ஆண்கள் தகுதிபெற நாடி தகுதிபெறுவதற்கு உதவுதல்
1 இந்த ஆண்டு ஜூலை 9 மற்றும் 10-ம் தேதிகளில் இந்தியாவிலுள்ள எல்லா பயணக்கண்காணிகளுடனும் லோனாவ்லாவில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. இவர்களில் இருபத்தாறு சகோதரர்களும் பெத்தேலிலுள்ள சேவை இலாகாவில் பணிபுரியும் நான்கு சகோதரர்களும் ஆஜராயிருந்தனர். இந்திய கிளை அலுவலக ஆலோசனைக்குழுவில் பணிபுரியும் மூன்று சதோதரர்களும், இந்த வருடம் மே முதல் ஜூலை வரையான மூன்று மாதங்கள் இடைக்கால கிளை அலுவலக ஆலோசனைக்குழுவின் ஒத்திசைவிப்பவராக பணிபுரிந்த ஆஸ்திரேலிய கிளை அலுவலக ஒத்திசைவிப்பவரான சகோதரர் V. மோரிட்ஸ்-ம் போதனையாளராய் சேவித்தனர்.
2 அங்கு கலந்தாலோசிக்கப்பட்ட அநேக பொருள்களில் ஒன்று, சகோதரர்கள் சபைகளில் பெரிய உத்தரவாதங்களை ஏற்க தகுதிபெற நாடி தகுதிபெறுவதற்கு உதவிசெய்வதற்கான தேவையாகும். மனிதரால் நடப்பட்டு, தண்ணீர் பாய்ச்சப்பட்ட விதைகளை தேவன் விளையச் செய்வதைக்குறித்து பவுல் 1 கொரிந்தியர் 3:6-ல் கூறினார். இந்த வசனம் முக்கியமாக சீஷராக்கும் வேலைக்குப் பொருந்தினாலும், அதே நியமம் சபைக்கு உள்ளேயும் பொருந்துகிறது. யெகோவாவுடன் ஓர் அங்கீகரிக்கப்பட்ட உறவிற்குள் வருவதற்கு செம்மறி ஆடுகளைப் போன்ற ஆட்களுக்கு மனிதரின் உதவியும் யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பின் உதவியும் தேவைப்படுகிறது. அதேவிதமாக, சபையிலுள்ள சகோதரர்களுக்கும் ஊழிய சிலாக்கியங்களுக்கு தகுதிபெற உதவி தேவைப்படுகிறது.
3 நீங்கள் உதவிசெய்யக்கூடிய வழிகளுக்கு விழிப்புடனிருங்கள்: ஒருவர் கண்காணிப்பு வேலைக்கு தகுதிபெற நாடுகிறாறென்றால், இது ஒரு “போற்றத்தக்க இலட்சியம்.” (1 தீமோ. 3:1, பிலிப்ஸ்) ஏற்கெனவே மூப்பராக சேவிப்பவர்கள் சபையிலுள்ள புதிய மற்றும் இளம் சகோதரர்களின் உள்ளாற்றலை தெரிந்து, அவர்கள் தகுதிபெறுவதற்கு உதவிசெய்து உற்சாகப்படுத்த வேண்டும். அவர்கள் காத்திருந்து, இளைய சகோதரர்கள் எந்த உதவியும் இல்லாமல் தாங்களாக முன்னேற வேண்டுமென எதிர்பார்க்கக்கூடாது. உங்களுடைய சபையில் அத்தகைய சகோதரர்கள் தகுதிபெற நாடுவதற்கு உதவிசெய்ய நீங்கள் அதிகத்தை செய்யமுடியுமா?
4 மூப்பர்களுக்கும் உதவி ஊழியர்களுக்குமான தகுதிகளைக் குறிப்பிட்ட பின்னர், 1 தீமோத்தேயு 3-ம் அதிகாரம் 10-ம் வசனம் ‘தகுதிக்காக முன்னதாக சோதிக்கப்பட்ட’வர்களை தேர்ந்தெடுப்பதுபற்றி பேசுகிறது. இது வெறுமென மூப்பர்கள் “ஆர அமர்ந்து” மற்ற சகோதரர்களுடைய நடத்தையை பரிசோதனை செய்வதை அர்த்தப்படுத்துகிறதில்லை. நல்ல நிலைநிற்கையிலுள்ள சகோதரர்கள் எல்லாரும் அவர்கள் நேர்மையாக செய்கிறார்களா என்பதைப் பார்ப்பதற்காக வேலைகளில் நியமிக்கப்படலாம். அவர்கள் தங்களுக்கென்று தனிப்பட்ட இலக்குகளை வைக்க உதவிசெய்யப்படலாம்: ஒரு வேதப்படிப்பை நடத்த, துணை அல்லது ஒழுங்கான பயனியர் சேவை செய்ய, முழு பைபிளையும் வாசிக்க மற்றும் இவை போன்றவை. பின்னர் மூப்பர்கள் அவர்களுடைய முன்னேற்றத்தையும் அவர்கள் ‘தகுதி’யையும் விமர்சிக்கலாம். வட்டாரக் கண்காணியோடு கூடிய அவர்களுடைய கூட்டத்தில், மூப்பர்கள் சபையிலுள்ள ஒவ்வொரு வயதுவந்த ஆணையும் பற்றி, அவர் சிலாக்கியங்களுக்கு தகுதிபெறுகிறாரா என்பதை யோசித்து, அவ்வாறில்லையென்றால் அதற்காக அவருக்கு எவ்வாறு உதவிசெய்யலாம் என்பதை யோசிக்கவேண்டும்.
5 சகோதரர்கள் முன்னேறும்போது, ஒரு பொதுப் பேச்சாளராக, உதவி ஊழியர் அல்லது மூப்பராக இருக்கும் சிலாக்கியங்கள் தேவையின்றி அவர்களுக்கு கொடுக்கப்படாமலிராதபடி கவனம் செலுத்தவேண்டும். மூப்பர்கள் அவர்களுடைய தகுதிகளை விமர்சிக்கும்போது அவர்கள் பரிபூரணத்திற்காக நோக்கவில்லை, ஏனென்றால், உண்மையில் நம்மில் ஒருவரும் பரிபூரணமாக இல்லை. (சங். 130:3) அந்தச் சகோதரரின் மொத்த வாழ்க்கை முறையானது வேதவாக்கியங்களுக்கு ஒத்திசைவாக இருப்பதையும் அவர் எந்தச் சிலாக்கியத்திற்கு கருதப்படுகிறாரோ அதற்கு தேவையான ஓரளவான திறமைகளையும் தகுதிகளையும் அனுபவத்தையும் கொண்டிருக்கிறாரா என்பதையும் பார்க்கவே விரும்புகின்றனர். தெளிவாகவே, இது வேதப்பூர்வ தகுதிகளை எவ்விதத்திலும் புறக்கணிப்பதை அர்த்தப்படுத்துவதில்லை.
6 தங்களுடைய பிற்பட்ட இருபதுகளில் இருக்கும், சில வருடங்களாக உதவி ஊழியராக சேவித்துக் கொண்டிருக்கும் சகோதரர்கள் மூப்பர்களாக சிபாரிசு செய்யப்படுவதிலிருந்து தேவையின்றி தடுக்கப்படக் கூடாது. சிலநேரங்களில் ஒரு சகோதரர் ஓர் உதவி ஊழியராகவும் உதவி மூப்பராகவும் உத்தமமாக பல வருடங்களுக்கு சேவித்து, தகுதியற்றிருப்பதற்கு எந்த முக்கிய காரணத்தையும் கொண்டிராதபோதும் ஒரு மூப்பராவதற்கு ஒருபோதும் சிபாரிசு செய்யப்படாமலிருப்பதை நாம் பார்க்கிறோம். அவ்விதமான ஆட்கள் வளருவதைப் பார்க்க நாம் விரும்புகிறோம். அவர்கள் வளர உதவி செய்யுங்கள். அவர்களுக்கு அதிகமான உத்தரவாதங்களைக் கொடுங்கள்; அவற்றை அவர்கள் நியாயமான அளவு நல்ல முறையில் செய்து முடித்தால், அவர்கள் மேலுமதிக சிலாக்கியங்களுக்கு சிபாரிசு செய்யப்படலாம். சபைகளில் அதிக தகுதிவாய்ந்த சகோதரர்களை சேவிப்பதற்கு கொண்டிருத்தல் பயன்களையும் அதிகரிப்பையுமே கொண்டு வரமுடியும், இது முறையாக யெகோவாவின் பெயருக்கு மகிமையைக் கொண்டுவரும்.—சங். 107:32.