அக்கறையைத் தூண்டும் அளிப்புகள்
1 வெளிஊழியத்தில் சந்திக்கும் ஜனங்கள் மீது எப்போதும் நாம் ஓர் அனலான, தனிப்பட்ட அக்கறையைக் காண்பிக்கவேண்டும். காரியங்களின் பேரில் அவர்களுடைய கருத்து என்ன என்று கேட்பது அவர்களுடைய நோக்குநிலைக்கு நம்முடைய மதிப்பை காண்பிக்கிறது. நாம் அறிமுகப்படுத்தும் பொருள், எழுப்பும்கேள்விகள் அவர்களை சிந்திக்கத் தூண்டுவதோடு, தேவனைப் பற்றியும் மனிதகுலத்திற்கான அவருடைய நோக்கத்தைப் பற்றியும் இன்னும் அதிகமான காரியங்களை கற்றுக்கொள்ளும்படிச் செய்கிறது.
2 அக்டோபர் மாதத்தில் நாம் உயிர்—அது இங்கு எப்படி வந்தது? பரிணாமத்தின் மூலமா அல்லது படைப்பின் மூலமா? என்ற புத்தகத்தை அளிக்கும்போது சிருஷ்டிப்பைப் பற்றிய சத்தியத்திற்கு கவனத்தைச் செலுத்திக்கொண்டிருப்போம். தனிப்பட்ட விதமாக இந்தப் பிரசுரத்தை மறுபடியும் படித்துப்பார்ப்பதற்கு நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். உயர்த்திக் காண்பிக்க திட்டவட்டமான குறிப்புகளைத் தெரிந்து கொள்ளுங்கள். படைப்பு புத்தகத்திலுள்ள தகவலைக் கலந்துபேசும்போது, அதைத் திறந்து வீட்டுக்காரர் கையில் கொடுங்கள். திட்டவட்டமான தலைப்புகளையும் படங்களையும் எடுத்துக் காண்பியுங்கள். இந்தக் கவர்ச்சிகரமான பிரசுரத்தின் மதிப்பை எடுத்துக்காண்பிப்பதில் மிகவும் உற்சாகமாகச் செயல்படுங்கள்.
3 உங்களை அனலானவிதத்தில் அறிமுகப்படுத்தியப் பிறகு, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “இந்த நவீன, விஞ்ஞான உலகத்தில், நம்மையும் நாம் வாழும் இந்த அழகான பூமியையும் படைத்த தேவன் ஒருவர் இருக்கிறார் என்று நம்புவது நியாயமானதாக தோன்றுகிறதா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] பூமி மற்றும் சர்வலோகத்தின் பரப்பளவையும் அதிசயங்களையும் கவனிக்கும் பொழுது, அதனுடைய ஒழுங்கும் வடிவமைப்பும் நம்மைக் கவர்ந்துவிடுகிறது. இது ஒரு சிருஷ்டிகர் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தவில்லையா? இந்த விஷயத்தில் பைபிளின் காரணவிளக்கத்தைக் கவனியுங்கள். [எபிரெயர் 3:4-ஜ வாசிக்கவும்.] நியாயமாகவே, ஒவ்வொரு கட்டிடமும் ஒரு வடிவமைப்பாளரையும் கட்டுபவரையும் உடையதாக இருந்தது. [படைப்பு புத்தகத்தை எடுத்து பக்கம் 114-ல் உள்ள படத்திற்கு திருப்பவும்.] நம்முடைய பிரபஞ்சம் பிரமிக்கத்தக்கதாய் இருக்கிறது! இது தானாக வந்திருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்களா?” பின்பு பக்கம் 122-க்கு திருப்பி, கடிகாரம் படவிளக்கத்தை வாசியுங்கள். பக்கம் 127-ல் உள்ள படமும் மேற்கோள் காட்டப்பட்ட வசனமும்கூட பயன்படுத்தப்படலாம். இன்னும் கூடுதலான பயனுள்ள குறிப்புகள் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் பக்கங்கள் 84-8-ல் காணப்படலாம்.
4 அல்லது நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “பூமியில் மெய்ச் சமாதானம் மற்றும் சந்தோஷத்தைக் காண்பதற்கு மனிதகுலத்திற்கு என்ன தேவையாக இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] நாம் தேவனுக்குப் பயந்து வானத்திற்கும் பூமிக்கும் சிருஷ்டிகராக அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பைபிள் சொல்கிறது.” வெளிப்படுத்துதல் 14:7-ஐ வாசிக்கவும், பின்பு, பூமி மனித குடியிருப்புக்கே வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று விளக்குகிற 140 மற்றும் 141 பக்கங்களுக்கு படைப்பு புத்தகத்தைத் திறந்து, ஒருவேளை பத்திகள் 24 மற்றும் 25-ஐ வாசிக்கலாம். வீட்டுக்காரரின் ஆர்வம் தொடர்ந்துபேச அனுமதித்தால், 19-வது அதிகாரத்திற்கு திருப்பி, பூமிக்குரிய பரதீஸ் சீக்கிரத்தில் எப்படி நிஜமாகிவிடும் என்பதை விளக்கவும்.
5 வீட்டுக்காரர், சிருஷ்டிகர் ஒருவர் இருக்கிறார் என்பதைப் பற்றி சந்தேகங்களை எழுப்பினால், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “உங்களுடைய எண்ணங்களை, விசேஷமாக இந்த உலகத்திலுள்ள எல்லா பிரச்னைகளின் காரணமாக, அநேகர் உடையவராயிருக்கின்றனர். ஒரு கடவுள் இருக்கிறார் என்றால், அவர் ஏன் துன்பங்களை அனுமதிக்க வேண்டும்? ஏதேனும் ஒரு நியாயமான விளக்கத்தை நீங்கள் நினைவில் கொண்டுவர முடிகிறதா?” சம்பாஷணையைத் தொடர்வதற்கு, பிரதிபலிப்பைப் பொருத்து படைப்பு புத்தகத்தில் அதிகாரம் 16-ஐ பயன்படுத்தி தொடர்ந்து ஒருவேளை நீங்கள் பேசக்கூடும். அல்லது குறைந்த அளவு ஆர்வத்தோடு அவர் செவிசாய்க்கிறார் என்றால், செப்டம்பர் 15, 1992 ஆங்கில காவற்கோபுரம் பிரதியில் உள்ள “நல்ல மக்கள் ஏன் துன்பப்படுகிறார்கள்?” என்ற கட்டுரையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு முக்கியமான குறிப்புகளை வெறுமென எடுத்துச்சொல்லுங்கள். இந்தக் கேள்விக்கு உதவியாக இருக்கும் கூடுதலான பதில்களை நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் பக்கங்கள் 399-400-களில் காணலாம். சில சமயங்களில் நீங்கள் ஏன் பைபிளை நம்பவேண்டும் என்ற துண்டுப்பிரதியை விட்டு வருவது பொருத்தமாக இருக்கலாம்.
6 நம்முடைய நோக்கமானது வெறுமென ராஜ்ய செய்தியில் ஆர்வத்தைத் தூண்டுவது மட்டுமல்ல, ஆனால் பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதும் ஆகும். படைப்பைப் பற்றிய சத்தியத்தை விளக்கி, நம்முடைய மகத்தான சிருஷ்டிகரைக் கனப்படுத்தும் இந்தக் கண்ணைக்கவரும் படங்களுடைய புத்தகத்தைக் கொண்டிருப்பதில் நாம் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம்! அக்டோபர் மாதத்தில் நாம் சந்திக்கும் நேர்மையான இருதயமுள்ள ஜனங்களின் ஆர்வத்தைத் தூண்டுவதற்கு இதை நல்ல விதமாக பயன்படுத்துவோமாக.