ஜனவரி மாத ஊழியக் கூட்டங்கள்
ஜனவரி 6-ல் துவங்கும் வாரம்
பாட்டு 168 (84)
15 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். “ராஜ்ய ஊழியப் பள்ளி தேவராஜ்ய கல்வியை அளிக்கிறது.” வெளி ஊழியத்தில் சிறப்பித்துக் காண்பிப்பதற்குச்சமீபத்தில் வெளிவந்த பத்திரிகைகளிலிருந்து திட்டவட்டமான குறிப்புகளைக் குறிப்பிடுங்கள். சனிக்கிழமை பத்திரிகை ஊழியத்துக்கு ஆதரவு தரும்படி உற்சாகப்படுத்துங்கள்.
18 நிமி: “என்றும் வாழலாம் புத்தகத்தைக் கொண்டு மெய் ஞானத்தை அறிவியுங்கள்.” கேள்வி–பதில் கலந்தாலோசிப்பு. பிரசுரத்துடன் அறிமுகமாகியிருப்பதன் முக்கியத்துவத்தை அழுத்திக் காட்டுங்கள்.
12 நிமி: சபை தேவைகள் அல்லது “பாவமுள்ள மனச்சாய்வுகளை நீங்கள் மறுதலிக்கிறீர்களா? ஆங்கில காவற்கோபுரம் ஆகஸ்ட் 15, 1991, பக்கங்கள் 29-31 வரை உள்ள கட்டுரையின் பேரில் பேச்சு. (இந்திய மொழிகளில்: “முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்களாக தேவ பக்தியை நாடுங்கள்,” காவற்கோபுரம், ஜூலை 1, 1990)
பாட்டு 31 (3), முடிவு ஜெபம்.
ஜனவரி 13-ல் துவங்கும் வாரம்
பாட்டு 166 (90)
5 நிமி: சபை அறிவிப்புகள், தேவராஜ்ய செய்திகள்.
25 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—வீட்டுக்கு வீடு வேலையில் பல்வகை மாற்றங்களுடன்.” சபையாய்ப் பங்கெடுத்தலோடு ஒரு கலந்தாலோசிப்பாக கையாள வேண்டும். பாரா 4, 5-ஐ சிந்திக்கையில் எளிய, நேரடியான அணுகுமுறையை உபயோகித்து இரண்டு வித்தியாசமான முன்னுரைகளை நியாயங்கள் புத்தகத்திலிருந்தோ அல்லது காவற்கோபுரம், ஜூலை 15, 1988 பத்திரிகையிலிருந்தோ நடித்துக் காட்டுங்கள். உங்களுடைய உள்ளூர் பிராந்தியத்துக்கு நடைமுறையானதாக இருக்கும் முன்னுரைகளைத் தேர்ந்தெடுங்கள்.
15 நிமி: கேள்விப் பெட்டி. ஒரு மூப்பர் கையாள வேண்டும். முழுக்காட்டுதல்களின் போது நம்முடைய நடத்தைக்கு ஏன் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும், அது எவ்வாறு யெகோவாவின் பேரிலும், ராஜ்ய செய்தியின் பேரிலும் பிரதிபலிக்கிறது என்பதையும் அழுத்திக் காட்டுங்கள்.
பாட்டு 196 (16), முடிவு ஜெபம்.
ஜனவரி 20-ல் துவங்கும் வாரம்
பாட்டு 169 (32)
10 நிமி: சபை அறிவிப்புகளும் கணக்கு அறிக்கையும். அதோடுகூட சபையார் கொடுத்த நன்கொடைகளைச் சங்கம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கும் கடிதங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
20 நிமி: “யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாய் வைத்துக் கொள்ளுதல்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. நான்கு பேர்கள் அடங்கிய குடும்பத்தோடு நடிப்பு. 1992 காலண்டரை உபயோகித்து, பிப்ரவரி மாதத்தில் குடும்பத்தார் தங்கள் நேரத்தை அட்டவணையிடுவதைப் பற்றி தகப்பன் தன் குடும்பத்தோடு கலந்தாலோசிக்கிறார். வெளி ஊழியத்துக்கு எந்த நாட்களை ஒதுக்கி வைப்பது என்பதைப் பற்றியும், அவர் எவ்வாறு ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரோடும் வேலை செய்வார் என்பதைப் பற்றியும் அவர் சிந்திக்கிறார்.
15 நிமி: “பயனியர் ஊழியம்—மிகுந்த பலன்களைக் கொண்டுவரும் ஒரு சேவை.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. இரண்டு பயனியர்களைப் பேட்டி காணுங்கள். பயனியர் சேவை செய்ய ஆரம்பிப்பதற்கு என்ன தடங்கல்களை அவர்கள் மேற்கொள்ள வேண்டியதாயிருந்தது? பயனியர் சேவை செய்வதற்கு எது அவர்களை உந்துவித்தது? அவர்களுடைய பயனியர் சேவையை வெற்றிகரமானதாக்க எது அவர்களுக்கு உதவியிருக்கிறது? அனைவரும் தங்கள் சொந்த சூழ்நிலைமைகளை ஜெப சிந்தையுடன் சிந்திக்குமாறு உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 40 (31), முடிவு ஜெபம்.
ஜனவரி 27-ல் துவங்கும் வாரம்
பாட்டு 197 (22)
10 நிமி: சபை அறிவிப்புகள். தற்போதைய பத்திரிகைகளின் அளிப்புகளை நடித்துக் காட்டுங்கள்.
20 நிமி: “ராஜ்ய விஸ்தரிப்பில் பங்கு கொள்ளுதல்.” சேர்க்கை கட்டுரையில் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. குறிப்பாக பயனுள்ளதாக இருந்த சங்கத்தின் பிரசுரங்களைப் பற்றி சகோதரர்கள் போற்றுதல் தெரிவிக்கும் சுருக்கமான குறிப்புகளை இடையிடையே கொண்டிருங்கள். அல்லது வெளி ஊழியத்தின் பிரசுரங்கள் உபயோகித்ததைப் பற்றிய சுருக்கமான அனுபவங்கள் சொல்லும்படிச் செய்யலாம்.
15 நிமி: “உங்களுடைய அறிவெல்லைகளை விரிவாக்குவதற்கு வாசியுங்கள்.” தேவ-ராஜ்ய ஊழியப் பள்ளிக் கண்காணி கையாள வேண்டும். ஆங்கில விழித்தெழு! ஜூலை 22, 1991, பக்கங்கள் 25-7 வரை உள்ள விஷயங்களை அடிப்படையாகக் கொண்ட பேச்சு. சிறந்த வாசிப்பாளர்களாக ஆவதற்கான தேவையை அழுத்திக் காட்டுங்கள். சரளமாக வாசிக்க இயலுவது மட்டுமே போதுமானதல்ல என்பதைச் சபையார் மதித்துணரும்படி உதவி செய்யுங்கள்; புரிந்துகொள்ளும் திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். (இந்திய மொழிகளில்: “தேவனுடைய வார்த்தை சத்தியம்.” காவற்கோபுரம், நவம்பர் 1, 1990.)
பாட்டு 201 (102), முடிவு ஜெபம்.