அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள்: அக்டோபர்: படைப்பு புத்தகம் ரூ40-க்கு. (சிறிய அளவு ரூ20.) கிடைக்காவிடில், என்றும் வாழலாம் அல்லது பைபிள் கதை புத்தகத்தை பயன்படுத்தவும். நவம்பர்: விழித்தெழு! மற்றும்/அல்லது காவற்கோபுரம் சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் வெளியீடுகளுக்கு ஒரு முழு ஆண்டு சந்தா ரூ60 மற்றும் ஆறு மாத சந்தா ரூ30. மாதாந்தர வெளியீடுகளுக்கு ஒரு முழு ஆண்டு சந்தா ரூ30. மாதாந்தர வெளியீடுகளுக்கு ஆறு மாத சந்தா கிடையாது. டிசம்பர்: புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளும் பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? என்ற ஆங்கில புத்தகமும் சேர்த்து ரூ60-க்கு. (இந்திய மொழியில் அளிப்பு: விசேஷ விலையில் பழைய பிரசுரங்கள்.) ஜனவரி 1993: மிகப் பெரிய மனிதர் புத்தகம் ரூ40-க்கு. கிடைக்காவிடில், பைபிள் கதை புத்தகத்தையோ என்றும் வாழலாம் புத்தகத்தையோ பயன்படுத்தவும். பிப்ரவரி: பழைய 192 பக்க புத்தகங்களின் விசேஷ அளிப்பு ஒவ்வொன்றும் ரூ6-க்கு.
◼ வட்டார ஊழியருடைய சந்திப்பிற்கு பிறகு S-2b படிவத்தில் மூப்பர் அல்லது உதவி ஊழியர் சிபாரிசுகள் அல்லது நீக்கங்கள் இருந்தாலொழிய சங்கம் அந்தப் படிவத்தை இனி சபைகளுக்கு திரும்பவும் அனுப்பிவைக்காது. சபை கோப்பில் தற்போது இருக்கும் S-2b படிவம்தானே சபையில் சேவிப்பவர்களுடைய சமீபத்திய பட்டியலாக கருதப்படும். புது சிபாரிசுகளோ நீக்கங்களோ இருந்தால்மட்டுமே சங்கம் பின் பக்கத்தில் தேதியிட்ட உவாட்ச் டவர் சங்கத்தின் முத்திரையோடு S-2b படிவத்தை திரும்ப அனுப்புவார்கள்.
◼ இந்தியாவில் செப்டம்பர் 1, 1992 முதல் மூன்று புதிய வட்டாரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன; கேரளத்தில் ஏழாவது வட்டாரம் செயல்பட ஆரம்பித்திருக்கிறது, மேலும் ஆந்திரப்பிரதேசத்திலும் கர்நாடகத்திலும் இரண்டாவது வட்டாரங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, இந்த நாட்டில் இருபது வட்டாரங்கள் இப்போது இருக்கின்றன, இதில் ஐந்து ‘எ,’ ‘பி’ என்ற பிரிவுகளை கொண்டிருக்கின்றன. சுமார் 375 சபைகளிலும் இப்போது பதிவாகியுள்ள 75 தனிப்பட்ட தொகுதிகளிலும் உள்ள சகோதரர்களை இருபத்தொன்று வட்டார ஊழியர் சேவிப்பர். ஒவ்வொன்றும் சுமார் வருடத்துக்கு இருமுறை சந்திக்கப்படுவதை நிச்சயப்படுத்திக்கொள்வர். 1993 ஊழிய வருடத்தின்போது நடைபெறவிருக்கும் இருபத்தாறு வட்டார அசெம்பிளிகளில் ஒரு முழுநேர மாவட்ட ஊழியரும் ஒரு பகுதிநேர மாவட்ட ஊழியரும் சேவிப்பர். இந்த ஏற்பாடுகள் சகோதரர்களுக்கு நற்பயனளித்து, சபைகளை பலப்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்.—அப். 16:5.
◼ நவம்பரில் துணைப் பயனியர் ஊழியம் செய்ய திட்டமிடும் பிரஸ்தாபிகள் தங்கள் விண்ணப்பங்களை முன்கூட்டியே கொடுக்க வேண்டும். இது பிரசுரங்களுக்கும் பிராந்தியத்திற்கும் தேவையான ஏற்பாடுகளை செய்ய மூப்பர்களை அனுமதிக்கும்.
◼ சபை நீக்கம் செய்யப்பட்ட அல்லது தொடர்பறுத்துக்கொண்ட நபர்கள் யாராகிலும் திரும்ப நிலைநாட்டப்படுவதற்கு விரும்பினால் அதன் சம்பந்தமாக ஏப்ரல் 15, 1991, உவாட்ச்டவர்-ல் பக்கங்கள் 21-3-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனையை பின்பற்றும்படி மூப்பர்கள் நினைப்பூட்டப்படுகின்றனர்.
◼ வெளி ஊழிய மணிநேரங்களை அறிக்கை செய்வதில் என்ன சேர்க்கப்படலாம் என்பதன்பேரில் நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல்-ல் பக்கங்கள் 103-4-ல் ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது. பொதுப் பேச்சுக் கொடுக்கும் பேச்சாளருக்கு மொழிபெயர்க்கும் பிரஸ்தாபி அந்த நேரத்தை தன் ஊழிய அறிக்கையில் சேர்த்துக்கொள்ளலாமா என்று சிலர் சந்தேகித்திருக்கின்றனர். ஆம், பேச்சாளரும் மொழிபெயர்ப்பாளரும் தங்கள் வெளி ஊழிய அறிக்கையில் அதற்கு செலவிடப்படும் நேரத்தை சேர்த்துக்கொள்ளலாம்.
◼ நவம்பர் முதற்கொண்டு இந்திய மொழி நம் ராஜ்ய ஊழியம் பிரதிகளில், குறிப்பிட்ட சில மாதங்களில், நாங்கள் வித்தியாசப்பட்ட பிரசுர அளிப்புகளை கொடுப்போம். அந்த மொழியில் கிடைக்கக்கூடிய பிரசுரத்தை கருத்தில்கொண்டு இது செய்யப்படும். அந்த விசேஷ பிரசுர அளிப்பு தொடங்குவதற்கு அதிமுன்னதாகவே அந்தக் குறிப்பிட்ட பிரசுரத்தை சபைகள் ஆர்டர் செய்து பெறுவதற்கு இந்த அளிப்புகள் வெகு முன்பாக கொடுக்கப்படும். அந்த விசேஷ பிரசுர அளிப்பு ஆர்டரானது போதுமான நேரத்திற்குள்ளாக செய்யப்படுவதை, பிரசுர அளிப்பின் மாத தொடக்கத்தில் கையிருப்பிலிருக்க ஊழியக் கண்காணிகள் பார்த்துக்கொள்ள வேண்டும். பிரஸ்தாபிகள் தனிப்பட்ட ஆர்டர்களை அனுப்பக்கூடாது. எந்தப் பிரசுரங்களும் தேவைப்பட்டால் அவற்றை சபையின் மூலம் ஆர்டர் செய்ய வேண்டும்.
◼ ஒவ்வொரு சபையும் அதன் முழு பிராந்தியத்திற்கும் தனிப்பட்ட வரைபடங்களை உண்டுபண்ணி வைத்து, இந்த வரைபடங்களை உபயோகிப்பதை நாங்கள் விரும்புகிறோம். இதன் காரணமாக ஒவ்வொரு சபைக்கும் பிராந்திய வரைபட கார்டுகளையும் (S-12) அவற்றின் பிளாஸ்டிக் ஹோல்டர்களையும் மேலும் பிராந்திய நியமிப்பு பதிவு கார்டையும் (S-13) நாங்கள் அனுப்புகிறோம். இந்தப் படிவங்கள் கூடுதலாக தேவைப்பட்டால் நீங்கள் பிற்பாடு இவற்றை ஆர்டர் செய்து எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். இந்தப் படிவங்களை எப்படி பயன்படுத்துவது என்று விளக்கிக்கூறும் ஒரு கடிதமும் இதோடு சேர்ந்து வரும். சபை ஊழிய ஆலோசனைக்குழுக்களும், விசேஷமாக ஊழியக் கண்காணியும் பிராந்தியத்தை கையாளும் சகோதரரும் இதன்பேரில் உடனடியாக வேலைசெய்யும்படி நாங்கள் விரும்புகிறோம். முதற்படியானது உங்களுடைய பிராந்தியத்தினுடைய நல்ல சாலை வரைபடம் ஒன்றையும், பிராந்தியத்திற்குள் இருக்கும் அஞ்சல் அலுவலகங்களின் பட்டியலையும் பெறுவதாகும். உங்களுடைய பிராந்திய எல்லைகளைக் குறித்து நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும், தேவைப்பட்டால், பக்கத்திலிருக்கும் சபை(கள்) மூப்பகளின் உதவியைப் பெற்று காரியத்தை கலந்துபேசுவதன் மூலம் அதைச் செய்யலாம். நாங்கள் அனுப்பும் கூடுதலான ஆலோசனைகளை நீங்கள் பின்பற்றுவதை இது எளிதாக்கும்.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
ஒரியா: யெகோவாவின் சாட்சிகள் நம்புவதென்ன? (துண்டுப்பிரதி எண் 14); சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை (துண்டுப்பிரதி எண் 15); மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? (துண்டுப்பிரதி எண் 16). சிந்தி: நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?