சிருஷ்டிப்பின் தேவனை துதித்தல்
1 கண்ணுக்கினிய இயற்கைக்காட்சிகள், பலவர்ணமிக்க சூரிய அஸ்தமனங்கள், நட்சத்திரங்கள் நிறைந்த இரவு வானங்கள், பறவைகளின் இன்னிசைப் பாடல்கள்—இப்படிப்பட்ட மகிழ்ச்சிகரமான காரியங்களுக்கெல்லாம் யாருக்கு கனத்தைக் கொடுப்பீர்கள்? ஆம், நாம் சிருஷ்டிப்பின் தேவனை துதிப்பதற்குத் தூண்டப்படுகிறோம். வெளிப்படுத்துதல் 4:11-ல் உள்ள அறிவிப்பை நாம் முழுஇருதயத்தோடு ஒத்துக்கொள்கிறோம். அவர் எல்லாவற்றையும் படைத்ததன் காரணத்திற்காக, யெகோவா தேவன் நம்முடைய துதிக்குப் பாத்திரராய் இருக்கிறார்.
2 தேவனுடைய படைப்பின் வேலைப்பாடுகளின் சான்றுகள் இருந்தபோதிலும், உயிர் தற்செயலாகவோ அல்லது குருட்டுத்தனமான பரிணாமத்தினாலோ வந்தது என்ற நம்பிக்கையை மனிதர்கள் ஊக்குவித்திருக்கிறார்கள். இந்தப் பிரமாண்டமான பொய், மனிதர்களை தரக்குறைவாகவும் ஒழுக்கங்கெட்டும் போகச்செய்திருக்கிறது, மேலும் இது நம்முடைய மகத்தான சிருஷ்டிகரின் மீதான தேவதூஷணபழியாகும்.—பிர. 12:1; ரோ. 1:20, 25.
3 அக்டோபரில், யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களாக நாம் நம்முடைய சிருஷ்டிகர் மற்றும் அவருடைய அற்புதமானப் படைப்புகளைப் பற்றிய சத்தியத்தை எடுத்துச்சொல்லும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம். உயிரின் ஆரம்பத்தையும் வாழ்க்கையின் நோக்கத்தையும் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கு மெய்யான ஆர்வத்தை வெளிக்காட்டும் அனைவருக்கும் உயிர்—அது இங்கு எப்படி வந்தது? பரிணாமத்தின் மூலமா அல்லது படைப்பின் மூலமா? என்ற புத்தகம் அளிக்கப்படும். உயிரின் ஆரம்பத்தைப் பற்றிய சத்தியத்தைத் தைரியமாக ஆதரித்துப் பேச நம்மை இந்தப் பிரசுரம் தயார்நிலையில் வைக்கிறது.
4 விசேஷித்த பிராந்தியங்கள்: வீட்டிற்கு வீடு ஊழியத்தில் பிரசங்கிப்பதோடு, பரிணாமம் அல்லது படைப்பு போன்ற விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வத்தைக் காட்டும் நபர்களோடு அவர்களுடைய வேலைப்பார்க்கும் இடத்திலோ அல்லது பள்ளியிலோ சந்தித்துப் பேசுவதற்கு நாம் விசேஷித்த முயற்சியை எடுக்கலாம். உதாரணமாக, இளம் சாட்சிகள் தங்களுடைய பள்ளி ஆசிரியர்களிடம் படைப்பு புத்தகத்தைக் காண்பித்த பொழுது அதை அளிப்பதில் நல்ல வெற்றியைக் கண்டடைந்தனர். ஓர் இளம் சாட்சி ஒரு படைப்பு புத்தகத்தை அவளுடைய ஆசிரியரிடம் கொடுத்தாள், அந்த ஆசிரியர் அதை முழுமையாகப் படித்ததோடு மட்டுமல்லாமல் வகுப்பில் பாடங்கள் எடுப்பதற்கு ஓர் அடிப்படையாக அதைப் பயன்படுத்தவும் ஆரம்பித்த போது அவள் ஆச்சரியமடைந்தாள். (w90 9/1 பக். 32; w86 10/1 பக். 32) இந்த அருமையான பிரசுரத்தைப் படித்து அனுபவிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிற உங்களுடைய ஆசிரியர்கள் அல்லது சக பள்ளி வகுப்பினர் ஒவ்வொருவரையும் ஏன் அணுகக் கூடாது.
5 உங்கள் பிராந்தியங்களில் வாழ்கிற அல்லது வேலைச் செய்கிற கல்லூரி மாணவர்களையும் கல்விஅளிப்பவர்களையும் கண்டடைவதற்கு ஒரு விசேஷித்த முயற்சி எடுக்கப்படலாம். வழக்கறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் போன்ற வேலைப் பார்ப்பவர்கள், படைப்பு புத்தகத்திலுள்ள ஆராய்ச்சியின் ஆழத்தையும் ஆதாரக் குறிப்புகளையும் மிகவும் போற்றியிருக்கிறார்கள். (yb87 பக். 54) நீங்கள் அணுகும் நபர்கள் அழகான படங்கள் அடங்கிய இந்தப் பிரசுரத்தை ஒரு மேற்கோள் நூலாக வைத்துக்கொள்ளவும்கூட விரும்புவார்கள்.
6 ஞானமாகவே, படைப்பு புத்தகத்தை நாம் சந்திக்கிற அனைவரிடமும் கொடுக்கப்போவதில்லை, ஏனென்றால் பலருக்கு இந்தத் தலைப்பில் கொஞ்சம்கூட ஆர்வம் இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு பத்திரிகைகள் அல்லது அவர்களைக் கவரக்கூடும் என்பதாக நீங்கள் நினைக்கும் வேறுஏதேனும் பிரசுரங்கள் கொடுக்கப்படலாம். ஆனால் கல்விபுகட்டக்கூடிய மற்றும் ஒரு சிருஷ்டிகரில் விசுவாசம் வளர்க்கக்கூடிய ஒன்று அல்லது பல குறிப்புகளை இந்தப் புத்தகத்திலிருந்து எடுத்துக் கலந்துபேசுகையில் இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள விரும்பும் நேர்மையான மனதுடைய ஆட்களை நீங்கள் காண முடியும். இப்படிப்பட்டவர்களுக்கே நாம் இந்தப் படைப்பு புத்தகத்தைக் கொடுக்க விரும்புகிறோம்.
7 இந்த மேன்மையானக் கருவி இன்னும் அநேகருக்கு பரிணாமம் எப்படி பொருத்தமற்றதாக இருக்கிறது என்பதை உணரச்செய்வது மட்டுமல்லாமல் உயிராகிய பரிசைப் போற்றுவதற்கும் அவர்களுக்கு உதவிசெய்யட்டும். இந்தப் புத்தகம், உயிரைக் கொடுத்தவருக்கும் “வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவரு”க்கும் மகிமை கொண்டுவரும் விதத்தில் என்றென்றைக்கும் வாழக்கூடிய ஆசையை அவர்களில் தூண்டிவிடும்.—சங். 146:6.