அறிவிப்புகள்
▪ பிரசுர அளிப்புகள்: ஜூலை: பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? ரூ12-க்கு. (இந்திய மொழிகளில்: 192-பக்க பழைய புத்தகம் ஒன்று ரூ6.) ஆகஸ்ட்: புரோஷுரை உபயோகிக்கவும்: நம்முடைய பிரச்னைகள் அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? இது கிடைக்காத இடங்களில் பின்வரும் ஏதேனும் 32 பக்க புரோஷுரை உபயோகிக்கவும்: நீங்கள் திரித்துவத்தை நம்ப வேண்டுமா?, என்றென்றும் நிலைத்திருக்கும் தெய்வீக நாமம், பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், ஒவ்வொன்றும் ரூ3. செப்டம்பர்: என்றும் வாழலாம் புத்தகம் ரூ40-க்கு. (சிறிய அளவு ரூ20-க்கு.) அக்டோபர்: படைப்பு புத்தகம் ரூ40-க்கு. (சிறிய அளவு ரூ20-க்கு.) இது கிடைக்காவிட்டால் என்றும் வாழலாம் அல்லது பைபிள் கதை புத்தகம் உபயோகிக்கவும்.. நவம்பர்: விழித்தெழு! அல்லது/மற்றும் காவற்கோபுரம் சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் வெளியீடுகளுக்கு ஒரு வருட சந்தா ரூ60 மற்றும் ஆறு மாத சந்தா ரூ30. மாதாந்தர வெளியீடுகளுக்கு ஒரு வருட சந்தா ரூ30. மாதாந்தர வெளியீடுகளுக்கு ஆறு மாத சந்தா கிடையாது. குறிப்பு: மேற்குறிப்பிட்ட அளிப்புக்கான உருப்படிகளை ஆர்டர் செய்யாத சபைகள் அடுத்தமுறை பிரசுர ஆர்டர் படிவம் (S-14)-ல் அதை செய்யவேண்டும்.
▪ இந்த ஆண்டு மாநாடு மூன்று நாட்கள் நடைபெற இருப்பதால் மாநாட்டு வாரத்தின்போது சபைப் புத்தகப்படிப்பை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
▪ மாநாடு மற்றும் மழைகால மாதங்களில் வெளிஊழியத்தில் ஒழுங்காக பங்கு கொள்ள தனிப்பட்ட பிரஸ்தாபிகளும் குடும்பத்தொகுதிகளும் திட்டவட்டமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது முக்கியம். நீங்கள் மாத இறுதியில் உங்கள் சொந்த சபைக்கு வெளியே இருப்பீர்களென்றால் உங்கள் வெளிஊழிய அறிக்கை அந்த மாதத்திற்கான சபை அறிக்கையில் சேர்க்கப்படுவதற்கு, போதுமான காலத்திற்கு முன்பாகவே சபையின் காரியதரிசிக்கு அனுப்பி வைக்க நிச்சயமாயிருங்கள்.