அக்கறையை மறுபடியும் தூண்டிவிடமுடியுமா?
1 “தங்களுடைய ஆவிக்குரிய தேவையின்பேரில் உணர்வுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்.” (மத். 5:3, NW) மலைப் பிரசங்கத்தில் இயேசு சொன்ன அந்த வார்த்தைகள் கருத்து நிறைந்தவையாயிருக்கின்றன. மனிதரில் பெரும்பான்மையர், தங்களுடைய வாழ்க்கையை சந்தோஷமாயும் நோக்கமுள்ளதாயும் இருக்கச்செய்வதற்கு ஆவிக்குரிய காரியங்கள் அவர்களுக்கு தேவையாயிருக்கிறது என்பதை உணராமலிருக்கின்றனர். முன்பு ஆவிக்குரிய தேவைகளின்பேரில் உணர்வுள்ளவர்களாயிருந்து பின்னர் அதை இழந்துவிட்டவர்களும் இருக்கின்றனர். ஆவிக்குரிய விஷயங்களில் ஏதோவொரு காரியம் அவர்களை அனல்குறையச் செய்திருக்கிறது. உண்மையில் அவர்களுடைய நன்மைக்காகவே இருக்கிற காரியத்திலிருந்து அவர்கள் விலகிவிட்டிருக்கிறார்கள். கேள்வியானது, அப்படிப்பட்டவர்களின் அக்கறையை மறுபடியும் தூண்ட முடியுமா? சந்தோஷகரமாக, சிலருடைய விஷயத்தில் அவ்வாறு முடிகிறது.
2 பல ஆண்டுகளுக்கு முன்பாக, ஒருவேளை சிறுவர்களாயிருந்தபோதே, யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படித்து, கடவுளுடைய ஜனங்களோடு தொடர்ந்து கூட்டுறவுகொண்டிராத ஒரு நபரை ஒருவேளை நீங்கள் அறிந்திருக்கலாம். என்றபோதிலும், சில பைபிள் போதனைகளும் நீதியான நியமங்களும் அவருடைய மனதில் பதிந்திருக்கக்கூடும், அவற்றை அவர் நினைவில் வைத்திருக்கவுங்கூடும். உலக நிலைமைகள் மோசமாகி, வாழ்க்கையின் சூழ்நிலைமைகளும் மாறும்போது, அந்த நபர் முன்பு கற்றுக்கொண்ட காரியங்களை நினைவுபடுத்தி, கடவுளிடம் அவர் திரும்பி, அதிகமாக பைபிள் அறிவைப்பெற மனமுள்ளவராகக்கூடும். பைபிள் படிப்பை புதுப்பிக்கும் நோக்கத்தோடு அப்படிப்பட்ட நபர்களை சென்று சந்திப்பது அதிக பலன்தருவதாயிருக்கும்.
3 நிச்சயமாகவே, ஞாபகார்த்த ஆசரிப்புக்கு வந்தவர்களை சென்று சந்திப்பதற்கு அவ்வப்போது முயற்சியெடுக்கப்பட வேண்டும். அவர்களுடைய ஆவிக்குரிய நலனில் நீங்கள் உண்மையில் அக்கறையுடையவர்களாக இருந்து, அவர்களோடு பைபிள் படிக்க விரும்புகிறீர்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். “ஒளி கொண்டுசெல்வோர்” மாவட்ட மாநாட்டிற்கு ஆஜராகும் ஆட்களுக்கு உதவிசெய்ய விசேஷ முயற்சியெடுக்கப்பட வேண்டும். சிலருடைய விஷயத்தில் முன்னேற்றம் செய்யாமையின் காரணமாக படிப்பு தொடரப்படாமலிருக்கிற நபரை மற்றொரு பிரஸ்தாபி சென்று சந்திப்பது பயனுள்ளதாயிருக்கும்.
4 நிச்சயமாகவே, நாம் படிப்பு நடத்தும் ஆட்கள் யெகோவாவுடைய வணக்கத்தை முக்கியமாய் கருதி, தங்களுடைய பைபிள் படிப்பில் ஓரளவு ஊக்கத்தை காட்டவேண்டும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நம்முடைய பங்கில், நாம் மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கு போதுமான முயற்சியை செய்தோம் என்றும், “எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேன்,” என்று சொன்னபோது அப்போஸ்தலன் பவுல் எவ்வாறு உணர்ந்தாரோ அதேபோல நாமும் மற்றவர்களிடமாக உணர வேண்டும்.—அப். 20:27.