பயனியர் சேவை செய்வதன் மூலம் யெகோவாவின் மீது நம்பிக்கையை வெளிக்காட்டுதல்
1 ராஜ்ய அக்கறைகளை முதலிடத்தில் வைப்பதற்கு யெகோவாவின் பேரில் நம்பிக்கை தேவைப்படுகிறது. (சங். 56:11; நீதி. 3:5; மத். 6:33) உலகம் எதை முக்கியத்துவமாக கருதுகிறதோ அதனிடமிருந்து நாம் நமது மனதைத் திருப்பி ஆவிக்குரிய மதிப்பீடுகளின்பேரில் நமது சிந்தனையை ஒருமுகப்படுத்த வேண்டும். உலகம் பொருள் சம்பந்தமான காரியங்கள் பேரில் கவர்ச்சியை உண்டுபண்ணுகையில், யெகோவா தேவன் நாம் மெய்யாகவே மிக முக்கியமான காரியங்களுடன் திருப்தியாக இருக்கும்படி நம்மை பரிவோடு கேட்கிறார்.—1 தீமோ. 6:8; பிலி. 1:10.
2 இது முக்கியமாக யெகோவாவின் கட்டளைகளை அதிக பொறுப்புணர்ச்சியோடு கருத விரும்பும் கிறிஸ்தவ இளைஞருக்கு ஒரு சவாலாக இருக்கிறது. அவர்கள் தங்கள் ஆசிரியராலும் பள்ளியிலுள்ள தங்கள் சகாக்களாலும் வாழ்க்கையின் வெற்றிக்கு உயர் கல்வியே முக்கியமானது என்று நினைக்கக்கூடியவர்களால் வற்புறுத்தப்படக்கூடும். பொருளாதார தேவைகள் தங்களுக்கு இருக்கிறது என்பதை மதித்துணர்ந்தவர்களாய் அநேக கிறிஸ்தவ இளைஞர்கள் இப்படிப்பட்ட அழுத்தங்களை ஞானமாக எதிர்த்து பயனியர் ஊழியத்தை தங்கள் வாழ்க்கைப் பணியாக தெரிந்துகொள்கின்றனர். யெகோவாவினுடைய வாக்குறுதிகளின் பேரில் நம்பிக்கையுள்ளவர்களாய், தங்கள் தேவைகளை பராமரிக்கும்படி அவரை எதிர்நோக்கியிருக்கின்றனர்.—சங். 62:2; 68:19; 1 தீமோ. 5:8; 6:9, 10.
தனிப்பட்ட சூழ்நிலைமைகளை மறு ஆய்வுசெய்யுங்கள்
3 நவம்பர் 15, 1982 காவற்கோபுரம் (ஆங்கிலம்), நாம் ஒவ்வொருவரும் பின்வருமாறு கேட்டுக்கொள்ள வேண்டும் என்று உற்சாகப்படுத்தியது: “நான் ஏன் ஒரு பயனியராக பணியாற்றவில்லை என்ற உண்மைக்கு யெகோவாவுக்கு முன்பாக உண்மையிலேயே சரியான காரணங்காட்ட முடியுமா?” தெளிவாகவே அந்தச் சமயத்தில், அநேகர் பயனியர் செய்யும் சூழ்நிலையில் இருக்கவில்லை, ஆனால் முழு இருதயத்தோடுகூடிய சேவையின் அளவு எவ்வளவாக இருந்தபோதிலும் அது யெகோவா தேவனால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதே என்பதை அறிந்தவர்களாய் அவர்கள் அதற்காக சோர்வடையவில்லை. (மீகா 6:8; 2 கொரி. 8:12) பின்பு, தனிப்பட்ட சூழ்நிலைமைகள் மாறியப்போது, 1982-ம் ஆண்டு ஆங்கில காவற்கோபுர கட்டுரையை ஜெப சிந்தையோடு மறு ஆய்வுச் செய்ததன் காரணமாக அதிக சமீபத்தில் ஒழுங்கான பயனியர் சேவையை மேற்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான நபர்களோடு சேர்ந்துகொள்வதற்கு இவர்கள் உதவப்பட்டிருக்கிறார்கள்.
4 மேற்சொல்லப்பட்ட வார்த்தைகள் 1982-ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டபோது உங்களுடைய தனிப்பட்ட சூழ்நிலை பயனியர் சேவையில் ஈடுபடுவதை தடை செய்திருக்குமானால் இப்பொழுது உங்களுடைய சூழ்நிலை மாறியிருக்கிறதா? கடந்த ஆண்டு ஐக்கிய மாகாணங்களில் 17,000 பயனியர் விண்ணப்ப நமுனாக்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது! இந்த விண்ணப்பதாரர்கள் சந்தேகமின்றி இதற்கு முன்பே பயனியர் சேவை செய்ய விரும்பினர், ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையில் ஒரு மாற்றத்துக்காக அவர்கள் காத்திருந்தார்கள்.
5 சிலருடைய காரியத்தில் பயனியர் சேவையைக் குறித்து அவர்களுடைய மனநிலையில் மாற்றம் செய்ய வேண்டியதாக இருக்கலாம், அல்லது ஊழியத்துக்காக ஒரு நல்ல அட்டவணை தயாரிப்பதை உட்படுத்தலாம். பயனியர் சேவைக்காக வழிதிறப்பதற்கு சில சமயங்களில் தனிப்பட்ட உத்தரவாதங்களிலும் கடமைகளிலும் மாற்றம் தேவையாக இருக்கலாம். ஆகையால் இதை யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபத்தில் தெரிவிக்கும் ஒரு காரியமாக ஆக்கிக்கொள்ளுங்கள். அத்துடன் நம்மையும் மற்றும் நமது சூழ்நிலைமைகளையும் நேர்மையாக சீர்தூக்கி பார்த்துக்கொள்ள வேண்டும். ஆயிரக்கணக்கானோர் அப்படி செய்து இப்பொழுது பயனியர் சேவையின் ஆசீர்வாதங்களில் களிகூருகிறார்கள்.
6 உங்களுடைய சூழ்நிலைமைகளை குறித்து நீங்கள் செய்யும் நேர்மையான மதிப்பீடு சமீப எதிர்காலத்தில் நீங்கள் பயனியர் சேவையைத் துவங்க முடியும் என்று காட்டுமானால், ஏன் நீங்கள் இப்பொழுதே தொடர்ச்சியான துணைப்பயனியர் சேவை செய்ய துவங்கக்கூடாது? ஒருசில மாதங்களுக்குள்ளாக நீங்கள் பெரும்பாலும் மறுசந்திப்புகளையும் பைபிள் படிப்புகளையும் துவங்குவீர்கள். இது ஒருவேளை புதிய ஊழிய ஆண்டு ஆரம்பிக்கும் முன்பே ஒழுங்கான பயனியர் சேவையை எளிதாக துவங்குவதற்கு உங்களுக்கு உதவி செய்யும்.
7 இந்தத் தற்போதைய துன்மார்க்க ஒழுங்குமுறையின் கடைசி நாட்களில் யெகோவா பெரிய காரியங்களை நடப்பித்துக் கொண்டிருக்கிறார். நாம் அனைவரும் அவரிடம் நெருங்கி வருவதற்கும் மற்றும் “நாள் முழுவதும்” அவருடைய நாமத்தைத் துதிப்பதற்கும் இதுவே காலம். (சங். 145:2; யாக். 4:8) உங்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலைமை உங்களை அனுமதிக்குமானால் மற்றும் நீங்கள் தகுதி பெறுவீர்களானால் யெகோவாவின் பேரிலுள்ள உங்கள் நம்பிக்கையை காண்பிப்பதற்கு பயனியர் சேவை மற்றொரு சான்றாக இருக்கட்டும்.—சங். 94:18.