பயனியர் சேவை—அன்பின் ஒரு வெளிக்காட்டு
1 பிரசங்க ஊழியத்தில் அதிக முழுமையாக பங்குகொள்ள யெகோவாவின் பேரிலும் நம்முடைய அயலான் பேரிலுமுள்ள அன்பே நம்மை உந்துவிக்கிறது. யெகோவாவுக்கும் மக்களுக்குமான நம்முடைய அன்பு வளரும்போது, ஊழியத்தில் இன்னும் அதிக பங்கைக் கொண்டிருக்க திட்டமிடும்படி நாம் தூண்டப்படுகிறோம். கடவுளுடைய வார்த்தையின் “திருத்தமான அறிவில்” அதிகரிக்கும்போது நம்முடைய அன்பு விரிவடைகிறது. (பிலிப். 1:9, 10, NW) யெகோவாவின் சித்தத்தை எவ்வளவு அதிகமாக நாம் கற்றுக் கொள்கிறோமோ அவ்வளவு அதிகம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலங்களின் அவசரத்தன்மையை போற்றுகிறோம். இது மற்றவர்களுக்கான நம்முடைய அக்கறையை தீவிரப்படுத்துகிறது. பயனியர் சேவையை ஏற்றுக் கொள்வதன் மூலம் தங்களுடைய அன்பான அக்கறையை அநேகர் வெளிப்படுத்துகின்றனர்.
2 துணைப்பயனியர் அல்லது ஒழுங்கான பயனியராவதற்கு தேவையான சரிப்படுத்தல்களை நீங்கள் செய்யக்கூடுமா? நாம் எல்லாரும் பயனியர் ஊழியம் செய்ய முடியாது என்பது ஒத்துக்கொள்ளப்படத்தக்கதே. ஆனால் ஜெபத்தோடு நாம் ஒவ்வொருவரும் அவரவருடைய சூழ்நிலைகளை ஆராய வேண்டும்.
3 தங்களுக்கு பயனியர் செய்ய அதிக ஓய்வுநேரம் இருப்பதாக வெகு சில கிறிஸ்தவர்களே காண்பதால் தேவையற்ற காரியங்களுக்கு தற்போது நாம் செலவிடும் நேரத்திலிருந்து ‘காலத்தை பிரயோஜனப்படுத்திக்கொள்ளும்படி, உபயோகிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. (எபே. 5:15-17) கடவுளிடமாகவும் மக்களிடமாகவும் நமக்கிருக்கும் அன்பு, நம்முடைய அன்பை அதிக முழுமையாக வெளிப்படுத்தும் பொருட்டு நம்முடைய தனிப்பட்ட விருப்பங்களையும் செளகரியங்களையும் தியாகம் செய்ய மனமுள்ளவர்களாக இருக்கும்படி செய்விக்கிறது. (மாற்கு 12:33) நாம் முயன்றுபெறும் அநேக காரியங்கள் ஒருவேளை இயல்பானதாக தோன்றினாலும் உலகின் மற்ற பாகங்களில் அது ஆடம்பரமானதாக கருதப்படலாம்.
4 கடவுள் பக்திக்குரிய வழியில் பிள்ளைகள் சிந்திக்க அவர்களுக்கு உதவிசெய்ய பெற்றோர் என்ன செய்யலாம்? இளவயதிலிருந்தே பிள்ளைகளுக்கு முன்பாக தேவராஜ்ய இலக்குகளை பெற்றோர் வைக்கவேண்டும். பள்ளிப்படிப்பை முடிக்கும் தருவாயை அவர்கள் நெருங்குகையில், உலகப்பிரகாரமான இலக்குகளை அல்லது ஆவிக்குரிய இலக்குகளை எதை அவர்கள் சிந்திக்கிறார்கள்? இளவயதிலேயே பயனியர் சேவையில் பிரவேசிப்பதனால் வரும் நிரந்தரமான பலன்களை நம் இளைஞர்கள் காண நாம் உதவி செய்ய விரும்புகிறோம். இது பரலோகத்தில் பொக்கிஷத்தை சேர்த்து வைப்பதாகும். (மத். 6:19-21) அது கடவுளை மகிழ்வூட்டுகிறது மற்றும் அவருக்கான நம்முடைய உண்மைப்பற்றுறுதி மற்றும் பக்திக்கான அத்தாட்சியைக் கொடுக்கிறது. மேலும் அது மற்றவர்களின் ஜீவனைப் பாதுகாக்கிறது.
5 ‘எல்லா மனிதரும் இரட்சிக்கப்பட வேண்டு’மென்பது கடவுளுடைய சித்தமாக இருக்கிறது. (1 தீமோ. 2:4) இது நம்முடைய சித்தமாகவும் கூட இருக்கிறது என்று நாம் காண்பிக்க முடியுமா? ராஜ்ய அக்கறைகளை முதலிடத்தில் வைக்க மனமுள்ளவர்களாக நாம் இருந்தால் முடியும். வாழ்க்கைக்கு வேண்டிய இன்றியமையாதவற்றை யெகோவா கொடுப்பார் என்ற நம்பிக்கை கொண்டிருப்பதனாலும்கூட இதை நாம் செய்யக்கூடும். (மத். 6:31-33) பொருளாதார நிலைமை மோசமடையலாம், ஆனால் நம்மை கவனித்து கொள்வதைப்பற்றிய யெகோவாவின் வாக்கு ஒருபோதும் மாறாது.—சங். 37:25.
6 நம்முடைய சூழ்நிலைகள் அனுமதிக்கும் அளவுக்கு வெளிஊழியத்தில் பங்குகொள்ள நம்மை முயற்சியில் ஈடுபடுத்துவது அன்பின் ஒரு வெளிக்காட்டாக இருக்கிறது. சிலருக்கு இது ஓர் ஒழுங்கான பயனியராக இருப்பதைக் குறிக்கலாம். செப்டம்பர், 1, 1992-ல் துவங்குவதற்கு நீங்கள் ஏன் உங்களால் செய்யக்கூடிய அனைத்தையும் செய்யக்கூடாது?