நம்முடைய மகத்தான சிருஷ்டிகரை மதித்துணருவதற்கு மற்றவர்களுக்கு உதவுங்கள்
1. நம்மைச் சுற்றியுள்ள சிருஷ்டிப்பை நாம் கவனிக்கையில் ஒரு சிருஷ்டிகர் இருக்கிறார் மற்றும் அவர் நம்முடைய எதிர்காலத்தில் அதிக அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதைக் குறித்து நம்முடைய எதிர்காலத்தில் அதிக அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதைக் குறித்து நம்முடைய மனங்களில் எவ்வித சந்தேகமுமில்லை. (ரோமர் 1:20) உயிர்—அது இங்கு எப்படி வந்தது? பரிணாமத்தின் மூலமாக அல்லது படைப்பின் மூலமா? என்ற இந்தப் புத்தகம் சிருஷ்டிகர் பேரில் மதித்துணர்வை கூர்மையாக்கும் கருவியாக இருந்து வந்திருக்கிறது. உயிர் எப்படி வந்தது என்பதைப்பற்றி மற்றவர்களுக்கு விளக்கம் கொடுப்பதற்கும் நமக்கு உதவியிருக்கிறது.
2. இந்தப் புத்தகத்தை வாசித்தப் பின்பு விஞ்ஞான பிண்ணனியிலுள்ள ஒரு நபர். உயிரின் பேரில் மதித்துணர்வை உண்டுபண்ணக்கூடிய தான் இதுவரையில் வாசித்திராத மிகச் சிறந்த ஒரு புத்தகம் என்று வருணித்தார். ஒரு கல்லூரி பேராசிரியர் குறிப்பிட்டதாவது: படைப்பைக் குறித்து அவ்வளவு நன்றாக அளிக்கப்பட்ட நியாயவிவாதத்தை நான் முன்பு ஒருபோதும் பார்த்தது இல்லை!” நம்முடைய மகத்தான சிருஷ்டிகராகிய யெகோவா தேவனை அநேகர் மதித்துணர்வதற்கு உதவுவதில் படைப்பு புத்தகமானது மிகச் சிறந்த ஒரு கருவியாக இருந்து வந்திருக்கிறது.
எல்லாப் பொருத்தமான வாய்ப்புகளையும் அனுகூலப்படுத்திக் கொள்ளுங்கள்
3. அக்டோபர் மாதத்தின்போது நாம் இந்தப் புத்தகத்தை வெளிஊழியத்தில் அளிப்பதற்கான சிலாக்கியத்தை மறுபடியும் கொண்டிருப்போம். நம்முடைய வழக்கமான வீட்டுக்கு வீடு ஊழியத்தோடுகூட தெரு ஊழியத்திலும் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கையிலும் நம் படைப்பு புத்தகத்தை அளிக்கலாம். நாம் உடன் வேலையாட்களிடமும் பள்ளித் தோழர்களிடமும் உறவினர்களிடமும் மற்றும் சந்திக்க நேரிடும் மற்ற ஆட்களிடமும் அதை அளிக்கலாம். நீங்கள் பைபிள் படிப்பு நடத்தும் ஆளிடம் ஒரு பிரதி இருக்கிறதா? அப்படி இல்லை என்றால் ஏன் அவர் ஒரு பிரதியை பெற்றுக்கொள்ளும்படி செய்யக்கூடாது? நீங்கள் ஒரு பத்திரிகை மார்க்கத்தை கொண்டிருக்கிறீர்களா? ஒரு வேளை இந்த ஆட்கள் ஒரு பிரதியை கொண்டிருக்க விரும்பக்கூடும். இந்த மாதம் படைப்பு புத்தகத்தை அளிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
4. அநேக இளைஞர் படைப்பு புத்தகத்தை பள்ளியில் அளிப்பதில் வெற்றி கண்டிருக்கின்றனர். பள்ளிக்கு இந்தப் புத்தகத்தின் பிரதி ஒன்றா எடுத்துச் செல்வதற்கு நீங்கள் முயற்சி செய்திருக்கிறீர்களா? அறிந்து கொள்வதற்கான ஆர்வமுள்ள ஆட்கள் கேள்விகளை கேட்கையில் அவர்களிடம் சாட்சிகொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை நீங்கள் கொண்டிருப்பீர்கள். கல்லூரி வளாகத்திற்கு சற்று வெளியே தெரு ஊழியம் செய்வதில் அநேக பிரஸ்தாபிகள் வெற்றி கண்டிருக்கின்றனர். மேலும் அந்த மாணவர்களோடு நல்ல சம்பாஷணை செய்ய முடிந்திருக்கிறது.
சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளைப் பயன்படுத்துங்கள்
5. படைப்பு புத்தக அளிப்பானது சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளுடன் நன்கு இணைந்து செல்லுகிறது. “உயிரளிப்பவரை தொழுதுகொள்ளுங்கள்.” இந்தப் புத்தகத்தை அளிக்கையில் நீங்கள் பின்வருமாறு சொல்லாம்: “உயிர் எப்படி ஆரம்பித்தது என்பதை அறிந்துகொள்வதில் அநேக ஆட்கள் ஆர்வமுள்ளவர்களாக இருக்கின்றனர். இதைக் குறித்து நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] உயிரின் ஆரம்பத்தைக் குறித்து அநேக வித்தியாசப்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன. நாம் பைபிளின் நியாயமான விளக்கத்தை கவனிப்போம். [எபிரெயர் 3:4-ஐ வாசிக்கவும்] ஆகவே நியாயப்படி இன்று நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கட்டடத்திற்கும் வீட்டிற்கும் ஒரு திட்ட அமைப்பாளன் மற்றும் ஒரு கட்டுபவன் இருந்திருக்கிறான். ஆக, தெளிவாகவே, அதிக சிக்கலான இந்தப் பிரபஞ்சமும் ஒரு சிருஷ்டிகரை கொண்டிருந்திருக்க வேண்டும். எபிரெயர் 3:4-ன்படி அந்தச் சிருஷ்டிகரே கடவுள். ஆனால் இந்த உண்மையின் அறிவு எந்த விதத்தில் நம்மை பாதிக்க வேண்டும்? [வெளிப்படுத்துதல் 4:11-ஐ வாசிக்கவும்.] ஆகவே இன்னும் காலமிருக்கும்போதே சிருஷ்டிகருடைய சித்தத்தைக் குறித்து கற்றுக்கொள்வதும் நம்முடைய வாழ்க்கையை அதற்கிசைவாக அமைத்துக் கொள்வதுமே செய்யப்பட வேண்டிய ஞானமுள்ள செயலாக இருக்கிறது.” அதன் பின்பு மனிதன் இங்கு எப்படி வந்தான் என்பதைப் பற்றியும் நம்முடைய சிருஷ்டிகருக்குக் கீழ்படிதல் எப்படி நம்மை நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் என்பதைப் பற்றியும் இந்தப் புத்தகம் காண்பிக்கும் என்று சுட்டிக்காட்டி புத்தகத்தை அளியுங்கள்.
6. பரிணாமத்தைப்பற்றிய மற்றும் படைப்பைப்பற்றிய சத்தியத்தை விளக்கக்கூடிய அழகிய சித்தரிப்புகளைக் கொண்ட 256-பக்க இந்தப் புத்தக ஏட்டைக் கொண்டிருப்பதற்கு ஆ! நாம் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம்! என்றாலும், பிரதானமாக இந்தப் புத்தகம் நம்முடைய மகத்தான சிருஷ்டிகரைக் கனப்படுத்துகிறது உயிர் இங்கு எப்படி வந்தது, நம்முடைய நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவதற்கான யெகோவாவின் மகத்தான நோக்கம் மேலும் ராஜ்யத்தின் மூலம் மனிதவர்க்கத்தை ஆசீர்வதிப்பதற்கான அவருடைய வாக்குறுதி உதவுவதன் மூலம் அப்படி செய்கிறது.