ராஜ்ய விஸ்தரிப்பில்பங்கு கொள்ளுதல்
1 “என்னே வியக்கத்தக்க மாற்றங்கள்!” “எவ்வளவு விரைவில் அது நடந்தது!” “சோவியத் யூனியனில் இருக்கும் நம்முடைய சகோதரர்களுக்கு என்னே ஓர் ஆசீர்வாதம்!
2 ஆகஸ்ட் மாத கடைசியிலும், செப்டம்பர் மாத ஆரம்பத்திலும் சோவியத் யூனியனில் தொடர்ச்சியாக நடந்த மாநாடுகளின் போது இப்படிப்பட்ட குறிப்புகள் கேட்கப்பட்டன. இந்தக் கோடை காலத்தின் போது நடந்த ஏழு சோவியத் மாநாடுகளில் மொத்தம் 74,252 பேர் ஆஜரானார்கள், 7,820 பேர் முழுக்காட்டப்பட்டனர். கூடுதலாக, 2,95,924 பேர் கிழக்கத்திய ஐரோப்பிய மாநாடுகளில் ஒன்றுகூடி வந்தனர்.
3 நிச்சயமாகவே, முதல் நூற்றாண்டில் இருந்ததைப் போலவே, ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகள் ஒரு நிறைவேற்றத்தைக் கொண்டிருக்கின்றன: “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் . . . அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப் பண்ணினீர், அறுப்பில் மகிழ்கிறது போல உமக்கு முன்பாக மகிழுகிறார்கள்.” ஆம், ராஜ்ய விஸ்தரிப்பு முன்னேறிக் கொண்டே செல்கிறது! இயேசு கிறிஸ்து அரசாளுகிறார்! தீர்க்கதரிசனம் தொடர்ந்து சொல்கிறபடி: “அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை.”—ஏசா. 9:2, 3, 7.
4 கிழக்கத்திய ஐரோப்பாவில் இருக்கும் மகத்தான அதிகரிப்பைக் கவனித்துக் கொள்வதற்கு, ஜெர்மனியில் அச்சடிக்கும் வசதிகளைப் பெரிதாக்கி கட்டிடங்கள் கட்டுவதைத் தேவைப்படுத்தியிருக்கிறது. அங்கிருக்கும் நம்முடைய சகோதரர்கள் இந்த அதிகரிப்புக்கு ஆதரவு கொடுக்கச் சந்தோஷப்படுகின்றனர். இயேசுவின் பின்வரும் சரித்திரப்பூர்வ தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்திற்கு இது நேரடியாக பங்களிக்கிறது: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரகங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.—மத்.24:14.
5 ஐக்கிய மாகாணங்களில் இதற்கும் அதிகமான விஸ்தரிப்பு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் நடந்த கிலியட் பட்டமளிப்பு நிகழ்ச்சியின் போது, ஏப்ரல் மாதத்தில் ஆரம்பமாகும் அடுத்த கிலியட் பள்ளி இருமடங்காக, ஏறக்குறைய 50 மாணாக்கர்களைக் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டது! நியுயார்க் நகரில் உள்ள பாட்டர்சன் என்ற இடத்தில் ஏறக்குறை மூன்று ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் காவற்கோபுர கல்வி மையத்திற்குக் கிலியட் பள்ளி இறுதியில் மாற்றப்படும். “பாட்டர்சனில் காரியங்கள் எவ்வாறு இருக்கிறது?” என்று அனேகர் கேட்பது அச்சரியமாயில்லை.
6 பாட்டர்சன் வளாகம்: வேலை வெகு விரைவாகவும், அட்டவணையிட்ட நேரத்திற்கு முன்பாகவேயும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிவிக்க நாங்கள் சந்தோஷப்படுகிறோம். கல்வி மையத்திலிருந்து நடக்கும் தொலைவில் உள்ள இடத்தில் அமைந்திருக்கும் 150 அறைகள் கொண்ட ஹோட்டலான பாட்டர்சன் விடுதியில் உள்ள ஏழு கட்டிடங்கள், பாதைகளில் உள்ள எல்லா வேலைகள், வாகனம் நிறுத்தும் இடங்கள், தோட்ட அமைப்புகள் இவையனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டன. கல்வி மையம் கட்டி முடிக்கப்பட்டப் பிறகு, அருகாமையில் இருக்கும் விடுதி உலகம் முழுவதிலிருந்தும் வருகைதருபவர்கள் தங்கும் இடமாக பயன்படுத்தப்படும். ஆனால் இப்போது இந்த வளாகத்தைக் கட்டும் வேலையில் ஈடுபட்டிருக்கும் 300 பெத்தேல் குடும்ப அங்கத்தினர்கள் அங்கு தங்கியிருக்கின்றனர்.
7 இப்போது மொத்தமாக 650-க்கும் மேலான மனமுவந்து வேலை செய்யும் ஆட்கள் இவ்வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்களில் அனேகருக்கு அந்தச் சுற்று வட்டாரத்திலேயே தங்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன, அவர்கள் ஒவ்வொரு நாளும் வேலை செய்யும் இடத்துக்குப் பயணம் செய்கின்றனர். இந்த வருட ஆரம்பத்தில் நியு யார்க் டைம்ஸ் நிருபர் இவ்வாறு எழுதினார்: “இங்கு வடகிழக்கு பட்நான் கெளன்டியிலிருந்து தடம் 22-ஐ பார்த்தபடி ஒரு மலையின் மீது இருக்கும் நகரத்தைப் போன்று இந்த வளாகம் கட்டிட வேலைகளால் நிறைந்திருக்கிறது. பொறியாளர்கள், கட்டிடக் கான்கிரீட் வேலையாட்கள், மின் பணியாளர்கள், குழாய் முதலியவற்றைப் பொருத்திச் செப்பனிடுபவர்கள், தொழிலாளிகள்—இவர்கள் அனைவருமே சர்ச் அங்கத்தினர்கள். அவர்கள் பல வாரங்களிலிருந்து பல வருடங்கள் வரை மனமுவந்து வேலை செய்கின்றனர். இவர்களுக்குச் சம்பளம் கிடையாது. சிறிய செலவுகளுக்காக இவர்கள் ஒரு உதவிப் பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.”
8 கல்வி மையம் இறுதியில் 17 கட்டிடங்களைக் கொண்டதாயிருக்கும். ஒரு சமயலறை, வகுப்பறைகள், அலுவலகங்கள், வாகனங்கள் வைக்குமிடங்கள், 1,200 தங்கும் வசதியுடைய ஆறு கட்டிடங்கள், 1,600 பேர் உட்காரும் வசதியுடைய ஓர் உணவறை, ஓர் அரங்கம்—ஆகிய இவையனைத்தும் அதில் இருக்கும். இப்போது அந்த வளாகத்தின் இரண்டு கட்டிடங்கள் முடிக்கப்பட்டு விட்டன. நான்கு கட்டிடங்களில் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் 5 கட்டிடங்கள் 1992-ம் ஆண்டின் போது ஆரம்பிக்கப்படும். கடைசி ஆறு கட்டிடங்கள் கட்டும் வேலை பின்னர் ஆரம்பிக்கப்படும். கழிவு நீரைச் சுத்தம் செய்யும் நிலையத்துக்கும், நீர் பதப்படுத்தும் நிலையத்துக்கும் முறைபடியான ஒப்புதல் மாநில அதிகாரிகளிடமிருந்தும் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்தும் இந்தக் கோடை காலத்தின்போது பெறப்பட்டது ஒரு முக்கிய மைல் கல்லாகும்.
9 இத்திட்டத்தில் மனமுவந்து வேலை செய்பவர்கள் சிறந்த ஆவிக்குரிய நம்னமைகளைப் பெறுகின்றனர். உண்மையில், மனமுவந்து வேலை செய்பவர்காக தகுதி பெறும் அனைவரும் ஆவிக்குரிய ஆட்களாக இருக்க வேண்டும். (1 கொரி. 2:14, 15) ஒவ்வொரு நாள் காலையிலும், அந்நாளுக்குரிய பைபிள் வசனம் கலந்தாலோசிக்கப்டுவதை அனைவரும் அனுபவிக்கின்றனர். ஒரு வாரத்தில் மூன்று நாட்கள், வேலை செய்பவர்கள் மத்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு குறிப்பு சொல்லும்படி முன்னதாகவே நியமிக்கப்படுபவர்கள் கலந்தாலோசிப்பில் பங்குகொள்கின்றனர். மற்ற காலைகளில் ஒலிபரப்பின் மூலம் புரூக்ளின் தலைமையகத்திலிருந்து வரும் கலந்தாலோசிப்பைப் பாட்டர்சனில் இருப்பவர்கள் கேட்கின்றனர். கூடுதலாகத் திங்கட்கிழமை மாலைகளில் இத்திட்டத்தில் இருக்கும் எல்லா வேலையாட்களின் நன்மைக்காகவும் காவற்கோபுர படிப்பு நடத்தப்படுகிறது. என்றபோதிலும், நியு யார்க்கில் உள்ள பெரிய கட்டிடத் திட்டம் பாட்டர்சன் மட்டுமில்லை.
10 புரூக்ளினைப் பற்றியதென்ன? தங்கள் வசதிக்காக 30 அடுக்குக் கட்டிடத்தை எழுப்புவதற்கு சங்கத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆகஸ்ட் 30, 1990 அன்று அறிவித்தபோது, பெத்தேல் குடும்பம் சந்தோஷமாக கைதட்டி ஆரவாரித்தது. அதற்கு அடுத்த மாதம் அந்த இடத்தில் இருந்த பழைய ஒன்பது மாடி தொழிற்சாலையைத் தகர்க்கும் வேலை ஆரம்பமானது. பின்னர் தொழிற்சாலையை தகர்க்கும் வேலை ஆரம்பமானது. பின்னர் ஜனவரி 1991-ல் புதிய கட்டிடத்தின் 100-க்கு 200 அடி அஸ்திபாரத்தைப் போடுவதற்குத் தோண்டியெடுக்கும் வேலை அரும்பமானது. விரைவில் ஓர நடைபாதை மட்டத்திலிருந்து 30 அடிகளுக்குக் கீழே தோண்டியெடுக்கும் வேலை முடிக்கப்பட்டது. பொறியியல் சார்ந்த முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் தேவைப்பட்டது. ஏனென்றால் அந்த இடத்தின் ஒரு பக்கத்தில் சுரங்க நடைபாதை இருக்கிறது. அதற்கு எதிர்புறத்தில் காவற்கோபுர சங்கத்தின் ஒரு தொழிற்சாலை இருக்கிறது.
11 ஆறு மாதங்களுக்குள் அஸ்திபார வேலை முடிக்கப்பட்டது. தரை மட்டத்துக்குக் கீழே இருக்கும் இரண்டு மாடிகள் ஒரு சமயலறை, உணவு, சேமித்து வைக்கும் இடம், மற்ற சார்பு சேவைகள் மற்றும் ஆயிரம் நபர்கள் உட்காரும் அளவு உள்ள உணவறை ஆகியவற்றைக் கொண்டிருக்கும். கட்டிடத்தின் உருவரைச் சட்டத்தை உண்டாக்கும் மிகப்பெரிய இரும்பு தூண்களும், உத்தரங்களும் 70,00,000 பவுண்டுகளுக்கும் அதிகமான எடை உள்ளதாயிருக்கிறது. இந்தக் கட்டுமான வரைச் சட்டத்தை எழுப்புவதற்கான வேலை ஜூலை மாதத்தில் ஆரம்பமானது. செப்டம்பர் மாதத்துக்குள் செங்கல் கட்டுமான வேலை ஆரம்பிக்கப்பட்டது, விரைவில் கட்டிடத்தின் நிறமும், வடிவமும் புரூக்ளின் வானகப் பின்னணியில் ஒரு சிறப்பு அம்சமாக தோற்றமளிக்கும்.
12 சங்கத்தினால் அமர்த்தப்பட்டிருக்கும் தனியார் கட்டிட கம்பெனியின் வேலை அடுத்த கோடை காலத்தில் முடிந்துவிடும். 378-அடி உயரமுள்ள கட்டிடத்தின் தூண்கள் மற்றும் உத்தரங்களின் கட்டுமானம் சங்கத்துக்கு ஒப்படைக்கப்படும், பின்னர் மனமுவந்து செய்யும் சாட்சிகள் கட்டிடத்தை முடிப்பர். முகப்பு அறை, உணவறை, சமயலறை ஆகியவை உட்பட முதல் 12 மாடிகளும் 1993-ம் ஆண்டின் கடைசியில் உபயோகிப்பதற்குத் தயாராக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். புரூக்ளினில் கிடைக்கக்கூடிய எல்லா அறை வசதிகளும் நிரம்பிவிட்டிருப்பதால், இப்புதிய வீடு நம்முடைய வேதப்பூர்வ வேலையை நிறைவேற்றுவதற்கு மிகவும் தேவையாயிருக்கிறது.—மத். 24:14.
13 நீங்கள் என்ன செய்யலாம்?: ஏற்கெனவே சகோதரர்களும் சகோதரிகளும் அதிகத்தைச் செய்திருக்கின்றனர். கடந்த பல வருடங்களாக ஐக்கிய மாகாணங்கள் முழுவதிலிருந்தும் 14,000-க்கும் மேற்பட்ட வேலையாட்கள் நியு யார்க் நகரத்துக்கு வந்து பல்வேறு கட்டிட வேலைகளில் உதவி செய்திருக்கின்றனர். அவர்களுடைய அன்பான உழைப்புகள் வெகுவாகப் போற்றப்படுகிறது. அவர்களுக்கும் அவர்களுடைய மனைவிகளுக்கும் அவர்களுடைய முயற்சிகளை ஆதரித்த மற்ற குடும்ப அங்கத்தினர்களுக்கும் சங்கம் நன்றி சொல்கிறது. இப்போது கேள்வி என்னவென்றால், இப்படிப்பட்ட திட்டங்களில் வேலை செய்ய நீங்கள் முன்வருவீர்களா?—எபி. 13:16.
14 எல்லாருமே இதைச் செய்ய முடியாது என்பது தெளிவாக இருக்கிறது. ஆனால் நீங்கள் இன்னும் அதிகத்தைச் செய்யலாம். உதாரணமாக, ஒரு கட்டிட வேலையில் தற்காலிகமாக சில சகோதரர்கள் வேலை செய்யும்போது, அனேக மூப்பர்களும் உதவி ஊழியர்களும் சபையின் தேவைகளைக் கவனித்துக் கொள்வதற்கு உதவி செய்யலாம். (நெகேமியா 4:19-22-ஐ ஒப்பிடுங்கள்) செலவுகளைச் சமாளிப்பதற்கு மனமுவந்து கொடுக்கும் நன்கொடைகள் மூலம் உதவி செய்வது மற்றொரு முக்கிய வழியாகும். “புதிய [பாட்டர்சன்] வளாகம் கட்டி முடிக்கப்படும் போது அதனுடைய மதிப்பு 130 மில்லியன் டாலர்களாக இருக்கும்,” என்று தி நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒரு மதிப்பீடு சொல்கிறது. மனமுவந்து வேலை செய்யும் ஆட்களின் உதவியோடு அந்த வளாகத்தின் இறுதி செலவு அதில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு பாதிக்கும் குறைவாகவே ஒருவேளை இருக்கலாம், அப்படியிருந்தாலும் அது பெரிய தொகையாகவே இருக்கும். இப்போது ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான டாலர்கள் செலவு ஆகிறது.
15 மோசேயின் நாட்களில் ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்கும், சாலொமோனின் வழிநடத்துதலின் கீழ் கட்டப்பட்ட ஆலயத்துக்கும் பொருள் சம்பந்தமான செல்வம் தேவைப்பட்டது. தேவையான எல்லாவற்றையும் கொடுப்பதற்கு யெகோவா ஜனங்களின் இருதயத்தை ஏவினார். (யாத். 35:4-6, 21, 22; 36:3-6; 1 நாளா. 29:3-9) நம்முடைய நாட்களில் தனிப்பட்ட நபர்கள், சபைகள், வட்டாரங்கள், இப்படிப்பட்ட கட்டிட வேலைகளுக்கு நன்கொடை அளிக்கின்றன. உலக முழுவதும் ராஜ்ய அறிவிப்பை அதிகரிப்பதில் அவை ஒரு முக்கிய பாகத்தை வகிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்த மகத்தான அதிகரிப்பு வேலைக்கு ஆதரவு தருவதில் நீங்கள் பங்கு கொள்ள முடியுமா?
16 உங்களால் முடிந்தால், அப்படிப்பட்ட நன்கொடைகளைத் தயவுசெய்து சங்கத்துக்கு அனுப்பவும்: Watchtower Bible & Tract Society of India, Post Bag 10, Lonavla, Mah., 410 401.
17 கட்டிடம் கட்டும் இடங்களில் முன்வந்து வேலை செய்ய உங்களால் முடிகிறதோ அல்லது பொருளாதார வகையில் நன்கொடை அளிக்க முடிகிறதோ இல்லையோ, கடவுளுடைய ராஜ்ய அக்கறைகளில் உலகமெங்கும் விரிவாவதற்கு நாம் அனைவருமே ஜெபிக்கலாம். நம் பரலோக தகப்பனின் வேலையைச் செய்து முடிக்க நாம் முயலுகையில் அவர் நம் அனைவரையும் மென்மேலும் செழிக்கச் செய்வாராக.