கேள்விப் பெட்டி
◼ முழுக்காட்டுதல்களுக்கு ஆஜராபவர்கள் தங்கள் சந்தோஷத்தை எவ்வாறு வெளிக்காட்டலாம்?
முழுக்காட்டுதல் ஒரு சந்தோஷமான சமயம். புதியவர்கள் யெகோவா பக்கமாகத் தங்கள் நிலைநிற்கையை எடுப்பதைக் காண நாம் சந்தோஷப்படுகிறோம். அவர்கள் தங்கள் விசுவாசத்தை யாவரறிய வெளிக்காட்டுகின்றனர். (சங். 40:8) இது பரலோகங்களில் மிகுந்த சந்தோஷம் உண்டாவதற்குக் காரணமாயிருக்கிறது என்று இயேசு சொன்னார். (லூக். 15:10) முழுக்காட்டுதல் எடுப்பவர்களோடு படித்த பிரஸ்தாபிகளும், குடும்ப அங்கத்தினர்களும் புதியவர்கள் இந்த முக்கியமான படியை எடுப்பதைக் காண்பதற்கு விசேஷமாக சந்தோஷப்படுவர். ஆனால் இப்படிப்பட்ட சந்தோஷம் எவ்வாறு சரியான விதத்தில் வெளிக்காட்டப்படலாம்?
இயேசுவின் முழுக்காட்டுதல் இன்று கிறிஸ்தவ முழுக்காட்டுதல்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறது. இயேசு தான் எடுக்கப்போகும் படி கருத்தார்ந்ததும், பயபக்தியுமான ஒன்று என்பதை மதித்துணர்ந்து இருந்தார். அவர் முழுக்காட்டப்படுகையில் ஜெபித்துக் கொண்டிருந்தார். (லூக். 3:21, 22) முழுக்காட்டுதல் தியானத்துக்கும், அமைதியாக சிந்திப்பதற்குமான நேரம் என்பதை அவர் அறிந்திருந்தார். அவருடைய சீஷர்களும் கூட முழுக்காட்டுதலின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தனர். பொ.ச. 33-ன் பெற்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டதைத் தொடர்ந்து ஏறக்குறை 3,000 பேர் முழுக்காட்டப்பட்டனர். அந்தச் சம்பவத்தை நேரில் கண்ட சீஷர்களின் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது? “அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.” (அப். 2:41, 42) ஆவிக்குரிய காரியங்களின் பேரில் சீஷர்கள் சிந்தித்தனர், ஒருவரையொருவர் உபசரித்துக் கொண்டனர்.
நவீன கால கிறிஸ்தவ மாநாடுகளில் முழுக்காட்டுதல்கள் சிறப்பு அம்சங்களாக இருந்திருக்கின்றன. தனிப்பட்ட நபர்கள் யெகோவாவுக்காகத் தங்கள் நிலைநிற்கையை எடுப்பதை நாம் காணும்போது, கைதட்டுவதன் மூலமும் பாராட்டு தெரிவிப்பதன் மூலமும் நம்முடைய சந்தோஷத்தை வெளிக்காட்டுவது நிச்சயமாகவே சரியானதாயிருக்கிறது. மறுபட்சத்தில், கட்டுப்பாடற்ற மகிழ்ச்சிக் குரல் எழுப்புதல், விசில் அடித்தல், கைகளை உயர்த்தி ஆட்டுதல், யெர்களைச் சொல்லி அழைத்தல் போன்ற காரியங்கள் பொருத்தமற்றவையாய் இருக்கும். இப்படிப்பட்ட நடத்தை விசுவாசத்தின் இந்த வெளிக்காட்டுதலுக்குக் கருத்தார்ந்த தன்மை, பயபக்தி ஆகியவை குறைவுபடுவதைக் காண்பிக்கிறது. முழுக்காட்டுதல் எடுத்தவர்கள் தண்ணீரிலிருந்து வெளியே வருகையில், பகட்டாக எல்லாரும் காணும்படி பூக்கள் அல்லது மற்ற வெகுமதிகளைக் கொடுப்பது அந்தச் சமயத்தில் பொருத்தமானதாக இருக்காது. முழுக்காட்டுதல் இரட்சிப்புக்காகக் கிறிஸ்தவ ஓட்டத்தின் ஆரம்பத்தைக் குறிப்பிடுவதாய் இருக்கிறது. முழுக்காட்டுதல் அவர்களுக்காக யெகோவாவோடு திறந்து வைக்கும் நெருங்கிய உறவை அவர்கள் போற்றுவதற்கு உதவி செய்வதன் மூலம் முழுக்காட்டுதல் பெற்றவர்களுக்கு நாம் உற்சாகமூட்டுபவர்களாய் இருக்கலாம்.
கேலி செய்வது, விளையாடுவது, நீந்துவது அல்லது அந்த நிகழ்ச்சியின் கருத்தார்ந்த தன்மையைக் கெடுக்கும் நடத்தை போன்ற காரியங்களை முழுக்காட்டுதல் எடுக்கும் இடத்தில் செய்வது சரியானதல்ல. நம்முடைய சந்தோஷம் கண்ணியமான முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும். நம்முடைய ஒழுங்கும், கருத்தார்ந்த தன்மையும் ஆஜராயிருக்கும் அனைவரின் சந்தோஷத்துக்கும் பங்களிக்கும்.