிச் செய்ய வேண்டும்.)

◼ 1993-ன் வருட ஞாபகார்த்த தினம் ஏப்ரல் 6 செவ்வாய்க் கிழமையன்று சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு இருக்கும். 1993-ம் வருட ஞாபகார்த்த ஆசரிப்புக்கான தேதி முன்பாகவே அறிவிக்கப்படுவதற்குக் காரணம் என்னவென்றால், இந்த நிகழ்ச்சி நிரலுக்கு மற்ற வசதிகளை உபயோகிக்க வேண்டிய தேவை இருக்குமேயானால் சகோதரர்கள் கிடைக்கக்கூடிய மன்றங்களை முன் பதிவு செய்வதற்கு இது உதவியாய் இருக்கும்.

◼ வரப்போகும் மாதங்களுக்குக் கூடுதலான பத்திரிகைகள் தேவைப்படும் சபைகள் தங்கள் ஆர்டர்களைப் பின்வரும் தேதிகளுக்குள் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும்: ஏப்ரல் மாத இதழ்கள் ஜனவரி 15-ம் தேதிக்குள், மே மாத இதழ்கள் பிப்ரவரி 15-ம் தேதிக்குள், ஜூன் மாத இதழ்கள் மார்ச் 15-ம் தேதிக்குள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்